பிக்பாஸில் கார்த்தி - அவமானப்பட்ட வைஷ்ணவி! - பிக்பாஸ் 2 & 3

  திஷா   | Last Modified : 13 Jul, 2018 04:03 pm
bigg-boss-promo-2-and-3

பிக்பாஸின் இரண்டாவது மற்றும் மூன்றாவது ப்ரோமோக்கள் வெளியாகியிருக்கின்றன. முதல் ப்ரோமோவில் கலகலப்பாக இருந்த வீட்டில், அடுத்தடுத்த ப்ரோமோக்களில் ஆங்காங்கே வழக்கமான பிரச்னைகளும் தூவப் பட்டிருக்கின்றன. 

கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினர் ப்ரமோஷனுக்காக பிக்பாஸ் வீட்டை விசிட் செய்திருப்பதை முதல் ப்ரோமோவிலேயே பார்த்தோம். கார்த்தியிடம், 'அண்ணே எப்படிண்ணே இந்த ஷோ ஓகேவா இருக்காணே' என்கிறார் டேனி. 'எல்லாரும் நடிக்கிறீங்கங்கறேன்' என பதிலளிக்கிறார் கார்த்தி. அதைத்தான் கமல் சாரும் சொன்னாருண்ணே என்கிறார் டேனி, 'அவரும் அதான் சொன்னாரா? உங்களுக்குள்ள ஒரு ஒரிஜினாலிட்டி இருக்கும்ல' என கார்த்தி கேட்க, 'அண்ணே வெட்டிக்கிட்டு தாண்ணே சாவனும்' என்கிறார் டேனி. 

உங்க பெட்ரூம காட்டுங்க என சூரி கேட்க, ஆண்கள் பெட்ரூமை பார்வையிடுகிறார்கள் விருந்தினர்கள். 'ஏ என்னயா இப்படி நாஸ்தி பண்ணி வச்சிருக்கீங்க, க்ளீனிங் வேலையே கிடையாதா?' என்கிறார் கார்த்தி. 'வீடு கொஞ்சம் அழுக்கா இருக்கு, மன்னிக்கணும்' என்கிறார் மும்தாஜ். 'இல்ல இல்ல மன்னிக்கவே முடியாது உங்கள, எப்போவுமே நீட்டா இருக்கணும்ல, எல்லாம் பாத்துக்கிட்டு இருக்காங்கல்ல எப்படி இருக்குதுன்னு (இந்த இடத்தில் அவரின் பாடி லாங்வேஜை நோட் பண்ணுங்க)' என பதிலடி கொடுக்கிறார் கார்த்தி

அடுத்த ப்ரோமோவில், 'உங்களுக்குள்ள பட்ட பேர் வச்சிருக்கீங்களாமே என்னென்ன பட்ட பேர் சொல்லுங்க' என்கிறார் பாண்டிராஜ். 'இவங்க பேர் வந்து நாராயண் நாராயண்' என்கிறார் ஐஸ்வர்யா. 'ஓ நாராயணா நாராயணாவா' என சிரிக்கிறார் கார்த்தி. 

'நா எங்க போய் நாரதர் வேல பாத்தேன்னு, அவங்க என்ன அப்படி சொல்றாங்க. கார்த்தி முன்னாடி அவன் என்ன எப்படி டார்கெட் பண்ணுனா தெரியுமா, எனக்கு அது புடிக்கல' என ஜனனியிடம் முறையிடுகிறார் வைஷ்ணவி. அப்போது ஃப்ரேமில் டேனியல் வந்து போகிறார். ஆக, இன்னைக்கும் சம்பவம் இருக்கு. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close