#BiggBoss Day 26: வீடியோலாம் போட்டு ஒரே அசிங்கமா ஆயிடிச்சி!

  Newstm Desk   | Last Modified : 14 Jul, 2018 12:17 am
what-happened-in-biggboss-day-26

பிக்பாஸ் வீட்டில்  இருப்பவர்களிடம் உங்கள பத்தி வெளியே இப்படி தான் பேசிக்கிறாங்க என்று யாராவது கூறினால் எப்படி இருக்கும். நேற்று அப்படி தான் மகத் பதறிப்போனார். பிக்பாஸ் 26வது நாளில் என்ன நடந்தது.. பார்ப்போம்

டேனியின் திட்டம் தெரிந்துவிட்டதாம் பெண்கள் பேசிக்கொண்டு இருந்தனர். அவர்கள் உரையாடலுக்கு இடையே டாஸ்க்கில் பங்கேற்ற ஒவ்வொரு அணியில் இருந்தும் ஒருவர் கன்பெஷன் அறைக்கு தனித்தனியாக அழைக்கப்பட்டனர். அவர்கள் டாஸ்க்கில் முடிவில் வைத்திருக்கும் பணத்தை எண்ணி வைத்துவிட்டு வெளியே செல்ல வேண்டும் என்றார் பிக்பாஸ். இதில் திருடர்கள் அணிதான் 800 ரூபாயை காப்பாற்றி வைத்திருந்தனர்.  இந்த டாஸ்க்கில் திருடர்களுக்கு சாதகமாக விதிமுறைகளை வைத்த பிக்பாஸின் திட்டத்திற்கு பின் எதையோ சொல்ல வருகிறார் என்று தோன்றுகிறது..

மீண்டும் பெண்களுக்குள்ளான உரையாடல்.. இந்த முறை மகத்தை பற்றி பேசிக்கொண்டு இருந்தனர். மகத் ரொம்ப நல்லவர் என்பது போல பேசிக்கொண்டு இருந்தனர். அவராகவே முன் வந்து ஜெயிலுக்கு சென்றதை புகழ்ந்துக்கொண்டு இருந்தனர். நமக்கு காட்டப்படுவது மட்டும் தான் அங்கு நடக்கிறது என்று நாம் எதிர்பார்க்க முடியாது என்பது உண்மை தான். ஆனால் மகத் விஷயத்தில் போட்டியாளர்கள் காட்டும் ஆதரவு குழப்பதை ஏற்படுத்துகிறது. அவர் செய்யும் தவறுகளை அவர்கள் பெரிதாகவே எடுத்துக்கொள்வது இல்லை. ஆனால் டேனி செய்யும் ஒவ்வொன்றையும் பிரச்னையாக்குகிறார்கள்.

சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மகத் ஏதோ எழுதிக்கொண்டு இருந்தார். சிறையில் இருப்பவர்களுக்கு சிறப்பு வசதி போல அது. திரைப்படங்களில் காட்டுவது போல சிறைத் தண்டணை முடிந்து வெளியே வரும் போது மகத் ஏதாவது புத்தகம் எழுதி முடிப்பாரோ என அச்சம் ஏற்படும் அளவுக்கு அவர் சின்சியராக உட்கார்ந்திருந்தார்.

மறுப்பக்கம், மகத்தை அப்படி புகழ்றாங்க என்று டேனியிடம் பேசிக்கொண்டு இருந்தார் மும்தாஜ். அதற்கு நாம இனி எதைப்பத்தியும் பேச வேண்டாம். அவங்களுக்குள்ளே அடிச்சிப்பாங்க பாருங்க என்றார் டேனி. மேலும் உங்க பிறந்தநாளுக்கு கேக் திண்ண வாயாலேயே எப்படி உங்கள பத்தி தப்பா பேச முடியுது என்றும் கூறினார்.

விளக்கை அணைக்கும் போது சிறையில் இருந்த மஞ்சள் விளக்கை அணைத்துவிடுங்கள் என பிக்பாஸிடம் கெஞ்சினார் மகத். நம்ம தல அதையெல்லாம் கண்டுக்கொள்ளவில்லை.

