#BiggBoss Day 34: கலாச்சார காவலர் பொன்னம்பலம் பேசுவது எல்லாம் சரியா?..

  Newstm Desk   | Last Modified : 22 Jul, 2018 01:29 pm
what-happened-in-biggboss-day-34

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்றுவதற்கு தான் நடத்துகிறார்கள்... இப்படி தான் வாரவாரம் சனி, ஞாயிறுகளில் கமல் வரும் எபிசோட்கள் செல்கின்றன.. எப்படி காப்பாற்றுகிறார்கள்.. வாங்க பார்க்கலாம்..

நேற்று வழக்கம் போல நாட்டாமை செமயாக ஆடை அணிந்து வந்திருந்தார். அகம் சென்று பேசுவதற்கு முன் பார்வையாளர்கள் கமலிடம் தாங்கள் கேட்க விரும்பிய கேள்விகளை கேட்டனர். 

யாரோ ஒருவர் கமலின் கவிதைகளுக்கு ரசிகராம்.. அவரை ஒரு கவிதை சொல்லுமாறு கேட்டுக்கொண்டார். கேட்கவில்லை என்றாலே 4 கவிதை,4 ஜோக்குகள் (??!) எனதான் கமல் பேசுகிறார். அவர் கேட்கிறார் என்பதற்காக ஒரு கவிதையை கூறினார். 

பின் இந்தியன் 2 எப்போது வரும் என்ற கேள்விக்கு 'இது முடிஞ்சா தான் அது' என்றார். 

பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களுக்கு 34வது நாளிலேயே வெறுத்துவிட்டது என்பது தெரிகிறது. ஒருவர் வைல்ட்கார்ட் என்ட்ரி எப்போ என கேட்டார். இருக்கு ஆனா எப்போது என்று சொல்ல மாட்டோம் என்றார். உடனே அது வரை நாங்கள் நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என எதிர் தரப்பில் இருந்து குரல் வரும் என எதிர்ப்பார்த்தால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. 

பின்னர் ரீகேப்கள் முடிந்து.. வெள்ளிக்கிழமை வீட்டில் என்ன நடந்தது என்பதை காட்டினார். கிட்சனில் சமைத்துக்கொண்டு இருந்த வைஷ்ணவியிடம் குடைமிளகாயை இப்படி வெட்டுனா நல்லா இருக்கும் என்று டேனி கூறிக்கொண்டு இருந்தார். அவர் சாதாரணமாக கூறியது போல தான் இருந்தது. ஆனால் காச்மூச் என கத்தினார் வைஷ்ணவி.. டேனி அமைதியாக சென்றுவிட்டார். 

டேனி மீதான கோபம் சிலருக்கு அதிகமாகி கொண்டு இருக்கிறது. அந்த கோபத்திற்கு காரணம் அவர் விளையாட்டை சரியாக விளையாடுகிறார் என்பதா இல்லை வேறு ஏதாவதா என தெரியவில்லை. 

பின் அவன் சும்மா தான சொன்னான் ஏன் திட்டுனே என ரம்யா கேட்டார். இல்ல அவர் அடிக்கடி அப்படி தான் செய்கிறார் என்றார் வைஷ்ணவி. நீ பழைய விஷயத்தை வைத்து பேசுவது போல தான் இருக்கிறது என்று ரம்யா கூறினார். அப்படியெல்லாம் இல்ல என மறுத்தார் வைஷ்ணவி. அப்படிதான் என்பது தான் உண்மை..

பின் டேனியை பலரும் வெறுப்பதை பார்த்த ஐஸ்வர்யா.. நீங்க எனக்கு நல்ல பிரெண்ட், உங்கள தான் அடுத்த தலைவரா தேர்வு செய்ய வேண்டும். அப்படி நடந்தால் எனது முழு ஆதரவும் இருக்கும் என்றார். 

டேனி பெரிய டிராமாவெல்லாம் செய்யாமல், "எனக்கு தலைவர் பொறுப்பு வேண்டும். இந்த வீட்டில் சில விஷயங்கள் நடக்குது. அவற்றை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் பிரச்னை பெரிதாகிவிடும்" என்றார். அவர் கூறும் விஷயங்கள் எதுவாக இருக்கும் என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும். 

