#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்!

  Newstm Desk   | Last Modified : 21 Jul, 2018 12:01 pm
what-happened-in-biggboss-day-33

சென்ற சீசனில் இதே நாட்களில் ஓவியா தலைவியாக உருவாகி கொண்டு இருந்தார். தொடர்ந்து வீட்டில் கொடுக்கப்படும் டாஸ்க்குளையும், தனக்கு கொடுக்கப்படும் வேலைகளையும் சரியாக செய்யாமல் இருந்த ஓவியா மீது நியாயமாக நமக்கு கோபம் வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் சும்மா இருந்தாலும் நாங்க விட மாட்டோம் என்பது போல ஓவியாவை பற்றியே பேசிக்கொண்டு இருப்பது, ஓவியா கண்ணு பட்டுவிடுமோ என்று மற்ற போட்டியாளர்களுக்கு திரிஷ்டி எடுப்பது என்று அப்போதைய போட்டியாளர்கள் செய்த காரியங்கள் ஓவியாவுக்கு பிளஸ்களாக மாறின. குறிப்பாக பிரோமோக்கள் அனைத்தும் ஓவியாவை மையமாக வைத்து வெளியாக தொடங்கிய போது மக்களும் ஓவியா பக்கம் சென்றனர்.

இந்த சீசனில் ஓவியா போன்று தனியாளாய் கெத்து காட்டும் கேரக்டர்கள் யாரும் இல்லை. குறிப்பாக இந்த வீட்டில் இருப்பவர்கள் மற்றவர்கள் கூறினால் உடனே ஆமாம் தப்பு தான் என உண்மையை ஒப்புக்கொண்டு சென்று விடுவதால் எந்த புரட்சியும் வெடிப்பதற்கான அறிகுறிகளே இல்லை. பிக்பாஸ் என்னனென்னவோ முயற்சி செய்து பார்த்து தினம் தினம் கொடுத்த டாஸ்க்கையே பட்டிப்பார்த்து கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.

எப்போதும் போல வீட்டில் யாரை பிடிக்கும் அவரைப்பற்றி கூறுங்கள் என்பது தான் டாஸ்க். கொஞ்சம் ஸ்பான்சர்களை சந்தோஷப்படுத்த சில மாற்றங்கள் செய்து மீண்டும் கொடுத்திருந்தார். அனைவரும் தங்களுக்கு விருப்பமான 5 போட்டியாளர்களுடன் செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களுள் ஒருவரைப்பற்றி பேசவேண்டும் இதான் டாஸ்க்.

அனைவரும் தங்களுக்கு பிடித்தவர்கள் பற்றி பேசினார்கள். முதலாவதாக வந்த மகத் நேராக டாஸ்க்குக்கு செல்லாமல் போட்டியை நியாயமாக விளையாடுங்கள். மற்றவர்கள் முதுகில் ஏறி வெற்றி பெற வேண்டும் என்று நினைக்காதீர்கள் என பேசினார். அவர் பேசும் போது கேமரா டேனி பக்கம் மட்டும் தான் இருந்தது. யாஷிக்கா தன்னிடம் இருந்து விலகுவதற்கு டேனி தான் காரணம் என மகத் நினைத்திருப்பது கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.  பின் ஜனனியை தான் இந்த வீட்டிலேயே மிகவும் பிடிக்கும் என்றார். தனக்கொன்று என்றால் அவர் தான் முதலில் அழுவார் என்பது மகத் சொன்ன காரணம்.

வைஷ்ணவி எதிர்ப்பார்த்தது போல ரம்யா பற்றி பேசினார். ஷாரிக் அந்த வீட்டில் தனக்கு கிடைத்த முதல் நட்பான மகத்பற்றி பேசினர்
ஐஸ்வர்யாவும் யாஷிக்காவும் ஒருவரை பற்றி ஒருவர் பேசினர். மும்தாஜ் பேசும் போது முன்பே சொன்ன அண்ணன்  பையன் முகம் என்ற காரணத்திற்காக ஷாரிக்கை பற்றி பேசினார். பொன்னம்பலத்திற்கு அந்த வீட்டில் ஜனனியை மட்டும் தான் பிடித்திருக்கிறது. சென்றாயனும் டேனியும் ஒருவரை ஒருவர் பற்றி பேசினர்.ஜனனியும் ரித்விகாவும் பொன்னம்பலம் பற்றி பேசினர். ரம்யா வைஷ்ணவி பற்றி பேசுவார் என்று பார்த்தால் ஜனனியை தேர்வுசெய்தார்.. பாலாஜி அந்த வீட்டிலேயே இல்லாத நித்யாவை பற்றி பேசினார்.