அடுத்த நாள் காலையில் ஆலுமா டோலுமா பாடல் போட்டியாளர்களை எழுப்பியது. பலர் டேன்சாடினர். சிறிது நேரத்தில் மகத்தின் சிறைத்தண்டனை முடித்துவைக்கப்பட்டது. என்னா… பிக்பாஸ் என அலுத்துக்கொண்டார் மகத். அவரை இன்னும் சிறையில் வைத்திருக்க வேண்டும் என்றார். ஆமா.. இன்னும் வைத்திருக்காலம். வெளியே வந்து கத்திக்கொண்டு  திரிவதற்கு அது மேல் என நமக்கு தோன்றினால்.. நிச்சயம் தோன்றி இருக்கும்.

மகத் இப்படி புலம்பிக்கொண்டு இருக்க எனக்கு கூட தான் நீ வெளியே வந்தது பிடிக்கல என்றார் பாலாஜி. அதுக்கேட்டும் அமைதியாக சென்றார் மகத். சிறை வாழ்க்கை மனிதர்களை மாற்றி விடுமோ?

பெண்கள் பாலாஜி-நித்யாவின் காதல் கதையை பற்றி கேட்டுக்கொண்டு இருந்தனர். அவர்கள் இருவரும் மாற்றி மாற்றி அழகாக தங்கள் கதையை கூறினர். அவர்களுக்குள் இருக்கும் மனகசப்பு சரியாகி விட்டது போல தெரிகிறது. அப்படி இல்லை நண்பர்களாக தான் இருக்கிறார்கள் என்றும் யோசிக்க தோன்றியது. எதுவோ நல்லா இருந்தா நல்லது தான்.

ஜனனியின் துணிகளை மடித்துக்கொண்டு இருந்தார் மகத். ஜனனிக்கு துணி மடிக்க தெரியாதாம். என்னை போல தான் ஒரு பையனை பார்த்து கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சூசகமாக கூறினார் மகத். பெண்கள் வாழ்க்கையில் நிறைய கஷ்டப்படுகிறார்கள், எனவே வீட்டிலும் அவர்களை வேலை செய்ய விடக்கூடாது என்று அடடே என பேசினார் மகத். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த பாலாஜி.. நீ யாருன்னு எனக்கு தெரியும் என்பது  போல பார்த்துக்கொண்டு இருந்தார்.

உடனே ரம்யா நீங் க வீட்டுல வேலை செய்வீங்கல என பாலாஜியிடம் கேட்டார்.. உடனே நித்யா அதெல்லாம் செய்வாரு. வேலைக்காரம்மாவ டார்ச்சர் பண்ணிடுவாரு என்றார். உடனே அதில் டபுள் ட்ரிபுள் மீனிங்கெல்லாம் கண்டுப்பிடித்து சிரித்தனர். அதற்கு, நல்ல வேளை அந்தம்மா உன் வீட்டுல வேலை செய்யல என்று மகத்தை பார்த்து கூறினார் பாலாஜி. இதில் ஒரே மீனிங்  தான்.

பொன்னம்பலம் கொழம்பு கொஞ்சமாக  தான் வைக்கிறார் என்பது நேற்றைய கிட்சன் பிரச்னை இது பெரிதாக வெடிக்கவில்லை என்றாலும் மனகசப்பை உண்டாக்கி இருக்கும்.

நித்யா தனியாக டேனியிடம் பேசிக்கொண்டு இருந்தார். சென்றாயனிடம் எஸ்.ஐக்கு ஃபுல்ஃபார்ம் கேட்டது தவறு  என்று கூறினார். உண்மையில் டேனி சென்றாயனுக்கு சப்போர்ட் பண்ண தான் எழுந்து பேசினார். ஆனால் அவரை பேச விடமால் பாதியில் நிறுத்தி . அவர் பேசிய ஒரு வரிக்கு பல அர்த்தங்கம் கண்டுபிடித்து பிரச்னையாக்கி கொண்டு இருந்தனர்.

