எல்லாத்துக்கும் புரியும்னு நெனைக்கிறேன் - பிக்பாஸ் ப்ரோமோ 3

  திஷா   | Last Modified : 17 Jul, 2018 06:07 pm
bigg-boss-promo-3

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. நிகழ்ச்சி ஆரம்பித்து சரியாக ஒரு மாதம் ஆகியிருக்கும் நிலையில் விருந்தினராக வீட்டிற்கு சிநேகன் வருகிறார்.  

பள்ளிக் கூட டாஸ்க்கில் வீட்டில் உள்ள அனைவரும் தமிழ் வகுப்பு எடுக்கிறார். ஒவ்வொருவரும் தமிழில் ஒரு திருக்குறளையும் அதன் பொருளையும் சொல்ல வேண்டும் போல் தெரிகிறது.  முதலின் ஷாரிக் தடுமாறுகிறார். 'நீங்க உக்காருங்க உங்களுக்கு மறுபடியும் பாடம் நடத்துறேன்' என அவரை அமர சொல்கிறார் சிநேகன். 

யாகாவார் ஆயினும் நாகாக்க எனும் குறளை சொல்லி விளக்கம் கொடுக்கிறார் வைஷ்ணவி. அப்போது எத கன்ட்ரோல் பண்ண முடியலன்னாலும், குறைஞ்சது நம்ம வார்த்தைகளை கன்ட்ரோல் பண்ணனும் என பொருள் கூறுகிறார். 

அதற்கு சிநேகன் அது வார்த்தை இல்ல, நம்மளோட நாக்கு சொல்லி விட்டு எல்லாருக்கும் புரியும்ன்னு நினைக்குறேன் என்று கூற மற்றவர்கள் சிரிக்கிறார்கள். வைஷ்ணவி கோபமாக செல்கிறார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close