அட்வைஸ் பண்ணும் மஹத் - பிக்பாஸ் ப்ரோமோ 1

  திஷா   | Last Modified : 20 Jul, 2018 11:20 am
bigg-boss-promo

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்தின் தலைவராக இருப்பவர் மஹத். முதலில் மிக விளையாட்டுத் தனத்துடன் எல்லோருடனும் ஜாலியாக இருந்தவர் இப்போது அதிக எமோஷனலாக இருக்கிறார். 

இப்போது வெளியாகியிருக்கிற புதிய ப்ரோமோவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் எல்லோரையும் உட்கார வைத்து, 'மனிதாபிமானங்கற விஷயம் நம்ம எல்லார்கிட்டயும் இருக்கணும். இன்னொருத்தன் முதுகுல சவாரி ஓட்டி ஜெயிக்கிறது நம்ம வெற்றி கிடையாது. பெர்சனலா எடுத்துக் கிட்டு இன்னொருத்தங்களுக்கு நாம எதிரியாகிட்டோம்ன்னு நினைக்காம, பொறாமை ஈகோ இதெல்லாத்தையும் விட்டுட்டு டாஸ்க்ன்னா ஒரு போட்டியா எடுத்து பண்ணுவோம். இங்க யாரும் வேஸ்டும் கிடையாது, யாரும் சூப்பரும் கிடையாது' என்கிறார். 

அவர் இந்த விஷயங்களை சொல்லும் போது, டேனியைக் காட்டுகிறார்கள். என்ன நடந்தது என்பதை இரவு பார்ப்போம். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close