#BiggBoss Day 22: அந்த இரவு அப்படி என்ன தான் நடந்தது?

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2018 02:36 pm

what-happened-in-biggboss-day-22

கமலிடம், முந்தா நேத்து நைட் என்ன நடந்தது தெரியுமா சார் என பொன்னம்பலம் கூறும் போது நாமும் பலவற்றை கற்பனை செய்திருப்போம் தானே. உண்மையில் அன்று இரவு என்ன நடந்தது தெரியுமா?

வரம்பு மீறிய போட்டியாளர்கள் பற்றிய உரையாடல்கள் தான் நேற்றும் தொடர்ந்தது. இப்போ அவங்க பண்ணது தப்புனு சொல்றவங்க அப்போவே ஏன் அத பத்தி பேசல என்று பொன்னம்பலம் சப்போர்ட்டர்ஸிடம் கேட்டுக்கொண்டு இருந்தார் டேனி. அது அவங்க விருப்பப்பட்டு பண்றது அத பத்தி நாங்க கேக்க முடியாது, இப்போ பார்வையாளர்களுக்கு பிடிக்கல அதுனால கேக்றோம் என பதில் அளித்தார் ரித்விகா. டேனி பக்கமும் இல்லாமல் ரித்விகா பக்கமும் இல்லாமல் இரண்டு பேருக்கும் மையமாக பேசிக்கொண்டு இருந்தார் ஜனனி. பொன்னம்பலம் மீண்டும் மீண்டும், "நான் இவ்வளவு பேசினேனே அவங்க என்ன பண்ணாங்கனு சொன்னேனா?" என்றார். அதுதான் அப்படி என்னதான் நடந்தது என்ற குழப்பம் எழாமல் இல்லை. இதுகுறித்து அவர் கமலிடமே கூறியிருக்கலாம். மும்தாஜை பேச வேண்டாம் என்ற கமல் பொன்னம்பலத்தை பேச அனுமதித்து  இருப்பார். 

பின் அனைவரும் டேனியை நோக்கி கேள்வி எழுப்பினர். உன் பெட்ல யாராவது அப்படி பண்ணா(என்னதான் பண்ணாங்க) சும்மா இருப்பியா? என்றதற்கு.. நான் அமைதியா வேறபக்கம் திரும்பி படுத்துப்பேன் என்றார் டேனி. மேலும் உங்க பெர்சனல் விஷயத்தை பற்றி நான் எப்போதாவது பேசியிருக்கேனா? அது போல தான் இதுவும் என்று விளக்கமும் அளித்தார். ஆனால் அது மற்றபோட்டியாளர்களிடம் எடுப்படவில்லை. 

பின் இதைப்பற்றி நாம் பேசுவதை விட மகத், ஷாரிக்கிடமே பேசிவிடுங்கள் என அவர்களை இழுத்துவிட்டார் டேனி. அதான் அசிங்கமாவே திட்டடிட்டனே இனிமே என்ன பேசி திருந்த வைக்கிறது என்பது பொன்னம்பலத்தின் கருத்து. இருந்து டேனி "என்கிட்ட ஏன் இந்த பிரச்னையை கொண்டு வரீங்க" என்பது  போல அவர்களுக்குள் உரையாடல் நடைபெறுவதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். 

பின் பொன்னம்பலம் ஷாரிக்கிடம் இதுகுறித்து பேசினார். எல்லாத்தையும் பேசி தீர்க்க போறாங்க என்று எதிர்பார்ப்போடு அமர்ந்தால், பொன்னம்பலம் சொதப்பினார். மனுஷனுக்கு சூடு சொறனை வேணும், மாட்டுக்கு ஒரு சூடு என சாந்தமான முகத்துடன் கொந்தளிப்பாக பேசினார். சுற்றி இருந்த போட்டியாளர்கள் பதறிப்போய் அப்படியெல்லாம் பேசாதீங்க இப்படி பேசுங்க என்று எடுத்துக்கூறினர். 

