#BiggBoss Day 31: பொன்னம்பலம் பாட... யாஷிக்காவும் ஐஸ்வர்யாவும் ஆட.. மகத் அழுதேவிட்டார்..

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2018 12:29 pm
what-happened-in-biggboss-day-31

சண்டையால் பலனில்லை அழுதாவது டிஆர்பி ஏற்றலாம் என்ற நிலைக்கு வந்து விட்டார் பிக்பாஸ். தினம் தினம் கொடுக்கப்படும் சென்டிமென்ட் டாஸ்க்குகளால் போட்டியாளர்கள் அழுதுவிடுகின்றனர். நேற்று அதனோடு சேர்ந்து கச்சேரியும் நடந்தது. 

31வது நாளில் சோர்ந்து இருந்த போட்டியாளர்களை எப்படியாவது ஆட வைக்க வேண்டும் என்ற நினைப்பில் 'ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா' பாட்டை போட்டார் பிக்பாஸ். அப்படியெல்லாம் ஆட முடியாது என்பது போல இருந்தனர் போட்டியாளர்கள். யாஷிக்கா ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் "இந்தா.. வெச்சிக்கோ" மொமண்டுகளை பிக்பாஸ் அடிக்கடி சந்திக்கிறார். 

கிட்சனில் இருந்த வைஷ்ணவியிடம் டீ குடும்மா என சென்றாயன் கேட்க, பாட்டு பாடிட்ட அப்றம் தான் டீ குடிக்கனும் என்று டீ குடித்தப்படி கூறினர் பாலாஜியும் வைஷ்ணவியும். பின் சினேகன் வாத்தியார் சொல்லிக்கொடுத்த உலக நியதி பாடலை அனைவரும் சேர்ந்து பாடினர். அதில் கூறும் கருத்துக்களை ஏற்று இனி அவர்கள் மாறினால் பிக்பாஸின் கதி என்ன?

பின் சென்றாயன் கேட்ட டீ அவரை வந்து சேர்ந்தவர், டீயை கொடுத்துவிட்டு அட்வைஸ் பண்ண தொடங்கினார் ரம்யா. இங்க நிறைய பேரு நீங்க நடிக்கிறதா சொல்றாங்க. அப்படி இருந்தா உண்மை சீக்கிரமா வெளிய தெரிஞ்சிடும். நீங்க நீங்களா இருங்க என்றார். சென்றாயன் எதையும் மறுத்து பேசாமல் ரம்யா பேசுவது மட்டும் கேட்டுக்கொண்டார். நேற்றைய முன் தினம் நடந்த நிகழ்ச்சியில் சினேகன் குற்றச்சாட்டை தான் கூறினார். ஆனால் அவர் அனைவரும் நடிக்கிறார்கள் என்றார். அப்போது, "அவருக்கு எப்படி தெரியும், நாம நடிக்கிறோம்னு" என்று முதல் ஆளாக கூறியவர் ரம்யா தான். தற்போது அதையே அவர் சென்றாயனுக்கு கூறுகிறார். 

அனைவரும் தனி தனி குரூப்பாக பிரிந்து பேசிக்கொண்டு இருக்க கேமரா முன் வந்த பாலாஜி.. நித்யாவிடம் பேசினார். "நான் வெளியே வந்ததும் நீ நல்ல முடிவு எடுத்திருப்பனு எனக்கு தெரியும். இனி நல்லா இருக்கலாம்" என்றார். ஆனால் வீட்டை விட்டு வந்த நித்யா வெளியே வேறு விதமாக பேட்டி கொடுத்துக்கொண்டு இருக்கிறார். இனி பாலாஜி எப்போது எவிக்டாவார் வெளியே நடப்பது தெரிந்ததும் எப்படி ரியாக்ட் செய்வார் என்ற ஆவல் அதிகரித்துள்ளது. 

நேற்றைய முதல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்க்கின் படி ரம்யா பாட்டு டீச்சராக மாறினார். வீட்டில் இருப்பவர்களுக்கு பாட்டு சொல்லிக்கொடுத்து அவர்கள் அணி அணியாக பிரிந்து பாட வேண்டும். சரிகம.. என தொடங்கினார் பாட்டு டீச்சர் ரம்யா. அந்த வகுப்புக்கு ஷாரிக்கும், மகத்தும் தாமதமாக வந்தனர். அவர்களை வெளியே நிற்க வைத்தார் கண்டிப்பான தலைமை ஆசிரியர் ரித்விகா. அவர்களை 'ஏ'டாகூடமாக கலாய்த்த டேனியை பென்ச் மேல் ஏறி நிற்க வைத்தார்கள். இந்த வகுப்பின் முதல் பென்ஞ் மாணவர்கள் மும்தாஜும் ஜனனியும். 

அனைவரும் பாட வேண்டும், அதுவும் சில மணி நேரத்தில் கற்றுக்கொண்டு பாடவேண்டும்.. சிலர் சொதப்பினாலும் ஜனனி, மகத் பாடியது நன்றாக இருந்தது. பின் தனி தனி அணியினராக பிரிந்து ஃபெர்ஃபார்ம் பண்ண வேண்டும். அதற்காக ஒவ்வொரு அணிக்கும் பாடல் கொடுக்கப்பட்டது. பிக்பாஸ் எவ்வளவு வில்லங்கமானவர் என்றால் யாஷிக்காவையும், ஐஸ்வர்யாவையும் பொன்னம்பலம் அணியில் சேர்க்கும் அளவுக்கு..

