பிக்பாஸில் இருந்து நித்யா வெளியேற்றம்?

  Newstm Desk   | Last Modified : 15 Jul, 2018 10:09 am
nithya-to-evict-from-biggboss-today

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இருந்து நித்யா இன்று எவிக்‌ஷன் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

கமல் தொகுத்து வழக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் 3 வாரங்களை கடந்து சென்றுக்கொண்டு இருக்கிறது. இதில் மமதி, அனந்த் ஆகியோர் எவிக்ட்டான நிலையில் இன்று 3வதாக யார் வெளியேற உள்ளார்கள் என்பது அறிவிக்கப்படும். நேற்றைய நிகழ்ச்சியில் பொன்னம்பலம் எவிக்‌ஷனில் இருந்து எஸ்கேப்பாக இன்று மீதம் இருக்கும் 3 பேரில் ஒருவர் பெயர்  அறிவிக்கப்பட உள்ளது.

இதில் நித்யா வெளியேற்றப்படுகிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் பாதி சுவாரஸ்யம் நித்யா-பாலாஜியால் தான் நடக்கிறது. மற்றொருப்பக்கம் அவர்கள் இந்த வீட்டை விட்டு வெளியேறும் போது மனகசப்பை எல்லாம் சரிசெய்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் நித்யா வெளியேற இருப்பதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். எனினும் இன்றைய நிகழ்ச்சியில் எவிக்‌ஷனே இல்லை என கமல் அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது.

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close