பின் வார்த்தைகளில் இருந்த சூட்டைக்குறைத்து, அப்பா மாதிரினு சொன்னியே உன் அப்பா முன்னாடி இப்படி தான் பண்ணுவியா என்றார். சற்றும் யோசிக்காமல், என் அப்பா இதையெல்லாம் பார்த்த அமைதியா வாய மூடிட்டு போயிடுவாரு.. இப்படியெல்லாம் பேசமாட்டாரு என பதிலளித்தார் ஷாரிக். ஆக...யாருக்கும் பிரச்னையை தீர்த்து வைப்பதில் விருப்பமில்லை. ஓ.. அப்படி தான் போவாருனா நான் வெளிய போய் ரியாஸ் கிட்ட பேசிக்கிறேன். சூப்பர்பானு கைக்கொடுத்துட்டு வரேன் என்றார் பொன்னம்பலம். ஷாரிக் என்ன நினைத்தாரோ அந்த இடத்தை விட்டு சிரித்தப்படி சென்றார். 

இவ்வளவு பிரச்னை நடக்கும் போது தவறு செய்தது மற்ற மூவர் மட்டும் தான் என்பது போல நியாயம் பேசுபவர்கள் பக்கம் நகர்ந்தார் மகத். தம்பி.. நீங்களும் குற்றம்சாட்டப்பட்டவர் தான் என்று அவரிடம் யாராவது கூறியிருக்க வேண்டும். இவரை மட்டும் நோட் பண்ண மறந்து விடுகிறார்கள் போட்டியாளர்களும் கமலும்.. வேண்டுமென்றே அவரை தட்டிக்கேட்காமலும் இருக்க வாய்ப்பிருக்கிறது.

பின் பொன்னம்பலம் சிறைக்கு செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு வந்தது. ஆனால் பெரும்பாலான போட்டியாளர்கள் அதனை ஏற்க மறுத்து கேமரா முன் கூறினர்.  யாஷிக்காவும், ஐஸ்வர்யாவும் கூட தங்களுக்கு இந்த தண்டனையில் உடன்பாடு இல்லை என்று கேமரா முன் தெரிவித்தனர். 

பிக்பாஸ் விதிமுறைகளை கரைத்து குடித்து வைத்திருக்கும் ரித்விகாவும் பாலாஜியும் பொன்னம்லபம் சிறைக்கு செல்வது தான் சரியானதாக இருக்கும் என்று தலைவியிடம் கூறினர். மேலும் கேமரா முன் பேசியவர்கள் அனைவரும் நடிக்கிறார்கள் என்று கூறினார் பாலாஜி. மீண்டும் பொன்னம்பலத்தை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் லக்சரி பொருட்களுக்கான புள்ளிகள் குறைக்கப்படும் என்ற அறிவிப்பு வந்தது.

லக்சரி புள்ளிகள் தானே, வேணாம்னு சொல்லுங்க என்றார் பாலாஜி. பின் இந்த வாரம் மட்டும் அல்ல வரும் வாரங்கள் முழுவதும் புள்ளிகள் குறைப்படும் என்று மற்ற போட்டியாளர்கள் எடுத்துரைத்ததும் ஷாக்கானார் பாலாஜி.

லக்சரி புள்ளிகளை மனதில் வைத்து பொன்னம்பலம் சிறைக்குள் அடைக்கப்பட்டார். பின் ஒரு தேசிய சேனல் முன் “நைட் பெட்ல என்ன நடந்து தெரியுமா” என்று கூறியது தவறு என்று யாஷிக்காவும் , ஐஸ்வர்யாவும் பேசினர். உண்மையில் அன்று என்ன தான் நடந்தது என்று போட்டியாளர்களுக்குமே தெரியவில்லை. கோபம் அடைந்த ஐஸ்வர்யா  இப்போ கூறுங்கள் என்றார். அன்னைக்கு பெட்ல உட்கார்ந்து நைட் பேசிட்டு இருந்தாங்க என்றார். ஓ.. இதை தான் அப்படி சொன்னீங்களா சார்.. அவருக்கு பிரச்னை இரவில் தூங்கவிடாமல் இருப்பது தான். அதற்காக பல கோடி பேர் முன் என்ன நடந்தது தெரியுமா என்ன நடந்தது தெரியுமா.. என்பது சரியில்லை.