பின் ரம்யா, வைஷ்ணவியிடம், "ரகுவரன வில்லனா தான பார்த்தீங்க.. இனி ஹீரோவா பார்ப்பீங்க" என்பது போல பேசினார் டேனி. ''இனிமே பேஷன் தான் முக்கியது. இப்போ என் விளையாட்ட காமிப்பேன். முதல அனந்ததும் பொன்னம்பலமும் சொன்னவற்றறை நான் மாற்றிக்கொண்டேன். இப்போ நான் செய்வது அனைத்தையும் தவறு என்கிறார்கள். மத்தவங்க கூத்தடிக்கும் போது சரி நான் பண்ணா தவறா?.. இனி நான் வேற மாதிரி இருப்பேன். கமல் சார்க்கிட்ட சொன்னா சொல்லிக்கோங்க" என்றார். முன் நின்றுருந்த இருவரும் அமைதியாக இருந்தனர். 

இதெல்லாம் பார்த்து சிரித்துக்கொண்டு இருந்த கமல் அகம் டிவி வழியாக போட்டியாளர்களிடம் பேச தொடங்கினார். கமலை பார்த்ததும் ஹேண்ட்சம்பாய் என்ற குரல் கேட்டது. அப்படி கூறியது யாஷிக்கா ஆனந்த். இத்தனை வயதான பின்பும்.. பதின்பருவத்தில் இருக்கும் யாஷிக்கா ரசிக்கும் அளவிற்கு கமல்இன்றும் அழகாக இருக்கிறார். 

தொடக்கத்திலேயே நீங்க யாரும் நீங்காள இல்லை என்ற சென்றவார ஹிட் வாக்கியத்துடன் தொடங்கினார் கமல். இதுப்பற்றி முதலில் பாலாஜியை பேச சொன்னார்.. சிலர் நடிக்கிறாங்க என்றார். பின் ரம்யா எல்லாரும் நடிக்கைலைன்னு நான் சொல்லமாட்டேன் என பாலாஜி கூறியதையே மாற்றி கூறினார். 

'இப்போ சென்றாயன் எல்லாரும் வெகுளினு சொல்லி சொல்லி அவர் அப்படி மெயின்டெயின் பண்ணிக்கிறார். ஆனால் அவருக்கும் எல்லாம் தெரியும்" என்றார் பாலாஜி.. தன்னை பற்றி பேசும் போது கடும் கோபத்தோடு பாலாஜியை பார்த்துக்கொண்டு இருந்தார் சென்றாயன். உதாரணத்திற்கு வேறு யாரும் கிடைக்கவில்லையா என்பதற்கான கோபம் அது..

ரம்யாவும் பாலாஜியும் பொன்னம்பலத்தின் நியாபக மறதிப்பற்றி பேசினர். நிறைய பிள்ளைகள் பெற்ற அப்பாவுக்கு பிள்ளைகளின் பெயர் கூட நியாபகம் இருக்காது என்றார் கமல். பொன்னம்பலத்தை எப்போதும் பிக்பாஸ் வீட்டின் அப்பா என்றே கமல் குறிப்பிடுகிறார். 

பின் பிக்பாஸ் வீட்டில் விதிமுறைகளை மீறி மக்களின் கருத்தை போட்டியாளர்களிடம் கமல் கூறினார். மக்கள் அனைவரும் வைல்ட் கார்ட் என்ட்ரிஜ எப்போனு கேட்கிறார்கள் என்றார். போட்டியாளர்கள்குள்ளு அதன் அர்த்தம் புரிந்து இனியேனும் சூதானமாக நடந்து கொள்வார்களா என பார்ப்போம்..

 சினேகன் கெஸ்டாக வந்திருந்த போது பொன்னம்பலத்துடன் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து கமல் கேட்டார். முயற்சி என்ற வார்த்தையை பற்றி பேசும் போது தான் பிரச்னை தொடங்கியது என பொன்னம்பலம் விளக்கினார். பின் ஏன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன் என்பது பற்றி கூறினார். தான் சிறு வயதில் பள்ளியில் சேர்ந்தது, பல விளையாட்டு போட்டிகளில் வென்றது பற்றி பேசும் போது அழுதுவிட்டார். கமலும் அழ.. இது போன்ற பிள்ளைகளுக்காக தான் காமராஜர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்றார் கமல். 

