#BiggBoss Promo: சிறையில் யாஷிக்கா ஆனந்த்

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2018 02:16 pm

biggboss-promo-yashikka-anand-in-jail

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவில் யாஷிக்கா ஆனந்த் சிறையில் இருப்பது போன்ற காட்சிகள் காட்டப்படுகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருவழியாக விறுவிறுப்பை அடைந்துவிட்டது. பிக்பாஸின் சூழ்ச்சிகளில் சிக்கி போட்டியாளர்களுக்கு பிரச்னை வரும் என்று எதிர்பார்த்தால் அவர்களின் செயல்களினாலேயே சண்டை தொடங்கிவிட்டது.  கமல் சென்ற வாரம் பேசிய 'வரம்பு மீறல்' பற்றிய வாக்குவாதங்கள் இன்னும் ஓயவில்லை. இன்றைய ப்ரோமோவில் இதுகுறித்து இளம் நால்வர் அணி பேசிக்கொள்கின்றனர். 

பொன்னம்பலம் மன்னிப்பு கேட்டத்தை மட்டும் தான் கமலுக்கு காட்டியிருப்பார்கள் என்கிறார் ஷாரிக். அதனை வழிமொழியும் மகத், "கமலிடம் சாரி சார் இனிமே இப்படி நடக்காதுனு தான் சொல்ல முடியும், வேற என்ன பண்ண சொல்ற" என யாஷிக்காவிடம் கத்துகிறார். 

உனக்கு குற்றவுணர்ச்சியா இருக்கு என்பதை எல்லாம் விடு, பொன்னம்பலம் பேசினது என்னை பாதிக்கும், போட்டியாளர்கள் உனக்கு ஆதரவு தெரிவிப்பது என்னை தான் பாதிக்கும்" என்று யாஷிக்கா கூறுகிறார். 

இன்று போலீஸ் திருடன் டாஸ்க் கொடுத்திருக்கிறார்கள். மகத் போலீஸ் வேடத்திலும் யாஷிக்கா சிறைத்தண்டனை கைதி போலவும் உடையணிந்து உள்ளனர். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.