ரம்யாவின் தலைவர் பதவியை காலி செய்த பிக்பாஸ்... ப்ரோமோ - 2

  திஷா   | Last Modified : 11 Jul, 2018 02:09 pm
bigg-boss-promo-2

பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. காலையில்  வந்த ப்ரோமோவில் பாலாஜியும் மஹத்தும் சண்டைப் போட்டுக் கொண்டனர். இப்போது வந்துள்ள ப்ரோமோவில் ரம்யாவை தலைவர் பதவியிலிருந்து விடுவித்து, நேரடியாக வரும் வார எலிமினேஷனுக்கு நாமினேட் செய்வதாக அறிவிக்கிறார் பிக்பாஸ். 

இந்த அறிவிப்புக்கு முன், எனக்கு இது தேவையில்லன்னு தோணுது என ரம்யா சொல்ல, சந்தோஷமா விளையாடுங்க என மும்தாஜ் சொல்கிறார், அதை ரம்யா மறுக்கிறார். இந்த விளையாட்டு ரொம்ப சீப்பா இருக்கு, இன்ட்ரெஸ்ட் போய்ட்டு இருக்கு, எங்க யாருக்குமே இந்த கேம் பிடிக்கவே இல்லை என கேமரா முன் சொல்கிறார் ரம்யா. அதன்பிறகு தான் அவரை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப் படுவதாக அறிவிக்கிறார் பிக்பாஸ். திங்கட்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தலைவரான ரம்யா இரண்டே நாளில் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதற்கான காரணம் என்ன என்பதை நிகழ்ச்சியில் பார்த்தால் தான் தெரியும். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close