#BiggBoss Day 21: கமலுக்கு பிடித்த முத்தக்காட்சி!

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2018 04:47 pm

what-happened-in-biggboss-day-21

வரம்பு மீறும் பிக்பாஸ் போட்டியாளர்கள்... நிகழ்ச்சியை நிறுத்த சேப்பாக்கத்தில் ப்ளா... ப்ளா.. அமைப்பினர் போராட்டம். விரைவில் இந்த தலைப்புடன் பல செய்திகளை பார்க்க நேரிடலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிலரது நடவடிக்கைகள் வரம்பு மீறி உள்ளதா அல்லது காலத்தின் மாற்றமா? கமல் என்ன சொல்கிறார்.

நாட்டாமை நேற்று செம ஸ்டைலாக இருந்தார். அவர் உடைக்காக நிறைய உழைப்பை போட்டிருந்தது தெரிந்தது. கமலுக்கு அந்த உடை அத்தனை கச்சிதம். நிகழ்ச்சியை தொடங்கியதும் வேறு எதையும் பேசி நேரத்தை கழிக்காமல் போட்டியாளர்களிடம் பேசினார் கமல். போட்டியாளர்களும் கமலின் தோற்றத்தை பாராட்டினர். அப்போது உங்க வாட்ச் நல்லா இருக்கு என்ன டைம் என்று சென்றாயன் கேட்டார். அதற்கு கமல் கொடுத்த ரியாக்ஷன்... அச்சோ க்யூட்..

பின் ஆண்கள், பெண்களை தனித்தனியாக அமர வைத்து பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பொருட்கள் குறித்து கேள்விகளை கேட்டார். இதில் பெண்கள் அறையில் இருக்கும் பட்டாம்பூச்சி ஸ்டிக்கர்கள், போர்வைகள் குறித்த கேள்விகளுக்கு மகத் சரியாக பதில் சொன்னதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

பின் ஆம், இல்லை என்ற அட்டைகள் கொடுக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும், தனித்தனியாக கேள்விகள் கேட்கப்பட்டது. முதலாவதாக மகத்திடம் நாம் எதிர்பார்த்த கேள்வி, உங்கள் நடவடிக்கைகள் மற்ற போட்டியாளர்களின் முகம் சுழிக்கும் படி இருக்கிறதா என்று கேட்டார் கமல். அதற்கு அனைவரும் ஆம் என்றார்கள். மகத்ததின் பதிலும் அதுவே. அப்படியிருந்தும் அவர் தனது தவறை ஏற்றுக்கொள்வதாக  தெரியவில்லை.  அவர் செய்வது சரி தவறு என்பதை தாண்டி ஒரு வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர் மீறிக்கொண்டே இருக்கிறார். அடுத்தடுத்து கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த டாஸ்க்கினால் வரும் நாட்களில் வீட்டில் பல பிரச்னைகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

அடுத்ததாக மற்ற போட்டியாளர்கள் போல நடித்த காட்ட வேண்டும் என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. இதில் டேனியும், ரித்விகாவும் அசத்தலாக நடித்துக்காட்டினர். குறிப்பாக டேனி மகத் போல நடித்ததும், ரித்விகா வைஷ்ணவி போல நடித்ததும் வாவ்!

எவிக்ஷன் படலம் தொடங்கியது. நாமினேட் செய்யப்பட்ட ஒவ்வொருவரும் மற்ற போட்டியாளர்களுக்கு தாங்கள் கூற விரும்புவது பற்றி பேசினர். பாலாஜி தனது கருத்தை கூறிவிட்டு அகம் டிவி முன் வந்து கமலுக்கு முத்தம் கொடுத்தார். உடனே எனக்கு இந்த முத்தக்காட்சியும் பிடிக்கும் என்றார் கமல்.

பொன்னம்பலம், வீட்டில் சிலர் வரம்பு மீறி நடந்து கொள்கின்றனர். தமிழ் கலாச்சாரம் முக்கியம் என்று கூறினார். தான் பேச இருந்ததை பொன்னம்பலம் திருடி பேசிவிட்டதாக கூறினார் கமல். பின் மக்களிடன் குறைந்த மதிப்பெண்களை பெற்று அனந்த் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். வீட்டில் இருந்தவர்கள் சரிசமமாக இருவருக்கும் ஆதரவு அளித்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து எவிக்‌ஷன் யார் என்பதுற்கான கவரைப் பிரித்துக் காண்பித்தார் கமல். அதில் அனந்த் பெயர் இருந்தது. உடன், அனந்தை புறப்படும்படி கமல் கூறினார். மேலும், புறப்படுவதற்கு முன்பாக அவருக்கு ஒரு அதிகாரத்தைத் தருவதாகவும் கூறினார். அதாவது, ஒருவரை சிறையில் அடைக்கும் அதிகாரத்தை அவருக்கு அளித்தார். 

