#BiggBoss Day 23: டபுள் மீனிங் ஜோக், செருப்பால அடிப்பேன், 420.. சூடுப்பிடிக்கும் பிக்பாஸ்

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2018 11:37 pm
what-happened-in-biggboss-day-23

குடும்ப பிரச்னையை தாண்டி ஆண், பெண் பிரச்னைகளுக்குள் நுழைந்திருக்கிறது பிக்பாஸ் வீடு. நேற்றைய நிகழ்ச்சியில் வைஷ்ணவியை சென்றாயன் டாஸ்க்கிற்காக தூக்கியது குறித்து அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். இதெல்லாம் எப்போ நடந்தது என்று தெரியவில்லை. மிட்நைட் மசாலா, மார்னிங் மசாலா காட்சிகளுக்கு பணம் கட்டி பார்க்கும் அளவிற்கு எதுவும் சுவரஸ்யமாக நடந்து விடவில்லை என்பதால் அவர்கள் பேசிக்கொள்வதை வைத்தே முடிவுக்கு வருவோம்.

அப்போது நான் அதிக எடையுடன் இருந்தால் என்னை எப்படி தூக்குவீர்கள் என்று சென்றாயனிடம் கேட்டார் வைஷ்ணவி. அதற்கு, ஒரு ஆம்பளை நினைத்தால், அவனது சக்தியை பயன்படுத்தி யாரை வேண்டுமானாலும் தூக்குவான் என்று  மொக்கையாக வசனம் பேசினார் சென்றாயன். அதற்கு படுத்துக்கொண்டு இருந்த பொன்னம்பலத்திடம், ‘அப்படி தானே ன்னே’ என சர்டிஃபிகேட் கேட்டார். அவர் உடனே நான் இரவில் ஜெயித்துவிடுவேன். பகலில் தோற்றுவிடுவேன் என்றார். அவர் தூங்கும் போது மற்றவர்கள் அவரிடம் பேச்சுவார்த்தையே வைத்துக்கொள்ளாமல் இருப்பது நலம்.

உடனே சென்றாயன், நீங்க இந்த மாதிரி விளையாட்டாக பேசினால் இந்த புள்ள கிட்ட மட்டும்பேசுங்க என வைஷ்ணவியை கைக்காட்டினார். சிரித்து பேசி பிரச்னை ஆகாமல் நகர்வதை எதிர் தரப்பு எப்படி எடுத்துக்கொள்கிறது என்றால்.. சென்றாயன் போல தவறாக தான் எடுத்துக்கொள்கிறது.

அந்த இரவில் பெரிய பிரச்னையாக்காமல் இது போல இனி என்னிடம் பேசாதீர்கள் என்று மட்டும் கூறிவிட்டு நகர்ந்தார் வைஷ்ணவி. அவர் கூறியது தவறு என்பதை கூட பொன்னம்பலம் உணரவில்லை. ஜோக்தான் என்றார்.  பெரிய ஜோக் பொன்னம்பலம் அவர்களே!

23ம் நாள் காலையில் மகத்தின் டி-ஷர்ட்டை யாரோ மறைத்துவிட்டதாக பஞ்சாயத்து நடந்தது. செம கடுப்பில் சுற்றிக்கொண்டு இருந்தார். கோபப்பட்டு போய் படுத்துவிட்டார். அட கோபப்பட்டீங்களே சார்.. ஏதாவது பண்ணுங்க!..

ஜனனியும் வைஷ்ணவியும் இந்த வாரம் பொன்னம்பலம் தான் எவிக்ட் ஆவார் என்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது நேற்றுக்கூட என்னிடம் இது போன்று பேசிவிட்டார் என வைஷ்ணவி கூறினார். பொன்னம்பலம் சுற்றி ஆண்கள் இருந்தால் தான் அப்படி பேசுகிறார் என்ற அறிய கண்டுப்பிடிப்பை பற்றி கூறினார்.

இரவு பொன்னம்பலம் பேசியது தனக்கு சரியாக புரியவில்லை என்று வைஷ்ணவயிடம் விளக்கம் கேட்டார் டேனி. அவருடன் மகத்தும் கதைக்கேட்க இணைந்தார். வைஷ்ணவி புறம் பேசுவதை நிறுத்திவிட்டார் தான். ஆனால் அவரை குற்றம்  கூறியவர்கள் புறம் பேசுவதை கேட்பதில் இருக்கும் ஆர்வத்தை குறைக்கவில்லை.

