சென்ட்ராயன் நடிக்கிறார் - பிக்பாஸ் ப்ரோமோ 1

  திஷா   | Last Modified : 18 Jul, 2018 12:52 pm
bigg-boss-promo-1

பிக்பாஸ் பற்றிய முக்கியமான விமர்சனங்களில் ஒன்று வீட்டில் இருக்கும் அனைவரும் நடிக்கிறார்கள் என்பது தான். இன்னும் யார் உண்மையாக இருக்கிறார்கள் என்பதை ரசிகர்களால் கணிக்கவே முடியவில்லை. வீட்டில் மிகவும் பாவப்பட்டவராக வெள்ளந்தியாக இருப்பவர் சென்ட்ராயன். முன்பொரு எபிஸோடில் 'சென்ட்ராயன நான் இப்போ தான் இப்படி பாக்குறேன் சார்' என டேனி கமலிடம் சொன்னார். 

இந்த நிலையில், இப்போது வந்துள்ள பிக்பாஸ் 2 ப்ரோமோமோவில் ரம்யா சென்ட்ராயனிடம், 'சில பேர் நீங்க நடிக்கிறீங்கன்னு நினைக்கிறாங்க, ரொம்ப இன்னசென்ட்டா காமிக்கிற மாதிரி இருக்குறீங்கன்னு சொல்றாங்க, ஸோ நாம நிஜமாவே அப்படி தான்னா அப்படியே இருக்கலாம், இல்லைன்னா உண்மையை காமிச்சிடனும்' என பட்டென பேசுகிறார். 

ப்ரோமோவின் தொடக்கத்தில் 'சென்ட்ராயன் படிக்க தெரியாதுன்னு சொல்லிட்டு இவ்ளோ பெரிய லெட்டர் எழுதிருக்காரு' என ரித்விகா சொல்கிறார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close