#BiggBoss Day 28: யூ டூ கமல்? - டி.ஆர்.பி ஏத்த என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2018 12:31 pm
what-happened-in-biggboss-day-28

நேற்றைய நிகழ்ச்சியில் மனைவியை மீண்டும் பிரிந்த கணவன், தந்தையை எட்டு மாதத்திற்கு பிறகு சந்தித்த மகள் என ஏகப்பட்ட எமோஷனல் சீன்கள்.. 28வது நாள் என்ன நடந்தது..

அகம் டிவி வழியே கமலை பார்த்ததும் வழக்கம் போல கமலின் ஆடை நல்லா இருக்கு என்ற காம்ப்பிளிமெண்டோடு தொடங்கினர் போட்டியாளர்கள். கமல் நிற்கிறார் என்றதும் மும்தாஜ் உக்காருங்க சார் என்றார். நீங்க உங்காருங்க இப்போ நான் கேட்டா.. ‘நாற்காலிக்கு ஆசப்பட்றேன்’னு சொல்லிடுவாங்க என்றார். ஆண்டவரே!

பின் டாப்ஸ்மேஷ் செய்துகாட்டசொல்லி போட்டியாளர்களிடம் கூறினார். வீட்டின் முக்கிய ஆட்களான சென்றாயன், வைஷ்ணவி, பொன்னம்பலம், மும்தாஜின் வீடியோக்கள் ஒலி இல்லாமல் காட்டப்பட அதற்கு சிலர் குரல் கொடுத்தனர்.

இதில் வைஷ்ணவியின் வீடியோவிற்கு குரல் கொடுத்த போது கொஞ்சம் ஏடாகுடமாக பேசினார் பொன்னம்பலம். சென்றாயன் மற்றும் யாஷிக்கா இருந்த வீடியோவை கல்யாண வேண்டுகோள் வீடியோ போல பேசினார் பொன்னம்பலம். உண்மையாகவே அந்த சீனில் அவர்கள் அதைப்பற்றி தான் பேசிக்கொண்டனராம்.

உடனே யாஷக்காவுக்கு சென்றாயன் பிரோபோஸ் செய்தது பற்றி உங்களுக்கு தெரியுமா என மகத்திடம் கேட்டார் கமல். போட்டியாளர்கள் அனைவரும் கூச்சலிட வெறும் நண்வர்கள் மட்டும் தான் என்றார் மகத். ஆஹாங்.. என்பது போல கமல் ரியாக்ஷன் கொடுத்து முடித்துக்கொண்டார்.

அந்த டாஸ்க் முடிந்தும்.. டாப்ஸ்மாஷ் அப்போது இருந்திருந்தால் என் கலை இன்னும் செழித்திருக்கம் என்றார் கமல். அவர்கள் செய்தது டப்ஸ்மாஷ் இல்லை டப்பிங் என்று கமலிடன் யாராவது கூறியிருக்கலாம். மேலும் டப்ஸ்மாஷால் நடிப்பு கலை வளரும் என்று கூறும் கமலுக்கு நாளு மீயூசிக்கலி வீடியோ பார்சல் அனுப்பினால் தேவலாம்.

பின் கமலுக்கு இருக்கை கொடுக்கப்பட்டது… நற்காலி இல்லை ஒட்றகாலி என்றார். கமலின் தமிழை ரசிக்கக்கூடிய மனநிலை நேற்றைய ஞாயிறு இரவில் யார்யாருக்கெல்லாம் கிடைத்தது அவர்களுக்கான சீன் அது.

பின் சென்ற வார எவிக்ஷனில் பிரிந்த குழுக்கள் படி அனைவரும் அமர்ந்தனர்.  ஒவ்வொருவராக ஏன் அந்த மற்றவரை நாமினேட் செய்தீர்கள் என்று விளக்கினர். இதில் பெரும்பாலும் நாங்களே கேட்டுக்கிட்டோம் என்ற பதில்கள் வந்தன.

பாலாஜி பேசும்போது மற்றவர்கள் என் பெயரை கூறும் முன்பு நானே கூறிவிட்டேன் என்றார். நித்யாவின் பெயரை கூறியதற்காக வருத்தப்பட்டார் ரம்யா. யாஷிக்கா சென்றுவிடுவாரோ என்று ஐஸ்வர்யா அழுதார். மகத் அழுவது போல எதையோ செய்தார். பொன்னம்பலம் தனது அணியில் இருப்பவர்கள் இளம் வயதினர் அவர்கள் இந்த வீட்டில் இருக்கட்டும் என்பதால் தானாக முன்வந்து செய்ததாக கூறினார். அப்போது வைஷ்ணவியை ஆர்வக்கோளாறு என்றும்,  ஷாரிக்கிற்கு நல்ல குடும்பம் உள்ளது அவங்க பேரை காப்பத்தனும் என்றார்.