இந்த பிரச்னை குறித்து நித்யா,பாலாஜியிடம் கூறினார் ஜனனி. அங்கு வந்த சென்றாயன், வைஷ்ணவி சரியான 120 என்றார். அது 120 இல்ல 420 என்று சரிசெய்தார் பாலாஜி. அப்படியே அவர் கருத்தையும சரிசெய்திருக்க வேண்டும். உண்மையில் வைஷ்ணவி மீது எந்த தவறும் இல்லை. வைஷ்ணவி சொல்லாத விஷயத்தை எல்லாம் சென்றாயன் இங்கு கூறிக்கொண்டு இருந்தார். நடுவில் அந்த புள்ள பண்றது தப்பு என்று வேற கூறினார்.

வைஷ்ணவியிடம் கதைக்கேட்டுவிட்டு, உன்ன பத்திதான் பேசுறாங்க என்று சென்றாயனிடம் வந்து கூறினார். நடுவில், இவனுங்க குத்தடிச்ச போது சில ஜென்மங்கள் ஏத்திவிட்டுட்டு இப்போ கமல் சார் முன்னாடி மாத்தி பேசுறாங்க என்று பாலாஜியை பற்றி மறைமுகமாக  பேசிக்கொண்டுஇருந்தார் டேனி.

இந்த வாரத்திற்கான முதல் லக்சரி பொருட்களுக்கான டாஸ்க் பற்றி விளக்கினார் ஜனனி. திட்டம் போட்டு திருடுற கூட்டம் என்பதுதான் டாஸ்கின் பெயர். சென்ற சீசனில் வைரலான போலீஸ் உடையில் ஓவியா போட்டோ இதே டாஸ்கின் போது எடுக்கப்பட்டதுதான்.. மிஸ் யூ ஓவியா.. இதில் யாஷிக்கா, டேனி, ஐஸ்வர்யா ஆகியோர் திருடர்கள்.. மும்தாஜ், மகத், சென்றாயன் ஆகியோர் போலீஸ். மற்றவர்கள் பொது ஜனம். திருடர்கள் பொருட்களை திருடும் போது போலீஸ் அவர்களை பிடிக்க வேண்டும். இது தான் டாஸ்க். திருடர்கள் பொறுப்பை பெற்றதும் செம ஜாலியானர்கள் அந்த மூவரும்.

என்ன திருடினாலும் நாங்க எடுத்துக்வோம் என்றார் யாஷிக்கா. உடனே செருப்பு பிஞ்சிடும் என்றார் மகத். உடனே யாஷிக்கா கோபமாக முகத்தை வைத்துக்கொண்டார். மீண்டும் கோவித்துக்கொண்டு அந்த பெட்டில் போய் படுத்துக்கொண்டார். அனைவரும் யாஷிக்கா மீது தான் தவறு என்பது போல பேச யாஷிக்கா கடுப்பானார். பின் யாஷிக்காவை நாமினேட் செய்ததில் இருந்து குற்றவுணர்ச்சியாகஇருக்கிறது அது தான் தனது கோபத்திற்கு காரணம் என கூறினார் மகத். அனைவரும் அவரிடம் பேசி மீண்டும் லிவிங் ரூமிற்கு அழைத்துசென்றனர்.
அவருக்கு மட்டும் வீட்டில் கொஞ்சம் செல்லம் கொடுப்பது போல தான் காட்டுகிறார்கள். அவரே கேமரா முன் வந்து என்ன கூப்பிடுங்க நான் போறேன் என்றார். அப்படி கூறினால் ஒன்றும் நடக்க போவதில்லை என்பது அவருக்கும் தெரியும்.

மீண்டும் பொன்னம்பலம் பிரச்னை குறித்து பேசினார்கள். இந்தமுறையும் பொன்னம்பலம் தன் மீது தவறு இல்லை என விளக்கிக்கொண்டு இருந்தார். எல்லாரும் தான் பேசுறீங்க நான் பேசினால் மட்டும் ஏன் கோபப்படுறீங்க என்றார் பொன்..

உடனே நான் யாருகிட்டயும் இது பத்தி பேசல.. சென்றாயன் போய் யார்கிட்ட சொன்னாருனு தெரியல என்றார் வைஷ்ணவி. உண்மையில் இந்த விஷயத்தை மற்றவர்களிடம் கூறியது ஜனனி. அவர் அந்த இடத்தில் இருந்து அமைதியாக சென்றுவிட்டார். உடனே நான் யாருகிட்டயும் சொல்லல என்று எகிறினார் சென்றாயன். நீ தான சொன்ன உண்மைய பேசு என்று பாலாஜி கண்டித்ததும் அவரும் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார். நடப்பது எதையும் புரிந்து கொள்ளாத பொன்னம்பலம்.. நான் டபுள் மீனிங் தான் பேசினேன் ஆனால் அதில் கொச்சையாக எதுவுமே இல்லையே என்றார். அடடே..