நித்யா பேசியதும் இது சென்றாயனை புண்படுத்தி இருக்கும் என்று அவரிடம் சென்ற விளக்கம் அளித்தார். சென்றாயனுக்கு வழக்கம் போல விஷயம் புரிந்ததா என தெரியவில்லை. பதிலுக்கு உன்ன பத்தி தெரியும் மாப்ள என்று கூறினார்.

திட்டம் போட்டு திருடுற கூட்டம் டாஸ்கில் திருடர்கள் அணிதான் வெற்றி பெற்றது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நித்யா. இந்த வார லக்சரி பொருட்களை அவர்கள் மட்டும் தான் வாங்கி பயன்படுத்த முடியும். அவர்கள் வென்ற 2000 புள்ளிகளுக்கு விதவிதமாக பொருட்கள் வாங்கினர். அனைத்தையும் எழுதி ஸ்டோர் ரூமிற்குள் கொண்டு செல்லும் போது, மற்ற  போட்டியாளர்களை நினைத்து வருத்தப்பட்டனர்.
இது முடிந்ததும் திருவிழா கோலத்தில் கார்டன் அலங்கரிக்கப்பட்டத்தை பார்த்து ஆச்சரியப்பட்டனர் போட்டியாளர்கள். அதற்கு முன்பே அவர்கள் திருவிழாவிற்கு செல்வது போலதான் தயாராகி இருந்தனர். அப்படி இருக்க எதற்கு அந்த ஆச்சரியம். என்னவோ..

அவர்கள் உற்சாகத்தை அதிகமாக்கும் விதமாக வீட்டிற்கு கடைக்குட்டி சிங்கம் குழுவினர் வந்தனர். கார்த்தி, சூரி, இயக்குநர் பாக்கியராஜ் ஆகியோருக்கு வரவேற்பு அளித்து உள்ளே அழைத்து சென்றனர். டைனிங் டேபிள் சுத்தமாக இல்லாததால் அவர்கள் பார்ப்பதற்குள் சுத்தம் செய்தார் மும்தாஜ்.

மகத் சூரியிடம் எப்படி இருக்க மாப்பிள என்று கேட்டதும்.. நல்லா தான் மாப்பிள இருக்கேன் நீ உள்ள இருக்கல என்றார் சூரி.
வீட்டிற்குள் வருவதற்கு முன்பு நிகழ்ச்சி பற்றி நல்லா விசாரித்து வந்திருக்கிறார்கள். பெண்கள் அறைக்குள் மகத்தின் ஆடை இருப்பதை பார்த்து மூன்று பேரும் அதிர்ந்தனர். நீ யாரையோ அடிக்க போனியே என கேட்டார் பாண்டிராஜ். ஆமா.. ஆமா.. பாலாஜிய என மகத் பதிலளித்தார். அப்படியே சிம்புவ பார்க்கிற மாதிரியே இருந்தது என கூறினார் பாலாஜி.

கார்த்தியிடம் நிகழ்ச்சி குறித்து எப்படி பேசிக்கொள்கிறார்கள் என டேனிகேட்டறிந்தார். கார்த்தி, நீங்க எல்லாரும் நடிக்கிறீங்க என்று பேசிக்கிறாங்க என்றார். அதான் எங்களுக்கே தெரியுமே என்பது போல ரியாக்ட் செய்தனர் போட்டியாளர்கள்.

வீட்டை சுத்தமாக வைத்திருக்கவில்லை மன்னித்து விடுங்கள் என விருந்தாளிகளிடம் கூறினார் மும்தாஜ். வீட்டில் இருந்த யாருக்குமே இதுப்பற்றி கவலை இல்லை. தற்போதைக்கு பெண்களில் மூத்தவர் மும்தாஜ் மட்டும் தான் என்பது கூட காரணமாக இருக்கலாம்.

கத்தை தனியாக அழைத்து… உங்களுக்கு தான் வெளிய ஆள் இருக்குல அப்றம் ஏன்டா உள்ள இப்படி பண்ணிட்டு இருக்கீங்க என்று கேட்டார் சூரி. இங்க என்ன பண்ண முடியும் விளையாட்டுக்கு தான் என்றார் மகத்.

