பாலாஜிக்கும் மஹத்துக்கும் முற்றிய சண்டை - பிக்பாஸ் ப்ரோமோ 1

  திஷா   | Last Modified : 11 Jul, 2018 12:30 pm
bigg-boss-promo-1

பிக்பாஸ் முதல் சீசனில், தொடக்கம் முதலே ஹவுஸ்மேட்ஸ் அவர்களாக இருந்தனர். அதனால் மக்களுக்கும் பொழுதுபோக்காக இருந்தது. கோபம், தாபம் என அனைத்தையும் உடனுக்குடன் வெளிப்படுத்திக் கொண்டனர். 

ஆனால் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இரண்டாவது சீசன் அப்படியல்ல. ஆரம்பத்திலிருந்தே அவர்கள் நடித்து வருவது அப்பட்டமாகத் தெரிந்தது. 3 வாரங்கள் கடந்திருக்கும் நிலையில் தற்போது ஒவ்வொருவரின் நிஜ குணங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இன்று (11ம் தேதி ) வெளிவந்துள்ள  முதல் ப்ரோமோவில் மஹத்தும் பாலாஜியும் கடுமையாக சண்டைப் போட்டுக் கொள்கின்றனர். 'நீ யாரு என்னை பிச்சை எடுத்து சாப்பிடுன்னு சொல்றதுக்கு' என கோபத்தில் பாய்கிறார் மஹத். அதற்கு 'உன்ன சொன்னனா' எனக் கேட்கிறார் பாலாஜி. 

ஆனால் இந்த முறை பாலாஜியை விட மஹத்தே அதிக கோபமாகிறார். 'டேய் ஜோக்கரு, காமெடி, காமெடி தலையா போ' ஆகிய வார்த்தைகளை பாலாஜியை நோக்கி வீசுகிறார். நிஜ சண்டையா அல்லது பிக்பாஸ் கொடுத்த டாஸ்கா என இரவு பார்ப்போம்! 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close