வெளிப்படையாக நடக்கும் நாமினேஷன் - பிக்பாஸ் ப்ரோமோ 1

  திஷா   | Last Modified : 23 Jul, 2018 11:40 am
bigg-boss-promo-1

பிக்பாஸ் வீட்டிலிருந்து நான்காவது போட்டியாளரும் வெளியேறிவிட்டார். பாடகி ரம்யா புறம் பேசவோ சர்ச்சைக்குள்ளான மற்ற விஷயங்களிலோ தலையிட மாட்டார். ஆனால் பாலாஜி, பொன்னம்பலம், ஜனனி, ஐஸ்வர்யா மூலம் ஏதாவது ஒரு 'கன்டென்ட்' பிக்பாஸுக்குக் கிடைக்கும். அப்படியானவர்கள் உள்ளே இருந்தால் தான் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என நினைத்த சேனல் தரப்பு, ரம்யாவை வெளியேற்றி விட்டதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் வெளிப்படையாக நடக்கிறது. கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைத்து கேட்கும் போது வரிசையாக குற்றம்சாட்டிய போட்டியாளர்கள் வெளிப்படையாக வைத்ததும் சற்றே தடுமாறுகிறார்கள். 

'டேனியல் இன்னும் சில விஷயங்களில் விளையாட்டுத் தனமா இருக்காரு, அது எனக்கு பிடிக்கல' என்கிறார் பொன்னம்பலம். 'எந்த மாதிரி இருக்காங்க' என டேனியல் கேட்க. 'அத நீங்க கேட்க வேண்டிய அவசியம் இல்ல' என பதிலளிக்கிறார் பொன்னம்பலம். 

'வைஷ்ணவிய எதுக்கு சொல்றேன்னா, இன்னும் பின்னாடி போய் பேசுற விஷயங்கள் நடந்துட்டு தான் இருக்கு' என்கிறார் டேனியல். 'நைஜீரியன்ங்கற ஒரு வார்த்தைய யூஸ் பண்ணிட்டு இருக்கீங்க' என மும்தாஜிடம் சென்ட்ராயன் சொல்கிறார். மும்தாஜ் குழப்பத்தில் இருக்க அது 'ஹைஜீனிக்' என்கிறார்கள் ஹவுஸ்மேட்ஸ். 

தர்ம சங்கடமான சூழ்நிலையில், முகத்திற்கு முன் அவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டி நாமினேட் செய்ய வேண்டிய பதற்றத்தில் ஹவுஸ்மேட்ஸ் இருப்பது தெரிகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close