நீங்க விளையாடுறதுக்கு அந்த சின்ன பொண்ணு தான் கிடைச்சுதா.. பெரிய மனுஷன் முன்னாடி கண்டதும் பண்ணிட்டு என சூரி கூற பதறினார் மகத். யூட்டியூப்பில் எல்லாம் வீடியோ போட்டு அசிங்கப்படுத்துகிறார்கள் என சூரி எச்சரித்தார். இனியாவது மாற்றம் இருக்குமாஎன பார்ப்போம்.

பின் வந்திருந்த விருந்தாளிகளும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். ஐஸ்வர்யா ஒவ்வொருவரின் பட்டப்பெயர்களை அவர்களுக்கு கூறினார். பின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் டிரைலரை போட்டியாளர்கள் பார்த்தனர். படத்தில் இருக்கும் 5 கேரக்டர்களுக்கு வைத்திருந்த 5 பட்டப்பெயரை கூறி இந்த வீட்டில் இருப்பவர்களுக்கு வைக்க சொன்னார் இயக்குநர்.

சதி லீலாவதி ரித்விகா, சண்டகோழி மகத், ரத்தகண்ணீர் நித்யா, உளவுத்துறை வைஷ்ணவி, பாசமலர் ரம்யா என போட்டியாளர்கள் தேர்வு செய்தனர். அந்த பெயருக்கு ஏற்றார் போல நடித்தும் காட்டினர் சிலர்.

பின் தம்ஷராத் விளையாடினர். ஏற்கனவே  போர் அடிக்கும் வீட்டில் இந்தகாட்சிகள் எல்லாம் தேவையா என்பது போல தான் இருந்தது. ஆனால் வீட்டில் இருந்தவர்களுக்கு இவை நிச்சயம் நல்ல பிரேக்காக இருந்திருக்கும்.பின் விருந்தாளிகள் நேரம் முடிந்துவிட்டதாக பிக்பாஸ் அறிவித்தார். வெளியே செல்வதற்கு முன்பு பாலாஜி-நித்யாவுக்கு அறிவுரை கூறினார் பாண்டிராஜ். குழந்தைக்காக ஒண்ணா வாழுங்க.. நான் நிறைய பேர சேர்த்து வெச்சிருக்கேன் (இந்த இது நம்ம ஆளு.. படம் இருக்குல.. சரி… நமக்கேன்).. வெளியே வந்ததும் வீட்டுக்கு வாங்க என அக்கறையாக பேசினார்.

அவர்கள் வெளியே சென்றதும், தன்னை உளவுத்துறை என மற்றவர்கள் கூறியது தனக்கு பிடிக்கவில்லை என ரம்யா, ஜனனியிடம் கூறிக்கொண்டு இருந்தார் வைஷ்ணவி. கார்த்தி முன்னாடி அப்படிதான் பேசுவாங்கல.. நான் இப்போ புறம் பேசுறது இல்லையே ஆதங்கப்பட்டார்.

இதெல்லாம் நடக்க.. டாஸ்க்கில் வென்ற திருடர்களுக்கு லக்சரி பொருட்கள் வந்தன. அவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டு அவர்கள் திருடர்களாக வாழ்ந்த இடத்திற்கே சென்று சாப்பிட்டனர். சென்டிமென்டில் சீரியல்களை தோற்கடிக்கிறார்கள். சாப்பிடுவதற்கு முன், “நாங்க இந்த இடத்தில் தான் டாஸ்க்கிற்காக சாப்பிடாமல் இருந்தோம். இப்போ ஒன்னு தெரியுது. வாழ்க்கையில் பல கஷ்டங்கள் வந்தாலும்.. அதை அனுபவித்து விட வேண்டும். அப்போது தான் நம்மால் பின்னர் பார்டி பண்ண முடியும்” என்றார் யாஷிக்கா.. பாரேன் இந்த பிள்ளைக்குள்ளும் என்னவோ இருக்கு என்பது போல இருந்தது.

நாளை நாட்டாமை தினம்.. மகத் பிரச்னை மட்டுமே இந்த வாரத்தின் பிரதானம்.. பேசுவாரா ஆண்டவர்?

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close