கதறி அழும் மஹத் - பிக்பாஸ் ப்ரோமோ 3

  திஷா   | Last Modified : 18 Jul, 2018 05:39 pm
bigg-boss-promo-3

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 - வது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஜாலி கேலி, கோபம், சண்டை என இருக்கும் மஹத் மனமுடைந்து அழுகிறார். 

டேனியல் மும்தாஜிடம் மஹத் தன்னிடம் சொன்ன ஒரு விஷயத்தைப் பற்றி வெளியில் பேசிக் கொண்டிருக்கிறார். 'நேத்து நைட் மஹத் ரூம்குள்ள போய்ட்டு, ஏ மச்சான் நீ அப்படி எல்லாம் சொல்லாதடா அவன் ஹர்ட் ஆவான்னு சொன்னதும் எனக்கு சுர்ருனு ஆகிடுச்சி' என சொல்கிறார். 

கட்டிலில் படுத்து அழுதுக் கொண்டிருக்கும் மஹத்துக்கு ஜனனியும் ரம்யாவும் ஆறுதல் சொல்கிறார்கள். 'அழாத மஹத், நீ யாரையுமே தப்பா நினைக்கல, ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்க ஆனா இவ்ளோ நம்பனும்ன்னு அவசியம் இல்ல' என அவர்கள் சொல்ல, 'நான் ரொம்ப எமோஷனல் ஆகிடுவேன், என்ன யாராச்சும் அடிச்சாங்கன்னா என்னால அதை தாங்க முடியாது' என்கிறார் மஹத். 

ஒருவேளை யாரிடமும் சொல்லாதே என மஹத் சொன்னதை அனைவரிடமும் டேனியல் சொல்லி விட்டாரா எனத் தெரியவில்லை. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close