இந்த உரையாடல் முடிந்த இடைவேளையில், எனக்கு மட்டும் நல்ல குடும்பம் இல்லையா என தனது நண்பர்களிடம் கேட்டுக்கொண்டு இருந்தார் ஐஸ்வர்யா.. ஷாரிக்கிற்கான அறிவுரைகள் அனைத்தும் ஐஸ்வர்யாவை பாதிக்கிறது. இதற்கு போட்டியாளர்கள் ஆறுதல் தெரிவித்தனர்.

பின் யார் நாமினேட்டாகிறார்கள் என்ற அறிவிப்பு இருக்கும் கார்ட்டுடன் வந்தார் கமல். அதை வைத்துக்கொண்டு போட்டியாளர்களுக்கு விளையாட்டு காட்டினார்.

முதலில் பாலாஜி காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார். பின் பாலாஜி பேசும் போது நித்யாவிடம் பேச வாய்ப்பு கிடைத்தது நினைத்து சந்தோஷப்படுவதாக கூறினார். பாலாஜி காப்பாற்றப்பட்டது தெரிந்ததும் மேலும் அழத் தொடங்கினார் ஐஸ்வர்யா. அவர் அழுது  முடிக்கட்டும் சொல்றேன் என கூறிவிட்டு சென்றார் கமல்.

அந்த இடைவேளையில் பொன்னம்பலம் தன்னை பற்றி டப்ஸ்மேஷின் போது கூறியது தவறு என வைஷ்ணவி கூறினார். நான் தப்பா எதுவும் சொல்லல மா.. நீ யார வேணா கேட்டுக்கோ என்றார் பொன்னம்பலம். பின் அவர் மற்றவர்களிடம் கேட்டு அது தவறு என தெரிந்ததும் மன்னிப்பு கேட்டார். இதற்கு முன்னர் யாஷிக்கா ஒரு முறை கூறினார்..No one can say sorry. After killing a Person.. என்பதை பொன்னம்பலம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அவர் பேசிவிட்டு மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்துக்கொள்கிறார்.

மீண்டும் கமல் கார்ட்டை காட்டி ஏமாற்றி கொண்டு இருந்தார். பின் வெளியேற இருப்பவர்களின் பெயர் மூன்று எழுத்து என்றார். யாஷிக்கா பெயருக்கு 'க்' போடவேண்டும் தான். கமலுக்காக அப்போதைக்கு எடுத்துவிடலாம். அப்போது தான் அந்த விளையாட்டு கொஞ்ம் சுவாரஸ்யமாகும்.

நித்யாவும் 3 எழுத்து, யாஷிக்காவும் 3 எழுத்து.. யாராக இருக்கும் என போட்டியாளர்கள் யோசிக்கும் போது நித்யா என அறிவித்தார்.
அனைவரும் நித்யாவை கட்டியணைத்துவிட்டு பாலாஜியிடம் பேசுங்கள் என அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். கோபப்படதா, வின் பண்ணிட்டு வா என கூறிவிட்டு சென்றார் நித்யா. அந்த காட்சிகள் பார்க்க அழகாக தான் இருந்தது. பல மாத மனகசப்பு 27 நாட்களில் குறைந்திருக்கும், தீர்ந்திருக்குமா என்ன? இருந்தாலும் நித்யா-பாலாஜிக்கு இடையே நல்ல நட்பு மீண்டும் உருவாகி இருப்பதை பார்க்க முடிந்தது.

பிக்பாஸ் கொடுத்த செடியை பாலாஜியிடம் ஒப்படைத்துவிட்டு வெளியே சென்றார் நித்யா. அவர் வெளியே சென்றதும் பாலாஜி அழத்தொடங்கினார். இருந்தும் போஷிக்காவை இனி நித்யா பார்த்துக்கொள்வார் என்பதை நினைத்து நிம்மதி அடைந்தார்.

பின் வெளியே வந்த நித்யா.. உங்கள தான் பார்ககனும் ஆனா இங்க போஷிக்கா இருக்காலான்னு தான் தேடுறேன் என கூறினார். அவங்க இங்க வரல என்று கூறிவிட்டு வீட்டின் அனுபவம் பற்றி கேட்டார். 50 நாட்கள் இருந்து வெளியேறுவதை விட இது நல்லது என்று மகிழ்வதாக நித்யா கூறினார். பின் குறும்படம் காட்டப்பட்டது. பார்த்துவிட்டு அழுத நித்யா, ஒரு வருஷத்திற்கு பிறகு பாலாஜியை பார்க்குறேன். இனி விதிப்படி என்ன நடக்குதோ அதை செய்வேன் என்றார். கமல் அதைப்பற்றி பெரிதாக பேசிக்கொள்ளவில்லை.

