சிநேகனை ஒருமையில் திட்டும் ஹவுஸ்மேட்ஸ் - பிக்பாஸ் ப்ரோமோ 2

  திஷா   | Last Modified : 17 Jul, 2018 01:04 pm
bigg-boss-promo-2

பிக்பாஸின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. வீட்டிற்குள் கவிஞர் சிநேகன் வந்திருப்பதை முதல் ப்ரோமோவில் பார்த்தோம். இப்போது வந்திருக்கும் இரண்டாவது ப்ரோமோவில், 'சிநேகன் சொல்லிட்டுப் போறாரு ஒரு பாயிண்ட்டு' என டேனி சொல்கையில், 'நீங்க நீங்களா இருங்க தயவுசெய்து, யாரும் நீங்க நீங்களா இல்ல' என சிநேகன் சொன்ன காட்சி காட்டப்படுகிறது. 

"என்ன நாங்க நாங்களா இல்ல, நாங்க நாங்களா இல்லன்னு ஃபர்ஸ்ட் உனக்கு எப்படி தெரியும். முதல்ல இப்படி ஒருத்தங்க சொல்லி அதை கேக்க வேண்டிய அவசியம் இல்லன்னு தான் நான் சொல்வேன். அவருக்காக நாம வாழல, நமக்கு எப்படி இருக்க விருப்பமோ, அப்படி இருப்போம். 

உங்கள நாங்க மதிச்சு, வீட்ல ரெஸ்பெக்ட் பண்ணி அனுப்புறோம். பட் நீ வந்து எங்களுக்கு அட்வைஸ் கொடுக்கனும்ன்னு அவசியமே கிடையாது. இதுதான் நான், நீ யாரு எனக்கு ஜட்ஜ்மெண்ட் குடுக்குறதுக்கு" என வைஷ்ணவியும், ரம்யாவும் ஒருமையில் சிநேகனை திட்டுகின்றனர். ஆக சிநேகன் கூறிய கருத்தை ஹவுஸ் மேட்ஸ் ஏற்றுக் கொள்ளவில்லை என தெளிவாகத் தெரிகிறது.

மொத்தத்தில் ரம்யா வீட்டைவிட்டு வெளியேற திட்டமிட்டுவிட்டார் என்றே தெரிகிறது. கொஞ்சம் ஓவராகத்தான் செல்கிறார். ரசிகர்கள் ஓட்டு கண்டிப்பாக ரம்யாவுக்கு கிடைக்காது என்றே தெரிகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close