சென்றாயனிடம் போட்டியாளர்களின் உண்மை தன்மை குறித்து கமல் கேட்டார். எப்போ கேட்பாரகள் என காத்திருந்த சென்றாயன் வெடித்து பேசினார்..  இங்க யாருமே உண்மையா இல்ல சார்.. அப்படி இருந்தா ரத்த ஆறுதான் ஓடும் என்றார். 

நிஜ வாழ்க்கையிலும் அப்படிதான்... ஈகோ, சூப்பர் ஈகோக்கு இடையே சண்டை நடக்கவில்லை என்றால் ஒவ்வொரு மனிதனும் வெட்டிக்கொண்டு தான் சாக வேண்டும். ஆனால் மனிதன் சமூகத்திற்கு ஏற்றார் போல வாழ அளவெடுத்து செய்யப்பட்ட பிறவி.. அதனால் தான் உலகம் நாடக மேடையாகவும்.. மக்கள் அனைவரும் அதில் நடிகர்களாகவும் இருக்கிறோம்.

பின் நீச்சல் குளத்தில் குளித்த போது மூக்குச்சளி வந்ததால் மற்றவர்கள் குளத்தில் இருந்து வெளியே வந்து விட்டார்கள் என சென்றாயன் செம கோபத்தில் கூறினார். மூக்குச்சளியெல்லாம் பிரச்னையா சார் என கமலிடம் நேரடியாக கேட்டார். உண்மையில் கமலிடன் பதில் இல்லை.

மூக்குச்சளி பிரச்னை இல்லை தான் ஆனால் ஒரு குளத்தில் 5,6 பேர் இருக்கும் போது அப்படி நடந்தால் எதிர்வினை பிக்பாஸ் வீட்டில் நடந்தது போல தான் இருக்கும். சென்றாயன் என்பதற்காக அதனை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சென்றாயன் தன் மீதான ஒடுக்குமுறை தாக்குதல்களுக்கு உதாரணமாக பலவற்றை கூறியிருக்கலாம். ஆனால் மூக்குச்சளி விஷயத்தில் அவர் பக்கம் செல்ல முடியவில்லை. ஆனால் அவர் மனம் புண்பட்டு இருப்பது தெரிகிறது. மகத் அவரை தண்ணீரில் அழுத்தியதால் தான் அப்படி ஆனது என்று அவர் விளக்கினார். 

கமல் சென்றாயன் பக்கம் இருக்க மும்தாஜ் தில்லாக.. அவர் செய்தது தவறு தான என்றார். அவர் குழந்தை இல்லை என கூறியதும் சரியான காரணமே. சில சமயங்களில் மும்தாஜின் அதீத சுத்தப்பழக்கம் கடுப்பாக்கினாலும் இதில் சரியாகவே பேசினார். 

சென்றாயன் பஞ்சாயத்து முடிந்த பின் டேனி பக்கம் திரும்பினார்கள். டேனி மீது ஒவ்வொருவம் தனித்ததியாக குற்றச்சாட்டுகளை வைத்தனர். பொன்னம்பலம் பேசும் போது, " டேனி மீது தொடக்கத்தில் மரியாதை இருந்தது. அவர் சில டாஸ்க்குகள் செய்யும் போது ஆச்சரியமாக இருக்கும். ஆனால் நாட்கள் ஆக ஆக.. அதில் மாற்றம் தெரிந்தது. அவர் பழைய டேனி இல்ல.." என்றார். 

டேனி பற்றிய பேச்சில் தேவையில்லாமல் ஐஸ்வர்யா பற்றி பேசினார் பொன்னம்பலம். "ஐஸ்வர்யா தமிழ்நாட்டில் பெரிய ஆளா வரணும் என்று கூறினார். ஒருமுறை அவர் உட்காரும் போது அவரது கால் என் மீது பட்டது. முதல கால் படாம உட்காரு அப்புறம் தமிழ்நாட்டுல கால் பதிக்கலாம் என்றேன்" என பெருமையாக முகத்தை வைத்துக்கொண்டு சிரித்தார். அவர் பேசுவதில் கொஞ்சமும் லாஜிக் இல்லை. 

