#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2018 12:30 pm

what-happened-in-biggboss-day-30

நேற்றைய பிரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்களாக மாற இருப்பதை பார்த்து பீதியுடன் தான் நிகழ்ச்சியை பார்க்க தயாராகி இருப்போம். போதாக்குறைக்கு சினேகனின் வருகை... 30வது நாளில் என்ன நடந்தது.

என் உச்சி மண்டைலாம் ஜிவ்வுங்குது பாடல் ஒலிக்க மங்களகரமாக தொடங்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி. என்ன பாட்டு போட்டாலும் லைட்டா தான் ஆடுவேன் என்பதில் உறுதியாக இருக்கும் சில போட்டியாளர்கள் அதையே தான் நேற்றும் செய்தனர். 

ஐஸ்வர்யாவும், யாஷிக்காவும் ஏதோ கிசுகிசுத்தனர். அவர்கள் பேசிக்கொள்வதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத மகத் எனக்கு ஸ்வீட் வேணும் என்றார். அவர் பால்கோவா, லட்டு என லிஸ்ட் போட  பின்னணியில் சின்ன சின்ன ஆசை பாடலை பாடினர் யாஷிக்காவும், ஐஸ்வர்யாவும். சாப்பாட்டுக்கு பின்னணி பாடல் பாடும் அளவுக்கு அவர்களை காய விடுகிறார் பிக்பாஸ் 

இந்த சம்பவம் நடந்துக்கொண்டு இருக்க திடீரென சைரன் சத்தம் கேட்டது. யாரோ ஆங்கிலத்தில் பேசியதால் தண்டனைக்கான சத்தம் அது. அதன்படி யாராவது நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டும். வீட்டிற்குள் இருப்பவர்கள் யார் ஆங்கிலத்தில் பேசியது என்ற குழப்பத்தில் இருக்க வெளியே இருந்த டேனி தானாக முன்வந்து நீச்சல் குளத்தில் குதித்தார். உடனே அவர் தான் ஆங்கிலத்தில் பேசியது என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் அவரும் 'நான் பேசல' என கூறிவிட்டார். உண்மையில் பேசியது யாஷிக்காவும் ஐஸ்வர்யாவும்.. இருவரும் அமைதியாக சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்தனர். 

நேற்றைய நிகழ்ச்சியில் பாலாஜி-யாஷிக்கா, மகத்- வைஷ்ணவி இடையேயான கருத்து வேறுபாடு பிரச்னைகள் தான் அதிகமாக காட்டப்பட்டது. வைஷ்ணவியை பற்றி மகத் குறைக்கூறிக்கொண்டு இருக்க ஜனனி அமர்ந்திருந்த பொஷிசன்.. அவர் நடிகை என்பதை மறந்து வாழத் தொடங்கி இருக்கிறார். 

தொடர்ந்து வைஷ்ணவி-மகத் பிரச்னை வெடிக்க பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் வைஷ்ணவி. இவர்களுக்கு இடையே ஜனனி தூது சென்றார். ஆனால் எப்போதும் நான் தான் இணங்கி செல்கிறேன். இந்த முறை பேச்சுவார்த்தைலாம் கிடையாது என மகத் அதனை அவாய்ட் செய்தார். 

பின் இந்த வாரத்திற்கான டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ரித்விகா பள்ளி தலைமை ஆசிரியராக இருக்க மற்றவர்கள் பள்ளி மாணவர்களாக மாற வேண்டும். அதன் படி அனைவரும் சீருடைகள் அணிந்து தயாராகி வந்தனர். 

அனைவரும் கதாபாத்திரங்களாக மாறி நடித்துக்கொண்டு இருந்தனர். ஜனனியின் நடிப்பு அழகாக தான் இருந்தது. ஆனால் அவர் ஏனோ சென்றாயனை திட்டிக்கொண்டு இருந்தார். நடுவில் ரிங்கா ரிங்கா ரோசஸ், டிரையின் விளையாட்டெல்லாம் நடந்தது. 

இவர்களின் நடிப்பு திறனை பார்த்துக்கொண்டு இருக்கும் போதே சினேகன் வீட்டிற்குள் நுழைந்தார். ஐ... சினேகன் என குதித்தனர் போட்டியாளர்கள். சின்னதாக ஏன் வந்தேன் என கூறிவிட்டு பாடம் எடுக்க தொடங்கினார் சினேகன் வாத்தியார். 

தினமும் காலையில் போடப்படும் பாட்டு முடிந்தவுடன் இந்த பாடலை பாடவேண்டும் என உலகநாதர் எழுதிய உலக நியதி பாடலை போட்டியாளர்களுக்கு சொல்லிக்கொடுத்தார் சினேகன். அதில் வரும் ஒவ்வொரு வரிகளும் தங்களை குற்றம் கூறுவது போல இருக்க சிரித்துக்கொண்டெ அதனை திருப்பிக்கூறினர் போட்டியாளர்கள். 

பின் அனைவருக்கும் தேர்வுக்கான பாடத்தை தனித்தனியாக அறிவித்தார் சினேகன். ஒவ்வொருவரின் தனிப்பட்ட குணங்களை குறிக்கும் படியே அந்த பாடல்கள் அமைந்திருந்தன. அப்போது மும்தாஜ்க்கு குரல் ஒன்றை சினேகன் சொல்ல அவர் முடிக்கும் முன்னே அதனை முடித்தார் மும்தாஜ். தமிழில் நடிக்கும் தமிழ் தெரியாத நடிகைகள் 20 ஆண்டுகளில் திருக்குறள் கூறும் அளவிற்கு தமிழ் கற்றுவிடுகிறார்கள் போல என்ற நிம்மதி ஏற்பட்டது. ஆனால் அந்த குரலை மமதி சொல்லிக்கொடுத்தாராம்.. மிஸ்யூ மமதி என கூறிக்கொண்டார் மும்தாஜ். 

