கண்ணீர் வர வைக்கும் பிக்பாஸ் ப்ரோமோ - 2

  திஷா   | Last Modified : 15 Jul, 2018 12:45 pm
bigg-boss-promo-2

பிக்பாஸின் இரண்டாவது ப்ரோமோவும் வெளியாகி விட்டது. இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறுவார் என்கிற எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில், ஹவுஸ்மேட்ஸ் அழும் படியான ப்ரோமோ தான் இப்போது வெளியாகியிருக்கிறது. 

'வீட்டில் இல்லமலேயே அதிகமாக உலவிய பெயர் போர்ஷிகா' என கமல் சொன்னவுடன் பாலஜியின் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் பெருகுகிறது. 'டாடி எப்படி இருக்கீங்க' என பாலாஜியின் குழந்தை அவருடன் ஃபோனில் பேசுகிறது. கட்டுப்படுத்த முடியாமல் பாலாஜி அழுகிறார். உடன் யாஷிகா, ஜனனி, மும்தாஜ் ஆகியோரும் அழுகிறார்கள். 'அழுவாதிங்க' என அந்தக் குழந்தை சொல்கிறது. 

ஐ லவ் யூ என பாலாஜி சொன்னதும், ஐ லவ் யூ டூ டாடி என போர்ஷிகா சொல்கிறாள். அப்பா மகளின் இந்த பாச உரையாடல் வீட்டில் இருப்பவர்களை மட்டுமல்ல பார்க்கும் நம்மையும் உணர்ச்சி வசப்பட செய்கிறது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close