மீண்டும் போஷிக்காவை பற்றி கேட்டார் நித்யா. இப்போது பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பற்றி தான் பேச வேண்டும் என்றும் கூறிவிட்டு ஒவ்வொருவர் பற்றியும் ஒரு வார்த்தையில் எழுதும் சம்ப்பிரதாய பிக்பாஸ் டாஸ்க்கை கொடுத்தார் கமல்.

தனது பெயருக்கு நான், பாலாஜிக்கு அன்பு, ரம்யா உண்மை, சென்றாயன் பாசம், பொன்னம்பலம் அக்கறை, ரித்விகா பொறுமை, டேனி வளர்ச்சி, ஷாரிக் பிளே பாய், மகத் எமோஷன், ஐஸ்வர்யா குழந்தை, ஜனனி பிளேசண்ட், யாஷிக்கா மன உறுதி, வைஷ்ணவி சாதனையாளர், மும்தாஜ் டிராமா குயின் என எழுதினார். அவர் எழுதும் போது கமால் ஜோக் சொல்ல முற்பட்டார். அதைப்பற்றி திரும்பி பேசாமல் இருப்பது தான் நமக்கும் நம்மவருக்கும் நல்லது.

இதன் முடிவில் போஷிக்கா அரங்கிற்குள் வந்தார். மகளை பார்த்ததும் கட்டியணைத்துக்கொண்டார் நித்யா. அவருக்கு போஷிக்கா சமாதானம் கூறினார். அடிக்கடி நித்யா தனது மகளை பற்றி கூறியது போல போஷிக்கா கொஞ்சம் தெளிவாக சிந்திக்கும் குழந்தை போலவே தெரிந்தார்.

தாயின் அன்பையும், தந்தையும் மிஸ் பண்ணியதாக போஷிக்கா கூறினார். பின் அவர்களின் அனுமதியுடன் பாலாஜியிடம் பேச வைத்தார். போட்டியாளர்கள் அனைவரும் உற்சாகமடைய பாலாஜி தனது மகளை பார்த்தும் கண்கலங்கினார். மற்ற போட்டியாளர்களும் அழுதனர். பாலாஜியிடம் போஷிக்கா ஹாய் என கூறுயதும் கமலும் கொஞ்சம் ஆடிப்போனார்.

பின் எப்படி இருக்கீங்க, அழாதீங்க, என மகள் கூறுவதையே பார்த்துக்கொண்டு இருந்தார் பாலாஜி. பின் லவ்யூ என அவர் கூற.. லவ் யூ டூ என போஷிக்கா கூறினார். பின் பெரிய மகளுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் என கமல் கேட்டதும், சின்ன மகளை நல்ல பார்த்துக்க என பாலாஜி கூறியது அத்தனை அழகு. பின் இருவருக்கும் சேர்த்து லவ் யூ போத் என்றார் பாலாஜி. நித்யா, “சேம் ஹியர்” என்றார்.
இந்த உரையாடல் முடியும் போது, தனது தந்தை போல போஷிக்காவை ஆசிர்வாதம் செய்யுமாறு கமலிடம் பாலாஜி கேட்க, குழந்தையை தூக்கி முத்தமிட்டார் கமல்.

அதோடு அந்த உடையாடல் முடிந்தது. நித்யாவை அனுப்பிவைத்த பிறகு… நான் நான் தான் நீங்க நீங்க தான் என்பது போல கமல் பேசிவிட்டு சென்றார். உண்மையில் அவர் பேசியது புரியவில்லை. தனது மகளை பார்த்தது குறித்து பாலாஜி சந்தோஷமாக வீட்டில் இருப்பவர்களிடம் கூறிக்கொண்டு இருந்தார். போஷிக்கா பேசிய போது பின்னால் இருந்த போர்டில் நித்யா எழுதி இருந்ததை போட்டியாளர்கள் பார்த்துவிட்டனர். அதைப்பற்றியும் உரையாடல்கள் நடந்து கொண்டு இருந்தன.

கடைசியாக பாலாஜி தனியாக அமர்ந்து அழுதுக்கொண்டு இருப்பது போன்ற காட்சிகள் காட்டப்பட்டன. அந்த வீட்டில் கலகல என பேசிக்கொண்டிருந்த பாலாஜியும் இனி பேசமாட்டார்… அவ்வபோது சுவாரஸ்யம் ஏற்றி வந்த கணவன்-மனைவி சண்டையும் இனி நடக்காது என்பதை நினைக்கும் போது பாலாஜியை விட பிக்பாஸ் பாவமாக இருக்கிறார்.

ஆனால் ஒன்று.. நேற்றைய நிகழ்ச்சியில் அத்தனை நெகிழ்ச்சி சம்பவங்கள் நடக்கவிட்டு வேடிக்கை பார்த்தாரே பிக்பாஸ் என்ன அவ்வளவு நல்லவரா?..

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close