பொன்னம்பலத்தின் சிறை தண்டனையை எதிர்க்கும் ஹவுஸ்மேட்ஸ் - பிக்பாஸ் ப்ரோமோ 2 and 3

  திஷா   | Last Modified : 09 Jul, 2018 07:52 pm

bigg-boss-promo-2-and-3

மூன்று வாரங்களை வெற்றிகரமாக கடந்திருக்கிறது பிக்பாஸ். இப்போது தான் ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக பேசி வருகின்றனர். முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்போது தோழமை உணர்வு அதிகரித்திருக்கிறது. அதில் மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா தத்தா, ஷாரிக் நால்வரும் தொடக்கம் முதலே நண்பர்களாக இருக்கின்றனர்.

இப்போது இரண்டு ப்ரோமோக்கள் வெளியாகியிருக்கின்றன. முதல் ப்ரோமோவில் மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா மூவரையும் கன்ஃபெஷன் ரூமுக்கு அழைக்கும் பிக்பாஸ், உங்களில் இந்த பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற யாராவது ஒருவரை நாமினேட் செய்ய வேண்டும் என்கிறார். அதற்கு முதலில் மூவரும் மறுக்க, பிறகு வேறு வழியில்லாமல் மஹத், யாஷிகாவை நாமினேட் செய்கிறார்.

இன்னொரு ப்ரோமோவில், பொன்னம்பலத்திற்குக் கிடைத்த சிறை தண்டனையை  வீட்டிலிருப்பவர்கள் எதிர்கின்றனர். நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன் என ஆளாளுக்கு சொல்கிறார்கள். இந்த வீட்டோட தலைவி நான் சாவி என்கிட்ட இருக்கு, நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன் என்கிறார் வைஷ்ணவி. பிறகு ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் பொன்னம்பலத்தை சிறைக்கு அனுப்பி வைக்கின்றனர். என்ன நடந்தது என்பதை இன்று இரவு பார்ப்போம். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close