சிறையிலடைக்கப் படும் மஹத் - பிக்பாஸ் ப்ரோமோ 1

  திஷா   | Last Modified : 12 Jul, 2018 11:34 am
bigg-boss-promo-1

பிக்பாஸ் வீட்டில் நடந்த பல பிரச்னைகளுக்கு மஹத் தான் காரணம் என ஹவுஸ்மேட்ஸ் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ஆம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ இதைத் தான் சொல்கிறது. அனைவரும் ஷோபாவில் அமர்ந்திருக்க, ஜனனி அவர்களுக்கு எதிரில் அமர்ந்து 'மஹத் உங்களுக்குக் கொடுத்த வேலைய நீங்க சரியா செய்யல, அதுதான் இவ்ளோ பிரச்னைக்குக் காரணம்' என்கிறார். 

'நான் நிறைய பேர் மேல கோபப் பட்டிருக்கேன், பிரச்னை பண்ணிருக்கேங்கறத நான் ஒத்துக்குறேன்' என்கிறார் மஹத். தொடர்ந்து சிறையில் அடைக்கப் படுகிறார் மஹத். 

'தயவு செய்து சனிக்கிழமை காலைல வரைக்கும் என்ன ஜெயில்ல இருந்து எடுக்காதீங்க, இது மட்டும் தான் என்னோட கோரிக்கை' என சிறைக்குள் இருந்த படி பிக்பாஸிடம் கேட்டுக் கொள்கிறார் மஹத். 


ஆனால் உண்மையிலேயே இந்த தண்டனை எத்தனை நாளைக்கு என்பதற்கு பதில் பிக்பாஸிடம் தான் இருக்கிறது. 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close