டேனியை குற்றம் சாட்டும் ஹவுஸ்மேட்ஸ் - பிக்பாஸ் ப்ரோமோ 3

  திஷா   | Last Modified : 11 Jul, 2018 04:06 pm
bigg-boss-promo-3

முதலில் சண்டை, பிறகு தலைவர் நீக்கம் என ஏற்கனவே இரண்டு பிக்பாஸ் ப்ரோமோக்கள் வெளியாகின. இப்போது மூன்றாவது ப்ரோமோவும் வெளியாகியிருக்கிறது. அதில் டேனி எந்த டீம்ல இருக்கானோ, அந்த டீம்ல பயங்கறமா சண்டை போடுறான் என வைஷ்ணவி சொல்ல, எதிர் டீமை தூண்டி விடுகிறார் என நித்யா அடுத்த கம்ப்ளயின்டை வாசிக்கிறார். 

மறுபுறம் ஐஸ்வர்யா, யாஷிகா, மும்தாஜ், டேனி வெளியில் இருக்கும் ஷோஃபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். நம்ம நெனைப்போம் எல்லாம் முடிஞ்சிடுச்சின்னு, ஆனா அவங்களுக்கு அந்த பகை உள்ளுக்குள்ள இருக்கும் என்கிறார் யாஷிகா. 

மத்தவங்கள எரிச்சல் படுத்தி ஜெயிக்கிறது கேமே கிடையாது என பெண்கள் ரூமில் அமர்ந்து பாலாஜி பேசிக் கொண்டிருக்கிறார். 

பெண்கள் ரூமில் வைஷ்ணவி, ஜனனி, நித்யா பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதுக்கெல்லாம் காரணம் மும்தாஜ் தான் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவங்களோட உண்மையான கேரக்டரை இது பிரதிபலிக்குது என்கிறார் வைஷ்ணவி (அத நீ சொல்றியா - பார்வையாளர்களின் மைண்ட் வாய்ஸ்). உண்மையில் நடந்ததை இரவு பார்ப்போம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close