#BiggBoss Day 29: சும்மாவே மகத் அப்படி.. இப்போ தலைவர் பொறுப்பு வேற!

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2018 12:30 pm

what-happened-in-biggboss-day-29

நித்யா வெளியேறியது பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னென்ன மாற்றங்களை உண்டாக்கும் என முதல் நாளிலேயே கூறிவிட முடியவில்லை. நேற்றைய நிகழ்ச்சியில் எவிக்‌ஷன், தலைவர் தேர்வில் போட்டியாளர்கள் பிசியாக இருந்ததால் எந்த பிரச்னையும் நடைபெறவில்லை. ஆனால் அவர்கள் தேர்ந்தெடுத்த தலைவரே பிரச்னையாவதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளன. 

இறுதிக்கட்டத்தில் நானும் நீயும் இருந்தால் கோப்பையை ஷேர் செய்துக் கொள்ளலாம் என ஷாரிக்கிடம் மகத் கூறிக்கொண்டு இருந்தார். தான் செய்யும் தவறுகளை தாண்டியும் அவர் இறுதி வரை செல்வோம் என்ற நம்பிக்கையுடன் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஆனாலும் அரசல் புரசலாக தன்னை பற்றி வெளியே தவறாக பேசிக்கொள்கிறார்கள் என்று தெரிந்ததும் மகத் நடவடிக்கையில் பல மாற்றங்கள் தெரிகிறது. அதனை வெளிப்படுத்தும் விதமாக 'வென்றால் 50 லட்சம் கொடுத்தாங்கனா... அதில் குறிப்பிட்ட தொகையை உதவி செய்வதற்காக அளிக்கனும்' என்றும் கூறினார். 

முன்னர் ஒரு முறை டீ கப்பில் முட்டை வாடை வருவதாக போட்டியாளர்கள் பலர் தெரிவித்து இருந்தனர். மீண்டும் அதே போல ஒரு கப்பில் முட்டையை கலந்து வைத்திருந்தார்கள். கிண்ணம் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம். 

புதிய சிகை அலங்காரத்துடன் இருந்தார் பொன்னம்பலம்.. சோபாவில் அமர்ந்து தூங்கிய ரித்விகாவை "நைட்டுலாம் முழிச்சிருந்துட்டு இப்போ தூங்குது பாரு இந்த கோழி" என்றார். நல்லவேளை ரித்விகா என்பதால் அது பெரிய விஷயமாக மாற்றப்படவில்லை. யாஷிக்காவோ ஐஸ்வர்யாவோ இருந்திருந்தால் பஞ்சாயத்து நடந்திருக்கும். 

பொன்னம்பலம் 'சந்தன காற்றே' என பாட தொடங்க அவருடன் ஜனனியும், ரித்விகாவும் இணைந்துக் கொண்டனர். அவர்கள் குரலுடன் கேட்கும் போது நல்லா தான் இருந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த சென்றாயன் கண் வைத்தாரோ என்னவோ லா..லா.. எனப்பாடத் தொடங்கினார்கள். இப்போ தானே நல்லா இருக்குனு சொன்னேன் அதற்குள் இப்படியா.. என்ற உணர்வு வந்தது. 

பின் அந்த கச்சேரியை நிறுத்தும் விதத்தில் அந்த கூட்டத்தோடு பாலாஜி, வைஷ்ணவியும் சேர்ந்துக்கொள்ள அவர்கள் அனைவரும் சோபாவில் அமர்ந்தப்படியே நாடகம் நடத்தினர்.  பாலாஜி 3 மகள்களின் அப்பா. அவரது மகள்களில் ஒருவரை தனது மகனுக்கு பெண் கேட்டு வருகிறார் பொன்னம்பலம். வைஷ்ணவி, ஜனனி, ரித்விகா ஆகியோர் பாலாஜியின் மகள்கள். 

இந்த நாடகத்தில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங், புரியாத வசனங்கள் என குழப்பம் ஃபேக்டர்கள் அதிகமாக இருந்ததால் அதனை அப்படியே நகர்த்திவிட்டு அடுத்த விஷயத்திற்கு நகர்வோம். 

சென்ற வாரத்தின் தற்காலிக தலைவியாக இருந்த நித்யா வெளியேறிவிட்டார். எனவே இந்த வாரத்திற்கான தலைவர் போட்டி நேற்று நடந்தது. போட்டியாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் மாலையை யாருக்கு அணிகிறார்களோ அவர்களுக்கு அடுத்தக்கட்ட போட்டி நடத்தப்பட்ட தலைவர் பதவி அளிக்கப்படும். 

