#BiggBoss Day 24: பிக்பாஸ் அராஜகம் ஒழிக!

  Newstm News Desk   | Last Modified : 11 Jul, 2018 10:44 pm

what-happened-in-biggboss-day-24

பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு வேலையாட்கள் எப்படி இருக்க வேண்டும் என்றும் தெரியவில்லை.. போலீஸ்காரர்கள் எப்படி இருக்க வேண்டும் என்றும் தெரியவில்லை. வேலையாட்கள் என்றால் அடிமைகள் என்றும் போலீஸ்காரர்கள் என்றால் சர்வாதிகாரிகள் என்றும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நேற்றைய நிகழ்ச்சியின் தொடக்கமே பஞ்சாயத்தாக தான் இருந்தது. அனந்த் வெளியே செல்லும் போது பொன்னம்பலத்தை சிறையில் அடைக்க வேண்டும் என்றார். அப்போது விசிலடித்து கொண்டாடியவர்கள் தான் பொன்னம்பலத்திற்காக கேமரா முன் பேசினார்கள். ஆனால் நானும் பாலாஜியும் பேசவில்லை. நாங்கள் அன்று கைத்தட்டியும் கொண்டாடவில்லை.. கேமரா முன்பும் பேசிவில்லை..என்றார்.

அதற்கு நான் இந்த வாரம் மட்டும் எவிக்டாகாமல் இருந்துவிட்டால் பின் நான் என்ன செய்கிறேன் என்று எச்சரித்தார் பொன்னம்பலம்.

போலீஸ்காரர்களும், திருடர்களும் சாப்பாடு திருடி சாப்பிடுவது குறித்து திட்டம் தீட்டிக்கொண்டு இருந்தனர். நிஜத்தை விடவும் இவர்கள் செய்யும் அட்ராசிட்டிகள் கொடுமையாக உள்ளது.

அவர்கள் திட்டத்தின் படியே திருடர்கள் சாப்பாட்டை திருடிச்சென்றனர். சாவி கொடுத்தவனே எப்படி திருடனை பிடிப்பான்.. அவர் சாப்பாட்டை எடுத்து சென்ற போது வேட்டிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

கோபமடைந்த பொன்னம்பலம் திருடர் டேனி கையில் இருந்த தயிர் கிண்ணத்தை தள்ளிவிட்டார். தற்காலிகமாக கேரக்டரில் இருந்து வெளியே வந்து சாப்பாட தட்டிவிட்டாங்க இதுக்க நியாயம் வேணும் என கத்தினார் டேனி..போலீஸ் பாதுகாக்கலனா அப்படி தான் பண்ணுவோம் என்றார் பொன்னம்பலம். பாதுகாப்பு வழங்கும் பொறுப்பில் இருப்பவர்கள் மக்களை பாதுகாப்பதை தவறினால் பல பொன்னம்பலங்கள் பல தயிர் கிண்ணத்தை தள்ளிவிட தொடங்குவார்கள் தான்.

உடனே திருடர்கள் திருடிய பொருட்களை நாங்கள் கொண்டு வந்து தந்திருப்போம் ஏன்தள்ளிவிட்டீர்கள் என்றார் மகத். திருட்டுக்கு திட்டம் போட்டவர் நியாயம் பேசுவதெல்லாம்..இந்த பிரச்னை தொடரும் போதே விளக்குகள் அணைக்கப்பட்டது.

அடுத்த நாள் காலை ‘பீலா பீலா’ பாடலோடு தொடங்கியது.. சூழ்நிலை பாடல் என்றால் இது தான் தினம் தினம் பிக்பாஸ் வீட்டில் ஒலிக்க வேண்டும். பிரஷ் முதல் கொண்டு அனைத்தையும் திருடிவிட்டார்கள் என புலம்பிக்கொண்டு இருந்தனர் பிக்பாஸ் பொது மக்கள்.
அந்த வீட்டில் சாப்பாடு தான் பிரச்னை என்பது ஊரறிந்த ஒன்று. எந்த டாஸ்க் கொடுத்தால் சாப்பாடு பிரச்னை வரும் என்ற சரியாக திட்டமிட்டு கொடுக்கப்பட்டுள்ளது இந்த டாஸ்க்.

