பிக்பாஸ் சீசன் 2 எப்படி இருக்கு.. மக்கள் கருத்து என்ன?

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2018 12:17 pm
people-s-opinion-about-biggboss-season-2

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 2 பற்றி தங்களின் கருத்து என்ன என்று மக்களின் கேட்டது நியூஸ்டிஎம் குழு..

'இதெல்லாம் நம்ம ஊருக்கு சரிப்பட்டு வராதுப்பா' என்று பல எதிர்ப்பு குரல்களோடு கடந்தாண்டு தொடங்கியது பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி. ஆனால் நாட்கள் ஆக ஆக யாரும் எதிர்பார்க்காத வெற்றியை அந்த நிகழ்ச்சி அடைந்தது. ஓவியா-ஆரவ் காதல், காயத்ரி - ஜூலி சண்டை என கடந்த சீசன் ஹிட்டடிக்க பல காரணங்கள் இருந்தன. அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு மேலும் ஒரு காரணம் கமல். அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த பிறகு அவர் வாரத்தில் இரண்டு நாட்கள் மக்களை சந்தித்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேச தொடங்கினார். அவரை பிடித்தவர்களும் பிடிக்காதவர்களும் என அனைவரும் கமலுக்காக பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க தொடங்கினர். 

பின் இதன் இரண்டாவது சீசன் 3 வாரங்களுக்கு முன் தொடங்கியது. முதல் சீசனை பார்த்து விட்டு பிக்பாஸ் வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்த 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது சீசன் 2. பல மொழிகள், கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். முதல் சீசனில் நியூ கம்மர் அரசியல்வாதியாக இருந்த கமல் தற்போது ஒரு கட்சியின் தலைவர் என பல பிளஸ்கள் இந்த சீசனுக்கு.

இந்நிலையில் கடந்த 3 வாரங்கள் நடந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றி தங்களது கருத்து என்ன என்பது குறித்து நியூஸ்டிஎம் குழு மக்களிடம் நேரடியாக கேட்டது. அதற்கு பலத்தரப்பட்ட பதில்கள் வந்தன. சென்ற சீசன் போல இந்த சீசன் இல்லை என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சியையே நிறுத்திவிட வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்து இருந்தனர். ஒரு சிலரிடம் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் என்ன என்ற எதிர்க்கேள்விகளும் வந்தன.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close