அதுவரை பொன்னம்பலத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களிடன் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது. நீங்க பேசினது எங்களுக்கே வேற என்னவோ நடந்ததுபோல தான் தேணா வைத்தது என்றார்கள் போட்டியாளர்கள்.

பின், இரவில் தனக்கு உதவி செய்ய வந்த மும்தாஜையும் பல்ப் கொடுத்து அனுப்பினார் பொன்னம்பலம். அப்போது நீங்க பொம்பள நான் ஆம்பள என்றெல்லாம் பேசியதை கேட்டபோது சிறையில் இன்னும் இருக்கட்டுமே என்று தான் தோன்றியது. அடுத்த நாள் காலையில் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்தார். அவருக்கு கபாலி பாடல் எல்லாம் பாடி வரவேற்றனர் பிக்பாஸ் வீட்டினர்.இவங்க எல்லாம் டிராமா பன்றாங்க என ஐஸ்வர்யா கூறிக்கொண்டு இருந்தார்.

பின் வைஷ்ணவியின் இந்த வார தலைவர் பொறுப்பு முடிவதாக அறிக்கவிக்கப்பட்டது. அடுத்த தலைவருக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் யார் தலைவராக கூடாது என்று நினைக்கிறீர்களோ அவர்களை தோற்க வைக்கலாம். அனைவரும் தோற்றால் வைஷ்ணவியே தலைவராக தொடர்வார் என்பது ரூல்ஸ். வைஷ்ணவி சென்ற வாரம் அனுபவித்தும் மீண்டும் தலைவர் பொறுப்புக்கு ஆசைப்படுகிறார். பலமான போட்டியாளர்களை தோற்கடித்தார். பின் யாருமே இல்ல என்ற நிலையில் அனைவரும் ரம்யாவை காப்பாற்றி தலைவராக்கினார்கள். வைஷ்ணவி அவரையும் தோற்கடிக்க நினைத்தார் என்பது தான் உண்மை. பின் அவருக்கு நிறைய ஆதரவு இருக்கிறது என்பது தெரிந்த உடன் தான் தனது ஆதரவை ரம்யாவுக்கு தெரிவித்தார். யாருக்கும் வைஷ்ணவி மீண்டும் தலைவராவது பிடிக்கவில்லை என்பதால் தான் ரம்யாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். 

தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இந்த வார எவிக்ஷனுக்கான நாமினேஷன்கள் தொடங்கின. அதிலும் ட்விஸ்ட் வைத்தார் பிக்பாஸ்.
மூன்று பேராக அழைத்து அவர்களுள் ஒருவரை நாமினேட்  செய்ய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டது.

அப்படி யாஷிக்கா, பாலாஜி, நித்யா, பொன்னம்பலம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். யாஷிக்கா நாமினேட் செய்யப்பட்டதை நினைத்து அழுதார் ஐஸ்வர்யா. யாஷிக்காவை வெளியே அனுப்பிடமாட்டார்கள் என்பது தான் உறுதி. தன்னை காப்பாற்றிக்கொள்ள யாஷிக்காவை  நாமினேட் செய்த மகத் கொடுத்த ரியாக்ஷன்களுக்கு அடுத்த வாரம் சிறை தண்டனை கொடுக்கலாம் தான். ஆனால் அவரை தட்டிக்கேட்க கூட யாரும் தயாராக இல்லை.

வரம்பு மீறுபவர்களை பற்றி பேசும்போதெல்லாம் அனைத்து கேமராக்களும் பெண்கள் பக்கம் தான் திரும்புகிறது. இதிலும் ஆண்களை யாரும் கை நீட்டி கேள்வி கேட்கவில்லை. இதைப்பற்றி தான் இன்றைய நிகழ்ச்சியில் காட்டுகிறார்கள். மகத் கத்துகிறார். யாஷிக்கா முறைக்கிறார்.. நடக்கட்டும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close