நித்யா சல்யூட் அடிக்கவில்லை என அரெஸ்ட் செய்யப்பட்டார். சாப்பிட்டுக்கொண்டு இருந்தவரை பாதியில் அரெஸ்ட் செய்து அழைத்து சென்றார்கள் போலீஸ்காரர்கள். நடுவில் திருடிய பொருட்களை ஏலம் விட்டுக்கொண்டு இருந்தனர் திருடர்கள். அங்கு போலீஸ் காரர்களும் வந்து பொருட்களை வாங்கி கொண்டனர். அடேய்களா.. தப்பான போலீசா மட்டும் இருக்கனும் என்றா பிக்பாஸ் டாஸ்க் கொடுத்திருக்கிறார்? கொஞ்சமாவது நல்ல போலீசாக இருக்க வேண்டாமா?

முன்பு மகத் சாப்பாடு கேட்டபோது பொதுமக்கள் தரவில்லையாம்.. அதற்கு பழிவாங்க தான் நித்யாவை கைது செய்வதாக கூறினார் மகத்.
போலீஸ்காரர்களும் பொதுமக்ளிடம் தான் சாப்பாடு வாங்க வேண்டும் என்பதால் காலையில் இருந்து சாப்பிடாமல் இருந்தனர் அந்த மூவரும். பசியால் ஜனனியின் கையில் இருந்த காபியை பிடுங்கி குடித்தார். உடனே இதற்கு பரிகாரமாக நித்யாவை வெளியே விட வேண்டும் என போராட்டம் நடத்தினர். இவர் வேற தனியாக பெர்மார்ம் செய்து கொண்டு இருந்தார். ஆனால் அது எடுப்படவில்லை.

இந்த பிரச்னையை சுவாரஸ்யமாக்க நினைத்து செய்தியாளர்களாக இருவர் நடிக்க வேண்டும் என்ற கட்டளை வந்தது. பாலாஜியும், ரம்யாவும் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். அவர்களிம் பொதுமக்கள் போலீஸ் அராஜகம் ஒழிக என கத்தினர்.
போலீஸ்காரர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டு பாலாஜியும் மகத்தும் சத்தம் போட்டனர். கோபப்பட்டு ஆக்ரோஷமாக ஆப்பிளை எடுத்து சாப்பிட்டார் மகத். இதற்கு பிச்சை எடுத்து சாப்பிட்டு இருக்கலாம் என்றார் பாலாஜி. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதில் பாலாஜியை தவறாக பேசினார் மகத். தனிப்பட்ட முறையில் பாலாஜியை கத்திவிட்டு சென்றார். இதற்கெல்லாம் இந்த வார இறுதியில் கமல் ஏதாவது முடிவுக்கட்டியே ஆக வேண்டும்.நாளுக்கு நாள் மகத்தின் அராஜகம் தான் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

அவர் பேசியதால் பாலாஜி அழுதக்கொண்டு இருந்தார் அவரிடம் வந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டு இருந்தார் மகத். நடுவில் இதுக்கெல்லாம் அந்த பொண்ணு தான் காரணம் என யாஷிக்காவை கைக்காட்டினார் பொன்னம்பலம். எல்லா பிரச்னைகளையும் பெண்கள் பக்கம் திருப்பி அவர்களை பலிகாடாக ஆக்குவதில் ஆண்கள் கைத்தேர்ந்தவர்கள் தானே.

பின் ஓவ்வொருத்தராக டாஸ்கில் நான் இல்லை நீ இல்லை என குழப்பிக்கொண்டு இருந்தனர். கடைசியாக ரம்யா கேமரா முன் சென்று இந்த டாஸ்க் வேணாம் சீப்பா இருக்கு என்றார் டாஸ்க் மட்டுமா சீப்பா இருக்கு?.

இதனால் தலைவி பொறுப்பில் இருந்து ரம்யாவை நீக்கிவிட்டு, எவிக்ஷனுக்கு நேரடியாக நாமினேட் செய்யப்பட்டார். இனி டாஸ்க்கை செய்யாமல் இருப்பவர்களும் நேரடியாக நாமினேட் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்தார். மேலும் தலைவியாக தானே முன்வந்து ஒருவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். நித்யா முன்வந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

அப்போ நாளைக்கும் இந்த டாஸ்க் தொடரும் அப்படி தானே.. பிக்பாஸ் அராஜகம் ஒழிக!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.