தனக்கு காலில் அடிப்பட்டு இருந்ததால் அப்படி உட்கார்ந்தேன் என்றார். ஆனால் பொன்னம்பலம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இனி அப்படி உட்கார வேண்டாமே வெளிய பொன்னம்பலம் மாதிரி சித்தாப்பக்களை சந்திக்கும் போது உதவியா இருக்கும் என்றார் கமல். இன்னோரு பொன்னம்பலத்தை சந்திக்க கூட ஐஸ்வர்யா விரும்ப மாட்டார் என்று தெரிகிறது. 

பொன்னம்பலம் நல்லவரா கெட்டவரா என்பதை தாண்டி.. வழக்கமான முதியவர் என்பது தெரிகிறது. வயதில் அவ்வளவு முதிர்ச்சி இல்லை என்றாலும் எண்ணங்கள் அனைத்தும் பாழடைந்து போயுள்ளன. அதற்கு உதாரணம் "யாஷிக்கா, ஐஸ்வர்யா என்ற 'குதிரைகளை' டேனி தவறாக வழிநடத்துகிறார்" என கூறிவிட்டு அவர்கள் இப்படி தான் ஆடுகிறார்கள் என்று அவர் ஆடி காண்பித்தது. வக்கிரம் ப்ரோ என அடித்துக் கூறலாம். அவர் இதற்கு முன்பு பேசியவை காரணமாகவோ என்னவோ 'குதிரைகள்' என அவர் கூறியதும் தவறாகவே இருக்கிறது. அவரின் அந்த கருத்துக்கு சிரித்தார் கமல். அவர் கூறுவது போல டேனி பின் அப்படியே சென்றுவிட ஐஸ்வர்யாவும், யாஷிக்காவும் குழந்தைகள் இல்லை. டேனி மற்றவர்களை விட தங்களது சுதந்திரத்தை மதிக்கிறார் என்ற எண்ணம் அந்த பெண்களுக்கு இருக்கிறது. அது உண்மையும் கூட. 

அதற்கு உதாரணம் டேனி பொன்னம்பலத்திற்கு பதிலளித்த விதம். அவர்கள் இருவரும் குதிரைகள் கிடையாது.. என் தோழிகள் என்றார். பொன்னம்பலத்திற்கும் டேனிக்கும் இடையேயான வயது இடவேளையை இதில் பார்க்கலாம். டேனி அக்மார்க்  ரூட்டு தலையாக இருக்கிறார். ஆனால் ரூட்டு தலைகள் தவறு செய்யமாட்டார்கள் என்றில்லை. பின், "எனக்கு அறிவுரை சொல்கிற குரு சரியா இருக்கனும். அவர் கொச்சையாக பேசுகிறார்" என்றார் டேனி. 

சரிதான். பொன்னம்பலம் கமல் முன் நியாயமாக பேசுவது போல இருப்பதால் முன்னர் பேசியவை அனைத்தும் சரியாகி விடாது. 

பின் டேனிகுறித்து பாலாஜியிடம் கேட்கப்பட்டது. டேனி என் பிரதர் மாதிரி என்றார். பிரதர ஏங்க பின்னாடி அசிங்கமா பேசுறீங்க என்று யாராவது கேட்டிருக்கலாம். ஆனால் இல்லை..டேனி சிலருக்கு தேவைப்படுறதால அவர பத்தி மத்தவங்க பேசமாட்றாங்க என கூறினார் பாலாஜி.

பலரும் டேனி பேசுவது கஷ்டபட வைக்கிறது என்றார்கள். இதுகுறித்து வைஷ்ணிவியிடம் கேட்ட போது நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தார். டேனி வால்யூம் ஏத்துறாருனா.. நீங்க ஃபுல்ஸ்டாப் வைக்க மாட்றீங்க என்றார் கமல்.. 

இவர்களுள் ரித்விகா கூறியது கொஞ்சம் நியாயமாக இருந்தது. அவர் மற்றவர்கள் சீரியசாக இருந்த போது கத்துவது, சத்தமாக பாடுவது போலியானவர் போல தெரியவைக்கிறது என்றார். இந்த விஷயத்தில் டேனி கொஞ்சம் மாற்றம் செய்து கொள்ளதான் வேண்டும். 

ஒரு வீடடில் தனி தனி கூட்டம் உருவாவது இயற்கையான ஒன்றுதான்.டேனி கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் என்றார் ரித்விகா..
உடனே டேனியை எங்களுக்கு பிடித்திருக்கிறது. அதனால் நான், ஷாரிக், மகத், யாஷிக்கா அவருடன் இருக்கிறோம் என்றார் ஐஸ்வர்யா. உடனே நான் அந்த குரூப்பில் இல்ல என்பது போல கையசைத்தார் மகத். 

