பொன்னம்பலம் நிஜத்திலும் வில்லன்தானா? - பிக்பாஸ் ப்ரோமோ 3

  திஷா   | Last Modified : 10 Jul, 2018 04:57 pm

bigg-boss-promo-3

எஜமானர் உதவியாளர், தண்ணீரை வீணாக்காமல் பார்த்துக் கொள்வது என கடந்த இரு வாரங்களாக பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸுக்கு டாஸ்க் கொடுத்திருந்தார். இந்நிலையில் இந்த வாரத்தின் டாஸ்க்  பற்றியது தான் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது பிக்பாஸ் ப்ரோமோ. 

இந்த வாரம் மூன்று பேர் திருடர்களாக மாறி திட்டம் போட்டு திருட வேண்டும் என்பது தான் பிக்பாஸின் டாஸ்க். டேனியல், ஐஸ்வர்யா, யாஷிகா ஆகிய மூன்று பேரும் திருடர்களாக மாறியிருக்கின்றனர். அவர்களை திருட விடாமல் பாதுகாக்கும் போலீஸ் டாஸ்க் மும்தாஜ், மஹத், சென்ட்ராயன் ஆகிய மூவருக்கும் கொடுக்கப் பட்டுள்ளது. 

சாப்பிடும் உணவிலிருந்து அனைத்தையும் திருட வேண்டிய சூழ்நிலையில், எதையும் களவு போகாமல் போலீஸ் பாதுகாக்க வேண்டும். டேனி சாப்பாடு எடுத்துச் செல்கையில் உடனே அதை பிடுங்க முற்படுகிறார் பொன்னம்பலம். அப்போது கை தவறி கோப்பை கீழே விழுந்து உடைகிறது. 

இது பிக்பாஸோட பொருட்கள் என்கிறார் ஐஸ்வர்யா, அப்படித்தான் பண்ணுவேன் என பதிலளிக்கிறார் பொன்னம்பலம். டாஸ்க் ஸ்வாரஸ்யமாக இருக்குமா அல்லது வழக்கம் போல் இழுக்குமா... என்பதை நிகழ்ச்சியில் பார்ப்போம். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close