இந்த டாஸ்க் முடிந்ததும் முன்னர் விளையாடிய லக்சரி டாஸ்க்கிற்கான புள்ளிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக அந்த டாஸ்க்கிற்கு வழங்கப்படும் புள்ளிகள் 2600. அதில் போட்டியாளர்கள் செய்த தவறுகளுக்காக 200 புள்ளிகள் கழிக்கப்பட்டது. பின் ஷாரிக், யாஷிக்கா, மகத் ஆகியோர் பகலில் தூங்கி கொண்டு இருந்ததால் 600 புள்ளிகள் குறைக்கப்பட்டது. கடைசியாக 1800 புள்ளிகள் மட்டுமே பொருட்கள் வாங்க தரப்பட்டது.

தன்னால் தான் புள்ளிகள் குறைந்தது என மகத் மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்டார். உடனே அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பது போல மற்ற போட்டியாளர்கள் ரியாக்ட் செய்தனர். இந்த இடத்தில் டேனியோ சென்றாயனோ இருந்தால் கதையே வேறாக இருந்திருக்கும்.
மற்றவர்கள் மகத்தை ஒன்றும் கூறவில்லை என்றாலும் சென்றாயன், பொன்னம்பலம் மற்றும் பாலாஜி இதைப்பற்றி பேசிக்கொண்டு இருந்தனர். லக்சரி பொருட்கள் வாங்கும் போது மும்தாஜ் கொஞ்சம் எலைட்டான பொருட்களை வாங்க சொல்லி கத்தினாராம், கமல் சார் அவங்கள நட்சத்திர வாழ்க்கை வாழாதீங்க என்று கூறியது சரிதான் என்று பாலாஜி கூறினார்.

அடுத்ததாக மற்றவர்களால் தற்போதெல்லாம் குற்றம்சாட்டப்படும் டேனியை வைத்து காய் நகர்த்த தொடங்கினார் பிக்பாஸ்.
நிமிர்ந்து நில் துணிந்து சொல் என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் டேனி வீட்டில் இருந்து 5 பேரை தேர்வு செய்து அவர்களிடம் பிக்பாஸ் கொடுத்த கேள்விகளை கேட்பார். பின் மற்ற போட்டியாளர்களில் 3 பேர் அவர்களிடம் கேள்வி கேட்கலாம்.

டேனி தேர்வு செய்த 5 பேரில் ஐஸ்வர்யாவும் ஒருவர். அவரை கஷ்டமான கேள்விகள் கேட்டு கஷ்டப்படுத்திவிடுவார்களோ என்று பயந்து அதனை தவிர்க்க யாஷிக்காவும் ஷாரிக்கும் என்ன பண்ணலாம் என்று பேசிக்கொண்டு இருந்தனர்.

பின் டாஸ்க் தொடங்கியது. இரண்டு சோஃபாக்களில் ஒன்றில் டேனி அமர்ந்திருந்தார். மற்றொன்றில் பதில் அளிக்க இருக்கும் போட்டியாளர்கள் அமர வேண்டும். பிக்பாஸ் கொடுத்திருந்த கேள்விகளும் போட்டியாளர்கள் கேட்ட கேள்விகளும் பிரச்னை உண்டாக்கும் வகையில் தான் இருந்தன. ஆனால் அனைத்திற்கும் ரம்யா, ஜனனி, பொன்னம்பலம், ஐஸ்வர்யா, பாலாஜி ஆகியோர் சரியாகவும் உண்மையாகவும் பதிலளித்தது போல தான் இருந்தது.
ஆனால் பாலாஜி தான் செய்வது தவறு என்று தெரிந்தும் அதனை தொடர்ந்து செய்கிறார் என்ற காரணத்திற்காக அவரைஜெயிலில் அடைக்க வேண்டும் என டேனி கூறினார். பின் அந்த டாஸ்கில் சரியாக பதில் சொன்னார் என்ற காரணத்திற்காக ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்க உத்தரவிட்டார் டேனி. அந்த ஸ்பெஷல் பவர் என்ன என்பதை நேற்யை நிகழ்ச்சியில் பிக்பாஸ் அறிவிக்கவில்லை.

பின்னர் அனைவரும் ஜாலியாக பாலாஜியை சிறையில் அடைத்தனர். சிறைக்கு செல்பவர்கள் அனைவரும் கேட்டது போல அந்த விளக்கை மட்டும் அணைங்க என பாலாஜி கேட்பதோடுநிகழ்ச்சி முடிந்தது.

ஐஸ்வர்யாவுக்கு கொடுக்கப்படும் ஸ்பெஷல் பவர் தான் அடுத்த வாரத்தில் நடக்கவிருக்கும் சண்டைகளுக்கான லீடாக இருக்கும் என்று தெரிகிறது. நாட்டமை அந்த பவர் பற்றி இன்று பேசுவார்.. பார்ப்போம்..

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close