பாடம் எடுத்து முடித்ததும் பிராக்டீஸ் செய்தனர். அப்போது மகத்தை தனியாக அழைத்து உன்னை வெச்சி இங்க நிறைய பேரு குளிர்காயிறாங்க என அட்வைஸ் செய்து கொண்டு இருந்தார் பாலாஜி. அப்படியெல்லாம் நடப்பதாக நமக்கு தெரியவில்லை. பாலாஜி சொல்வது உண்மையென்றால் வரும் எபிசோட்களில் அது தெரிந்து விடும். 

போட்டியாளர்கள் அனைவருக்கும் ஏன் நமக்கு அந்தபாடல் கொடுக்கப்பட்டது என்பது தெரிந்து விட்டது. நம்மல எப்படி நோட் பண்ணி சரியா பாட்டு அனுப்பி இருக்காங்க என ஆச்சர்யப்பட்டனர். இதெல்லாம் மீம் கிரியேட்டர்கள் எப்போதோ செய்து விட்டனர். ஆக்சுவலி பிக்பாஸ் ரொம்ப லேட்.. 

பின் ஒவ்வொருவராக வந்து தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாடலை கூறிவிட்டு சென்றனர். கிட்டத்தட்ட அனைவரும் சரியாக கூறினர். பின் இந்த தேர்வில் பொன்னம்பலம் சிறந்த மாணவராக தேர்வு செய்யப்பட்டார். 

பிக்பாஸ் போட்டியாளர்கள் அதிகம் கேட்ட நீங்க நீங்களா இல்லை என்ற வசனத்தையே மீண்டும் கூறினார் சினேகன். பின் சாப்பிடும்போதாவது சேர்ந்து உட்காருங்க என அறிவுரைகளை கூறினார். இது ரொம்ப அழகான வீடு, பாசமான வீடு என்றெல்லாம் பேசினார். முதல் சீசனில் அந்த வீட்டில் இருந்தது மிகவும் ரசித்தவர் அவராக மட்டும் தான் இருக்க கூடும். 

அவர் தனது அனுபவங்கள் குறித்து பேசிக்கொண்டு இருக்க அவரை வெளியே வர சொன்னார் பிக்பாஸ். சுமாரான டாடா.. பை..பை உடன் அவரை வழி அனுப்பி வைத்தனர். 

சினேகன் கூறியது தவறு என ரம்யா பேசிக்கொண்டு இருந்தார். வீட்டுக்கு வந்தா நல்ல பார்த்து அனுப்பி வைக்கிறோம். அதவிட்டுட்டு நீங்க நீங்களா இல்லைனுலாம் கூறக்கூடாது என்றார். இதையே தான் கமலும் கார்த்தியும் கூறினர். அவர்களை எல்லாம் போட்டியாளர்கள் இவ்வளவு கடிந்து கொள்ளவில்லை. 

அடுத்ததாக ஜோடி புறா விளையாட வேண்டும் என அறிவிப்பு வந்தது. அதிலும் ரித்விகா தான் நடுவர். விளையாடி முடித்ததும் அனைவரும் கலைப்பாக அமர்ந்திருந்தனர். யாஷிக்காவுக்கு மட்டும் சோர்வே கிடையாது போல உற்சாகமாக ஐஸ்வர்யாவிடம் தெலுங்கில் பேசிக்கொண்டு இருந்தார். 

ஜோடி புற போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷாரிக்கிற்கும் மகத்துக்கும் பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்டது. அதோடு விளக்குகள் அனைய.. தனியாக சுற்றிக்கொண்டு இருந்த பாலாஜியிடம் நித்யாவை மிஸ் பன்றீங்களா என கேட்டார் மும்தாஜ். ஆமா மேடம்.. இப்போ கூட அவங்க என்னை தான் நினைத்துக்கொண்டு இருப்பார்கள் என்றார். 

பின் போட்டியாளர்கள் தூங்காமல் டேனியை பற்றி தீவிரமாக உரையாடிக்கொண்டு இருந்தனர். டேனியின் விளையாட்டு உக்தி மற்றவர்களை வெகுவாக பாதித்திருப்பது தெரிகிறது.அதோடு பின்னணி குரல் அன்றைய நாளைப்பற்றி கூற நிகழ்ச்சி முடிந்தது.

சென்ற சீசனில் இதே டாஸ்க்கை கொடுத்தார் பிக்பாஸ். அதிலும் சினேகன் தான் வாத்தியார். அப்போது கடவுள் வாழ்த்து பாடலை யார் எழுதினார் என்ற சர்ச்சை கிளம்பியது நியாபகம் உள்ளதல்லவா?.. அதே டாஸ்க் தான்.

அப்போது ஓவியாவிற்கு கொக்கு நெட்ட கொக்கு.. இட்ட முட்ட பாடலை கொடுத்தார். அந்த சாதாரண பாடலை ட்யூனெல்லாம் சேர்த்து பாடினார் ஓவியா. கேமரா முன் நின்று அவர் கையசைத்து ஆடிய காட்சிகள எல்லாம்.. பிக்பாஸின் பொற்காலம் அது.. ஆனால் இன்றைய போட்டியில் அப்படிப்பட்ட காட்சிகள் எதுவுமே இல்லை. மிஸ் யூ ஓவியா..
 

பிக்பாஸ் 2 : றிமுக நாள்  I முதல் நாள்   I  2ம் நாள்   I   3ம் நாள்   I   4ம் நாள்   I   5ம் நாள்  I   6ம் நாள்  I   7ம் நாள்  I  8ம் நாள் I 9ம் நாள்  I

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close