பொன்னம்பலத்தின் பெண்கள் குறித்த கருத்தை காரணம் காட்டி அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்றார் அனந்த். பின் பெண்கள் அதனையெல்லாம் மீறி வர வேண்டும். பெண் என்றால் தாய், அவளுக்கு எல்லாம் தெரியும் என்றார். அவர் கருத்துக்கு வீட்டில் அமோக ஆதரவு இருந்தது. யாஷிக்காவும், ஐஸ்வர்யாவும் எழுந்து காலில் விழுந்து நன்றி தெரிவித்தனர். டேனி விசில் அடித்தார். பொன்னம்பலம் பேசியது தவறாகவே இருந்தாலும், அனந்த் பேசியதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை.

பின் அனந்த் வீட்டை விட்டு பல அழுகை காட்சிகளுக்கு பிறகு வெளியே வந்தார். கமலுடனான உரையாடலில் அனந்த் பேசியது எல்லாம் தத்துவங்கள் தான். இதனை பிக்பாஸ் போட்டியாளர்களும், பார்வையாளர்களும் கூட நிச்சயம் மிஸ் பண்ணுவார்கள். பின் ஒவ்வொரு போட்டியாளர்கள் குறித்தும் அவர் ஒரு வார்த்தையில் கருத்து தெரிவித்தார்.

அவரை அனுப்பி வைத்த பிறகு கமல் மீண்டும் போட்டியாளர்களிடம் பேசினார். பொன்னம்பலத்தை சிறையில் அடைக்க வேண்டும் என்ற அனந்தின் கருத்தில் தனக்கு வேறுபாடு இருப்பதாகவும் அது ஏன் என்றும் விளக்கினார் கமல்.

அனந்த் சில விஷயங்கள் நடக்கும் போது தூங்கிவிட்டார். பொன்னம்பலம் முழித்திருந்தார். இது தான் விழித்திருத்தல் என்பது என்றார் கமல். பொன்னம்பலம் மேல் இருக்கும் தவறு குறித்து ரம்யா விளக்கினார். மேலும் பொன்னம்பலம் ஐஸ்வர்யாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்று தவறான தகவலை கூறினார். அவரைக் குறிக்கிட்டு பொன்னம்பலம் மன்னிப்பு கேட்டதை நான் பார்த்தேன் என்றார் கமல். இதை ஐஸ்வர்யாவும் ஒப்புக்கொண்டார். என்னதான் இருந்தாலும், பொன்னம்பலத்திற்கு கமலின் ஆதரவு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது.

பின் மும்தாஜ் தனது கருத்தை கூற வாய்த்திருக்க வேண்டாம். அந்த பிரச்னை குறித்து பேசவே வேண்டாம் என்றார் கமல். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தங்களுக்கு கொடுத்த வாய்ப்பை போட்டியாளர்கள்  சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று கூறினார் கமல்.  தான் கதாநாயகனாக அறிமுகம் ஆன காலத்தில் இப்படி கோடிக் கணக்கான மக்களை சென்று அடையும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பல முயற்சிக்குப் பிறகு, கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினேன். ஒரே ஆண்டில் பல பட வாய்ப்புக்கள் குவிந்தன.

நல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருக்கிறோம். நான் உள்பட.... ஆனால், இதை நீங்கள் யாரும் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை என்று நச்சென்று சொன்னார். கிடைத்த வாய்ப்பைப் பயன்படத்திக்கொள்ள வேண்டும், பிக்பாஸ் வீட்டுக்கு என்று விதிமுறைகள் உள்ளன இதை பின்பற்ற வேண்டும் என்று ஸ்டிரிக்ட் ஆஃபிசர் தோரணையில் சொன்னார். அப்போது யாஷிகா, ஐஸ்வர்யா முகத்தில் ஈயாடவில்லை.

சரிதான்.. ஆனால் கமல் சில விஷயங்கள் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்துவிடுகிறார். அவர் முடிவுக்கு பின் சரியான காரணம் இருக்கும் பட்சத்தில் அதனை ஏற்றுக்கொள்ளலாம். இன்றைய நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக நாளை நிறைய சண்டைகள் நடக்கவிருப்பது போன்ற காட்சிகள் காட்டப்படுகின்றன. பொறுத்தது போதும் பொங்கி எழு என பிக்பாஸ் வேலையை தொடங்கி இருக்கிறார்.

பிக்பாஸ் 2 : றிமுக நாள்  I முதல் நாள்   I  2ம் நாள்   I   3ம் நாள்   I   4ம் நாள்   I   5ம் நாள்  I   6ம் நாள்  I   7ம் நாள்  I  8ம் நாள் I 9ம் நாள்  I

10ம் நாள்   I   11ம் நாள் I   12ம் நாள்   I  14ம் நாள்   I   15ம் நாள்   I   16ம் நாள்   I   17ம் நாள்   I   18ம் நாள்   I   19ம் நாள்   I   20ம் நாள்

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.