அப்படி இருந்தால் எனக்கு விளக்குங்கள் என அவர் கூறியது டபுள் மீனிங் ஜோக்குகளை விட மோசம். பின் இனி இது போன்ற பேச்சுகள் எதுவும் வேண்டாம் என்ற முடிவெடுத்துவிட்டு சென்றனர். பொன்னம்பலம் ஜெய் ஶ்ரீ ராம் என்றார். ம்ம்..

இந்த வாரம் இதுக்கு குறும்படம் போடுவார்களா என பேசிக்கொண்டு இருந்தார் நித்யா. பாலாஜி சொன்னப்போ மட்டும் குறும்படம் போட்டு தப்புனு சொன்னாங்களே என்பது அவர் வாதம். இதுப்பற்றி மகத்திடம் கூறினார் யாஷிக்கா. உடனே அவர்களுக்கு என்ன எரியுது என கத்தினார் மகத்.

மறுபக்கம் திருடன் போலீஸ் டாஸ்க் தொடங்கியது. தொடக்கமே அமோகம் என்பது போல மும்தாஜின் பொருட்களை திருடினார் டேனி.. அவர் தான் டக்கென சூடாகிவிடுவார் என்றார். வாட் எ மனசு..நித்யா பேசியது சரியல்ல என்று பாலாஜியிடம் கூறினார் மகத். அவரும் சரிப்பா என கூறிவிட்டு சென்றார்.

மகத் தான் சீனியர் போலீஸ் ஆபிசராம்.. எல்லாம் நேரம். போலீசார் அவர்களது  ரூல்ஸ்களை கூறிக்கொண்டு இருந்தனர். அதனை கேட்டதும் போலீஸ் சரியல்ல என்றனர் போட்டியாளர்கள். போலீச தட்டிக்கேட்க கூடாது என்பதும் அவர்களின் ரூல்ஸ்களில் இருந்தது.யாஷிக்கா திருடும் போது பிடிப்பட்டு சிறைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த அனைவரும் கோபத்தை கட்டுப்புடுத்தி கொள் என மகத்துக்கு அட்வைஸ் செய்து கொண்டு இருந்தனர்.

யாஷிக்கா, அன்னைக்கு நீ கமல் சார் முன்னாடி அவங்க பக்கம் தான் பேசின.. நாம் சும்மா இருந்தேன் என்றார். உடனே மீண்டும் கடுப்பாகி கத்திவிட்டு சென்றார். கையில் இருந்த லத்தியை எல்லாம் தூக்கி போட்டுவிட்டு சென்றார்.

மீண்டும் அனைவரும் யாஷிக்காவிடம் வந்து விளக்கம் கேட்டனர். உடனே என்னை ஏன் குத்தம் சொல்றீங்க என்று கத்தினார் யாஷிக்கா. மகத் பாத்ரூமில் இருந்து அழுக்கொண்டே சென்றார். ஆஹாங்..

டேனி மும்தாஜிடம் தன்னை சரியான காரணம் இல்லாமல் நாமினேட் செய்து விட்டதாக கூறிக்கொண்டு இருந்தார். உடனே என்னையும் முதல் வாரத்தில் இருந்து அப்படி தான் செய்கிறார்கள் என்றார்.

இளம் நால்வர் அணி தங்களுக்குள் நடக்கும் பிரச்னையை முடித்துக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நடப்பதை முழுமையாக காட்டமாட்டார்கள் என்றார் ஷாரிக்.. அது என்னவோ உண்மை தான். பின் கமல் நான் எல்லாத்தையும் பார்த்துட்டேன் பார்த்துட்டேன் என்று சொல்லும் போது நாம் என்ன பேச முடியும் சரி சார் இனி தவறு நடக்காது என்று மட்டும் தான் கூற முடியும் என்றார் மகத். அதெல்லாம் பெரிய மேட்டர் இல்ல இனி சரியா கேம்ம விளையாடு என்றார் யாஷிக்கா. இந்த பிரச்னை இதோடு முடிந்து விடாது. மகத்தின் கோபம் இன்னும் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். அது போல தான் இன்று நடக்கும் காட்சிகள் இருக்கின்றன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close