அரசியல் நெடி வீசும் பிக்பாஸ் ப்ரோமோ

  திஷா   | Last Modified : 14 Jul, 2018 07:24 pm
bigg-boss-promo-1

பிக்பாஸின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. மற்ற நாட்களைக் காட்டிலும் வார இறுதியில் சற்று தாமதமாக பிக்பாஸ் ப்ரோமோ வெளியாகும். இந்த வாரம் நடந்த திருடன் போலீஸ் டாஸ்க்கை குறிப்பிட்டு பேசுகிறார் கமல். 'காவல்துறை பொதுமக்களுக்கு நண்பன் சரியா? திருடர்களின் பகைவன். ஆனால் இங்க, திருடர்கள் காவல் துறைக்கு உதவுறாங்க. பொது மக்கள் உதறுகிறார்கள்' என்கிற கமல், ஒருபடி மேலே போய் 'இங்க பிக்பாஸ்ல' எனக் குறிப்பிடுகிறார். 

வாரா வாராம் எதாவது அரசியல் கருத்தை எதிர்மறையாக தூவும் கமல், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டையும் வீட்டில் நடந்த டாஸ்கையும் இணைத்துப் பேசுகிறார் என்றே தோன்றுகிறது. பொது மக்கள் உதறுகிறார்கள் என்ற வார்த்தையும் இதை சரியாக கனெக்ட் செய்கிறது. 

இன்னும் என்னென்ன சொல்கிறார் என்பதை இரவு பார்ப்போம். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close