இதில் எதிர்பார்க்காத விதமாக பாலாஜி, மகத், ஷாரிக்கிற்கு மாலைகள் கிடைத்தன. தலைவர் பதவிக்கான அடுத்தக்கட்ட போட்டி அறிவிப்பதற்கு முன் அந்த மூன்று பேரும் தாங்கள் மிகவும் நம்பும் ஒருவரை உதவிக்காக தேர்வு செய்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு பாலாஜி ஜனனியையும், மகத் டேனியையும், ஷாரிக் யாஷிக்காவையும் தேர்வு செய்தனர். 

அடுத்த டாஸ்க்கிற்கான அறிவிப்பு வருவதற்கு இடையே மூன்று தலைவர் வேட்பாளர்களும் அமர்ந்து விதவிதமான முகபாவங்களை காட்டிக்கொண்டு இருந்தனர். அதற்கு காரணம் தெரியவில்லை. அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வழியாக சென்ற பொன்னம்பலத்தின் புது ஹேர் ஸ்டைலை பார்த்து "முதல்ல கோயிலுக்கு சாமிக் கும்பிட போறவர் மாதிரி இருந்தாரு.. இப்போ உண்டியல் திருடுற மாதிரி இருக்காரு" எனக்கூறினார் பாலாஜி. நல்ல வேளை பாலாஜி எவிக்ட்டாகவில்லை என தோன்றியது. அவர் மட்டுமே கொஞ்சமாவது சிரிக்க வைக்கும் போட்டியாளராக இருக்கிறார். 

பின் அடுத்த போட்டி அறிவிக்கப்பட்டது. தலைவர் போட்டியாளர்களை சுற்றி சங்கிலி போட்டு அவர்களின் கை மற்றும் கால்கள் பூட்டியிருக்கும், அதனை திறப்பதற்கான சாவிகள் நீச்சல் குளத்தில் போடப்பட்டு இருக்கும். அதனை அவர்கள் தேர்ந்தெடுத்த நபர்கள் கண்டுப்பிடித்து பூட்டை திறக்க வேண்டும். யார் முதலில் விடுவிக்கப்படுகிறார்களோ அவர் தான் இந்த வாரத்திற்கான தலைவர்.  நீச்சல் குளத்தில் இறங்கும் டாஸ்க் தனக்கு சரிவராது என்று டேனி ஒதுங்க அவருக்கு பதிலாக சென்றாயனை தேர்வு செய்தார் மகத். 

இந்த போட்டிக்கு நடுவர் வைஷ்ணவி. போட்டி தொடங்கியது முதல் விறுவிறுப்பாக செய்தவர் யாஷிக்கா. சென்றாயன்  தட்டுத் தடுமாறிக் கொண்டு இருந்தார். மகத்தின் ஒரு பூட்டுக்கூட  திறக்கப்படாது என நினைத்திருந்த போது கடைசி நேரத்தில் டக் டக் என அனைத்து சாவிகளையும் கண்டுப்பிடித்தார் சென்றாயன். 

பின் தலைவருக்கான போட்டியில் மகத் வென்றார். பின் சென்றாயனை யாரும் உடன் விளையாட தேர்வு செய்வதில்லை, எனவே தான் தேர்வு செய்ததாக காரணம் கூறினார் மகத். இது போன்ற சாதாரண விஷயங்களை கூட வெளியே கூறி புகழ் தேடிக்கொள்வது மனித இயல்பு தான். ஆனால் அதனை நாம் அன்றி வேறு ஒருவர் செய்யும் போது பார்க்க பிடிப்பதில்லை. 

பின் மகத் தான் தலைவர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிவிக்கும் பிக்பாஸின் குறிப்பை மகத்தே படித்தார். தொடக்கமே அமோகம் என்பது போல வாசிப்பதில் திணறினார்.  பின் இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியது. டாஸ்க்கை நிறுத்தியதற்காக ரம்யா முன்னரே நேரடியாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். அவரையும் மகத்தையும் தவிற மற்றவர்களில் இரண்டு பேரை ஒவ்வொரு
போட்டியாளர்களும் தேர்வு செய்ய வேண்டும். 

