கண்ணீர் வர வைக்கும் பிக்பாஸ் ப்ரோமோ 1

  திஷா   | Last Modified : 19 Jul, 2018 12:14 pm
bigg-boss-promo-1

பெரிதாக எந்த சுவாரஸ்யமும் இல்லாத பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று அந்த குறையை தீர்க்கும் போல. ஆம்! வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவைப் பார்த்தாலே கண்கள் வியர்ப்பதை தவிர்க்க முடியவில்லை. 

ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து சில குழந்தைகள் வீட்டிற்குள் வருகிறார்கள். ஹவுஸ்மேட்ஸுடன் ஆடல் பாடல் என ஜாலியாக இருக்கிறார்கள். பிறகு தங்களின் சோக கதையை கண்ணீருடன் கூறுகிறார்கள். 'எனக்கு 10 வயசு அம்மா இறந்து போய்ட்டாங்க, அப்பா ஓடி போய்ட்டாரு எங்க பெரியம்மா தான் இந்த ஹாஸ்டல்ல சேர்த்து விட்டாங்க' என ஒரு சிறுவன் கூறுகிறான். 

'நாங்க ஹாஸ்டல்ல ஒரு 100 பேர் இருக்குறோம். எங்க அம்மா அப்பா வந்து சண்டை போட்டு பிரிஞ்சிட்டாங்க' என இன்னொரு குழந்தை கூறும் போது போட்டியாளர்கள் கண் கலங்குவதைப் பார்க்க முடிகிறது. 

ப்ரோமோவைப் பார்க்கும் நமக்கும் மனது ரணமாகிறது. இதை எல்லாம் வைத்தா டி.ஆர்.பி- ரேட்டை ஏற்ற முயற்சிப்பது பிக்பாஸ்?

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close