அதே போல மும்தாஜ்-சென்றாயன், பாலாஜி-வைஷ்ணவி என மற்ற குரூப்களை பிரித்ததிலும் பிக்பாஸ் சேட்டை தெரிகிறது. பிராக்டீஸ் முடிந்து அனைவரும் தனிதனியாக வந்து பாடினர். 

பாலாஜியம் வைஷ்ணவியும் ஏதோ பண்ண சொன்னாங்க என்பது போல ஆடிவிட்டு சென்றனர். செல்ஃபி புள்ள பாட்டை சிறுக்குழந்தை கூட மனப்பாடமாக பாடும்.. ஆனால் 6 வரி வசனத்தை பக்காவாக கூறும் சென்றாயனால் பாடமுடியவில்லை. பின் 'என் வீட்டுல நான் இருந்தேனே' பாட்டை டேனி, மகத், ஷாரிக், ஜனனி அணி பாடினர்.

கடைசியாக மக்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டு இருப்பார்கள் என பிக்பாஸ் நினைத்த பொன்னம்பலம் அணியின் நடனம். இதில் டேனி அணியின் பாடல் சிறப்பாக இருந்ததால் அவர்கள் வெற்றிப்பெற்றதாக அறிவித்தார் ரம்யா. 

பொன்னம்பலம் பாட தொடங்கி விட்டால் நிறுத்தப்போவதில்லை என்பதை போல, தனியாக இருந்தாலும் சரி கூட்டத்துடன் இருந்தாலும் சரி பாடிக்கொண்டே இருக்கிறார்.  அவர் அருகில் இருந்த பாலாஜியும் சென்றாயனும் ஏதோ பேசிக்கொண்டு இருந்தனர். அதில் பாதி வரிகளுக்கு பீப் போட்டதால் அவர்கள் என்ன பேசினார்கள் என தெரியவில்லை. 

கடந்த வாரம் நடந்த போலீஸ் திருடன் டாஸ்க்கின் போது ஏற்பட்ட பிரச்னை குறித்து பேசிக்கொண்டு இருந்தனர் ரம்யாவும் டேனியும். அவ்வளவு கான்செப்ட் பஞ்சம் பிக்பாஸ் வீட்டில். 

அடுத்த டாஸ்க்கில் தாங்கள் தற்போது மிஸ் பண்ணும் நபருக்கு போட்டியாளர்கள் கடிதம் எழுத வேண்டும். ஆதாவது போட்டியாளர்கள் அழ வேண்டிய நேரம். எப்போதாவது என்றால்.. எப்போதும் டாஸ்க் கொடுத்து அழ வைப்பது என்ன மாதிரியான டிசைனோ. போட்டியாளர்கள் தனித்தனியாக கடிதத்தை படிக்க சிலர் அழுதுவிட்டனர். 

இதில் ஐஸ்வர்யா தனது நண்பர் ஒருவருக்காக எழுதியிருந்தார். அந்த டாஸ்க் முடிந்ததும் ஷாரிக்கிடம் வந்து நீ வருத்தப்படாத என்றார். எதுக்கு... என தோன்றியது. அவர் காதில் கேட்டுவிட்டதோ என்னவோ.. உன் கேர்ள் பிரெண்ட் பத்தி பேசுனப்போ நான் வருத்தப்பட்டேன். அந்த மாதிரி இப்போ நீ கஷ்டப்பட போறியோனுதான் என்று விளக்கினார் ஐஸ்வர்யா. 

பின் அந்த வீட்டில் தங்களை கஷ்டப்படுத்திய விஷயம் குறித்து ஒவ்வொருவரும் வைஷ்ணவியிடம் கூறி கவுன்சிலிங் பெற்றுக்கொள்ளலாம் என பிக்பாஸ் அறிவித்தார். அதன்படி அனைவரும் தங்கள் பிரச்னையை கூறினார். பொன்னம்பலம் மட்டும் வைஷ்ணவி தான் பிரச்னையே என கூறிவிட்டு வந்தார். அவர் இப்படி செய்யும் போதெல்லாம் நீண்ட முடியுடன் தாய்கிழவி என கூறும் காட்சி நினைவிற்கு வந்து செல்கிறது. 

மகத் தனியாக அழுதுக்கொண்டு இருந்ததை பார்த்து ரம்யா சமாதானப்படுத்த வந்தார். ஜனனிய கூப்டுங்க என மகத் கூறினார். உண்மையில் அவரது நெருங்கிய தோழி யாஷிக்காவை தான் அழைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு சில மன குழப்பங்கள் இருக்கவே அப்போது ஜனனி அழைக்கப்பட்டார். 

மற்றவர்களின் பிரச்னையை கேட்ட வைஷ்ணவியின் பிரச்னையை பிக்பாஸ் கேட்டறிந்தார். ஆனால் எந்த ஆலோசனையும் கொடுக்கவில்லை. தினம் தினம் ஷாரிக்கும், மும்தாஜும் பேசிக்கொள்வதோடு தான் நிகழ்ச்சி முடியும். நேற்றும் அப்படியே நடந்தது. 

இன்னும் இரண்டு நாட்களில் நாட்டமை வருவார். பிக்பாஸ் வீட்டை பற்றி பேச ஒன்னும் இல்லை என்றால் ஆண்டவர் அரசியல் பேச தொடங்கிவிடுவார். எனவே கருணை அடிப்படையில் பிக்பாஸ் ஏதாவது செய்து சண்டைகளை உற்பத்தி பண்ண வேண்டும்..

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close