இந்த முறை நாமினேட் செய்யப்படுபவர்கள் பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளை ஆர்வம் இல்லாமல் மெத்தனமாக செய்பவர்களாக இருக்க வேண்டும்.  அதன்படி ஒவ்வொருவரும் வந்து இரண்டு பேரை கூறினார். அதில் அதிகமானனோர் ஜனனி, பாலாஜி, பொன்னம்பலம் மற்றும் ஐஸ்வர்யாவின் பெயரை கூறினர். எனவே ரம்யாவுடன் சேர்த்து அவர்களும் இந்த வார நாமினேஷனில் சேர்ந்தனர். 

தொடர்ந்து முதல் வாரத்தில் இருந்த நாமினேட் ஆன மும்தாஜ் சென்ற வாரமும், இந்த வாரமும் நாமினேட் ஆகவில்லை. அவர் டாஸ்க் என்று வந்தால் சரியாக செய்கிறார் என்பது கூட காரணமாக இருக்கலாம். திருடன் டாஸ்கில் அவரின் ஏட்டம்மா அவதாரம் அதற்கு சான்று.

நீ நாமினேட் ஆவனு நான் நினைக்கவே இல்லை என்று ஜனனியிடம் கூறினார் ரம்யா.. நாங்களும் தான் நினைக்கவில்லை. ஆனால் ஜனனி பலமுறை உற்சாகம் இழந்து அமர்ந்து விடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. அதனால் அவர் மெத்தனமாக இருப்பதாக போட்டியாளர்கள் நினைத்திருக்கலாம். பின் 'என்னை 5 பேர் நாமினேட் செய்வார்கள் என்று நினைத்தேன், 4 பேர்  தான் பண்ணி இருக்காங்க என்றார்'.. உண்மையில் போட்டியாளர்கள் அனைவரும் கவனமாக தான் இருக்கிறார்கள். நாம் தான் மாற வேண்டும். 

வீட்டின் மூத்த ஆண்கள் அணி ஜனனி நாமினேட்டானது குறித்து அதிர்ச்சியடைந்து பேசிக்கொண்டு இருந்தனர். அதற்கு அந்த குரூப்( மகத் அணி) வெளிய போன எல்லாம் சரிஆகிடும் என்றார் சென்றாயன். பின் அந்த அணியினர் குறித்து பேசிக்கொண்டுஇருந்தனர். 

பின் ஒருவேளை தாங்கள் இறுதிப்போட்டிக்கு சென்றால் யாரெல்லாம் தங்களுடன் இருப்பார்கள் என்று ஒவ்வொரு போட்டியாளர்களும் கூற வேண்டும். இதில் அதிகமானோர் டேனி, யாஷிக்கா, ஐஸ்வர்யா, ரித்விகாவின் பெயர்களை கூறினர். யாஷக்கா பலமான போட்டியாளர் என பலரும் கூறியது குறிப்பிடத்தக்கது. 

தலைவர் தேர்வு, எவிக்‌ஷன் நாமினேஷன், இறுதிப்போட்டி பற்றிய உரையாடல் ஆகியவற்றை பற்றி தனி தனி அணிகளாக பேசிக்கொண்டு இருந்தனர். அவர்கள் பிரிந்து இருப்பது சூழ்நிலைக்காக என தோன்றுகிறது. தங்களை காப்பாற்றிக்கொள்வதற்கான உக்தியாக இதனை போட்டியாளர்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர். 

இத்தனை வாரங்கள் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு வீட்டில் அதிகமான பிரச்னைகள் நடப்பதற்கு காரணமாக இருந்த மகத் தற்போது வீட்டின் தலைவராகி இருக்கிறார். என்னென்ன ஆகுமோ?..

பிக்பாஸ் 2 : றிமுக நாள்  I முதல் நாள்   I  2ம் நாள்   I   3ம் நாள்   I   4ம் நாள்   I   5ம் நாள்  I   6ம் நாள்  I   7ம் நாள்  I  8ம் நாள் I 9ம் நாள்  I

10ம் நாள்   I   11ம் நாள் I   12ம் நாள்   I  14ம் நாள்   I   15ம் நாள்   I   16ம் நாள்   I   17ம் நாள்   I   18ம் நாள்   I   19ம் நாள் I   20 நாள் 

 I   21 நாள்  I   22 நாள்  I   23 நாள்  I   24 நாள்  I   25 நாள்  I   26 நாள்  I   27 நாள்  I   28 நாள் 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.