#BiggBoss Day 27: மெஜாரிட்டி மக்கள், மைனாரிட்டி அரசு.. கமலின் அரசியல்

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2018 12:32 pm

what-happened-in-biggboss-day-27

நாட்டமை வரும் நாள்.. பார்வையாளர்களிடம் இருக்கும் கேள்விகளை கமல் போட்டியாளர்களிடம் கேட்டாரா?

தொடக்கத்திலேயே கமல் பேச்சில் அரசியல் நெடி. பொது மக்கள் தான் மெஜாரிட்டி, பொறுப்பில் இருப்பவர்கள் மைனாரிட்டி…
மைனாரிட்டியின் அட்டகாசத்தால் மக்கள் வெதும்பி அவர்கள் போலீசாரையும் தாண்டி அராஜகம் செய்ய தொடங்கினர், என்று பேசிவிட்டு இது பிக்பாஸ் வீட்டில் நடப்பது என்றார்.. ஓ…

பின் சென்ற வாரம் நடந்த காட்சிகளும், வெள்ளி அன்று நடந்த காட்சிகளும் காட்டப்பட்டன. மெர்சல் அரசன் பாடலோடு 27ம் நாள் விடிந்தது. பாட்டு முடிந்ததும், பிரேக்பாஸ்ட் செய்ங்க பசிக்குது என்றார் மும்தாஜ். பின் நீண்ட ஆலேசானைக்கு பிறகு சென்றது குக்கிங் அணி.
சமையல் அறையில் அனைவரும் இருந்து வேலை செய்து பிரச்னையானது. மற்றவர்கள் வேலை செய்யஅந்த அணியில் இருக்கும் பொன்னம்பலம் பெட்ரூமில் வந்து அமர்ந்து கொண்டார்.

வீட்டின் தலைவி நித்யா இதுப்பற்றி கூற அவர் தான் எங்கள செய்ய சொன்னாரு என கையை நீட்டினர் போட்டியாளர்கள்.நான் அப்படி சொல்லவே இல்லையே என பொன்னம்பலம் மறுக்க மற்ற போட்டியாளர்களுக்கு சாட்சியாக வந்தார் மும்தாஜ். வெள்ளிக்கிழமை முழுக்க சாப்பாட்டு பிரச்னை தான் நடந்தது போல.

அவை அனைத்தும் முடிந்ததும் போட்டியாளர்களிடம் பேசினார் கமல். தொடக்கத்திலேயே மகத்திடம் அது தான் உங்க நிரந்தர இடமா என்று கேட்டார். மகத் ஐஸ்வர்யாவுக்கும் யாஷிக்காவும் நடுவில் அமர்ந்திருந்தார். பின் திருடன் போலீஸ் டாஸ்க்கின் அனுபவம் பற்றி ஒவ்வொரு போட்டியாளர்களும் கூறினர்.

இதில் போலீசா இருப்பது ரொம்ப கஷ்டம் என்பதை உணர்ந்து கொண்டதாக கூறினார் மகத். பின் திருடனாக இருந்தது  கூறித்து பேசினார் யாஷிக்கா.. அதில் தனது சொந்த அனுபவத்தை எல்லாம் பகிர்ந்து கொண்டார். இந்த டாஸ்கில் சிறப்பாக செயல்பட்டதற்காக யாஷிக்காவுக்க பிக்பாஸ் பரிசு கொடுக்கப்பட்டது.

பின் மோசமான போட்டியாளராக ரம்யாவை முதலில் தேர்வு செய்து பின் ஷாரிக்கிற்கு அந்த பட்டம் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்க்கையே நிறுத்திய அப்போதைய தலைவிக்கு தகுதியற்ற தலைவி என்ற பட்டத்தை வழங்கினர்.

பின் அந்த டாஸ்கின் போது ஏற்பட்ட முக்கியமான குழப்பமான சாப்பாட்டை பற்றி பேசினர். சென்றாயன் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கூறினார். கமலும் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

கடைசியாக எவிக்ஷனுக்கு வந்தனர். பாலாஜி, நித்யா, பொன்னம்பலம், யாஷிக்கா ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தனர். அதில் போட்டியாளர்கள் யார் வெளியே செல்லக்கூடாது என்று நினைக்கிறார்களோ அவர்கள் அருகில் சென்று அமர்ந்து கொள்ளலாம். யாஷிக்கா பக்கம் டேனி, ஐஸ்வர்யா, மகத், ஷாரிக் சென்றனர். பாலாஜிக்கு ஜனனி, சென்றாயன் சப்போர்ட் , நித்யாவிற்கு வைஷ்ணவி, ரம்யா சப்போர்ட், பொன்னம்பலத்திற்கு ரித்விகா, மும்தாஜ் சப்போர்ட்.

ஏன் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பதை பற்றி தனிதனியாக விளக்கினர். பின் பொன்னம்பலம் எவிக்ஷனில் இருந்து தப்பிப்பதாக அறிவித்தார் கமல். இன்னும் இருக்கும் மூவரில் இன்று ஒருவர் வெளியேற உள்ளார். யாராக இருக்கும்?

பிக்பாஸ் 2 : றிமுக நாள்  I முதல் நாள்   I  2ம் நாள்   I   3ம் நாள்   I   4ம் நாள்   I   5ம் நாள்  I   6ம் நாள்  I   7ம் நாள்  I  8ம் நாள் I 9ம் நாள்  I

10ம் நாள்   I   11ம் நாள் I   12ம் நாள்   I  14ம் நாள்   I   15ம் நாள்   I   16ம் நாள்   I   17ம் நாள்   I   18ம் நாள்   I   19ம் நாள் I   20 நாள் 

 I   21 நாள்  I   22 நாள்  I   23 நாள்  I   24 நாள்  I   25 நாள்  I   26 நாள் 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.