ஐஸ்வர்யாவுடன் சண்டை போடும் பொன்னம்பலம் - பிக்பாஸ் ப்ரோமோ 1

  திஷா   | Last Modified : 09 Jul, 2018 12:36 pm
bigg-boss-promo-1

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இரண்டாவது போட்டியாளரும் வெளியேறி விட்டார். மமதி, ஆனந்த் வைத்தியநாதன் வெளியேறிய பிறகு தற்போது அந்த வீட்டில் 14 போட்டியாளர்கள் உள்ளனர். இப்போது இந்நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. சிறையில் இருக்கும் பொன்னம்பலம், 'என் பெட்ல உக்காந்து ஏன் பேசுறீங்கன்னு' கேட்கிறார். 

அதற்கு ஐஸ்வர்யாவும் பதில் கொடுத்துப் பேச இருவருக்கும் வாக்கு வாதம் நடக்கிறது. 'நீங்க டி.வி-ல என்ன சொல்லிருக்கீங்க, என்ன நடந்துச்சுன்னு நான் சொல்லட்டுமான்னு தானே, இப்போ சொல்லுங்க என்ன நடந்துச்சு' என யாஷிகாவும் கோபமாகிறார். இறுதியில் கையில் இருக்கும் துணியை தூக்கி வீசி பொன்னம்பலத்திடம் மிகவும் கோபத்துடன் கேள்வி கேட்கிறார் ஐஸ்வர்யா.

ப்ரோமோவை பார்க்கும் போது விஷயம் கொஞ்சம் சீரியஸாக இருப்பது போல் தான் தோன்றுகிறது. என்ன நடக்கிறது என்று இரவு பார்ப்போம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close