பின் நான் நானா தான் இருப்பேன் பொன்னபம்லம் சொல்றானு என்னை மாற்றிக்கொள்ள முடியாது என்று ஐஸ்வர்யா கூறினார். 

அனைவரும் தன்னை டாக்கெட் செய்ய பாலாஜி கூட புறம் பேசுறாரு என்றார் டேனி.. மீண்டும், "டேனி வளர்ற பிள்ளைகள கெடுக்கிறாரு என்றார் பொன்னம்பலம்.. அவர்கள் சண்டைப்போட்டுக்கொண்டு இருக்க பிரேக் விட்டார் கமல். 

அப்போது, நான் கால் மேல கால் போட்டத மட்டும் சொன்னீங்க நான் மன்னிப்பு  கேட்டத சொல்லி இருக்கனும் என்று பொன்னம்பலத்திடம் போய் முறையிட்டார் ஐஸ்வர்யா. நான் சொன்னேன் இப்போ அதைப்பற்றி பேசாத என்றார் பொன்னம்பலம். இல்ல நீங்க சொல்ல என்று ஐஸ்வர்யா கூறியதும்.. செவிடா நீ என கத்தினார்.. உடனே வந்த மும்தாஜ், அப்படியெல்லாம் பேசாதீங்க என்று எதிர்வினையாற்றினார். மும்தாஜ் இது போன்ற காட்சிகளில் கவர்ந்துவிடுகிறார். அவரது தாய்மை குணம் அவ்வபோது அழகாக வெளிபடுகிறது. 

பின் ஐஸ்வர்யாவிடம், "நான் உனக்காக பேசும் போது குறுக்க பேசாத" என்று கூறிவிட்டு அவர் அழுததும் கட்டியணைத்து சமாதானப்படுத்தியது அழகு. பொன்னம்பலம் குரல் உயர்த்தி பேசியதற்கு மும்தாஜை தவிர யாருமே எதிர்வினையாற்றவில்லை. அதற்கு காரணம் பொன்னம்பலத்தின் மீதான பாசம் எல்லாம் இல்லை. கமல் தான் காரணம். அவர் பொன்னம்பலம் செய்வதை எப்போதும் தவறு என்று சுட்டிக்காட்டியதே இல்லை. தந்தை போல என்ற காரணத்திற்காக அவர் செய்வது அனைத்தையும் நியாயப்படுத்த முயல்வது போல நடந்து கொள்கிறார் கமல்.  பின் இனி நான் கேட்பேன். கமல் சார் முன்னாடேியே கேட்பேன் என்றார் ஐஸ்வர்யா. 

இந்த சண்டைகளை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த கமல்.. சண்டே பார்க்கலாம்.. டை இல்லைங்க டே என்று பன்ஞ் வைத்துவிட்டு கிளம்பினார்.

நடுவில் ஐஸ்வர்யா அழுதபோது, "அவங்க நம்ம பேரை கெடுக்குறாங்க" என்றார். அந்த பயம் அவருக்கு அதிகமாக வருகிறது. காரணம் ஒவ்வொரு முறையும் பொன்னம்பலம் நாமினேட் ஆனாலும் மக்கள் அவருக்கு ஓட்டு போட்டு காப்பாற்றி விடுகின்றனர். அப்படியெனில் பொன்னம்பலம் கூறுவதை மக்கள் நம்புகின்றனர் என்றே ஐஸ்வர்யா யோசிப்பார்..

ஆனால் நாட்டமை இதற்கெல்லாம் பதில் அளிப்பது போல தெரியவில்லை. இன்றைய நிகழ்ச்சியில் யார் எவிக்டாகிறார்கள் என்பது மக்களின் மனநிலையை காட்டிவிடும். காரணம் பொன்னம்லபம் நாமினேட்டாகி இருக்கிறார். அவர் பேசுபவைக்கு வயது மட்டுமல்ல.. ஆணாதிக்க குணமும் தான் காரணம். நம் சமூகம் பொன்னம்பலத்தை காப்பாற்றும் எனில் நமக்கு சொல்லும் செய்தி மிகவும் வலிமையானது.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close