#BiggBoss Promo: பிக்பாஸ் வீட்டில் கவிஞர் சினேகன்

  Newstm Desk   | Last Modified : 17 Jul, 2018 09:19 am
biggboss-promo-snegan-coming-to-house

முதல் சீசனில் இரண்டாவது வெற்றியாளர் கவிஞர் சினேகன் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார். 

இன்றைய பிக்பாஸ் முதல் பிரோமோவில் வீட்டில் இருக்கும் அனைவரும் பள்ளி குழந்தைகள் போல உடையணிந்து இருக்கின்றனர். சும்மாவே கூச்சலிடும் போட்டியாளர்கள் குழந்தைகள் வேடமிட்டதும் பிரேமோவே ஹரி படம் போல உள்ளது. இந்த டாஸ்க்கிற்கு 'கனா காணும் காலங்கள்' என பெயராம். அனைவரையும் கவர்ந்த சீரியலின் பெயரை வைத்து மக்களை இழுக்கப் பார்க்கிறார் பிக்பாஸ். அதில் சிக்காமல் தப்பித்துக்கொள்வது நலம்.

பிரோமோவில் மிக பெரிய சர்ப்பரைசாக கவிஞர் சினேகன் வீட்டிற்குள் வருகிறார். பிக்பாஸ் குழந்தைகளின் ஆசிரியர் போல அவர். சென்ற சீசனிலும் அவர் தான் இந்த டாஸ்கின் போது ஆசிரியராக இருந்தார். மேலும் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் உண்ணும் போதாவது ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close