கிழவனா? யாரை சொல்கிறார் ஐஸ்வர்யா - பிக்பாஸ் ப்ரோமோ 2

  திஷா   | Last Modified : 23 Jul, 2018 01:12 pm
bigg-boss-promo-2

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் வரும் நாட்களில் குறும்படம் மிகவும் ஃபேமஸ். ஆனால் போன சீஸனைப் போல இந்த சீஸனில் இன்னும் அது போடப்படவில்லை. 

ஆனால் இப்போது வந்திருக்கும் இரண்டாவது ப்ரோமோவில் ஐஸ்வர்யா, யாஷிகா இருவரும் இந்தியில் பேசிக்கொள்ளும் ஒரு குறும்படத்தை வீட்டிலுள்ள டி.வி-யில் ஒளிபரப்புகிறார் பிக்பாஸ். 
ஹவுஸ்  மேட்ஸ் அனைவரும் அதைப் பார்க்கின்றனர். பிறகு பாலாஜி, டேனியிடமும் சென்ட்ராயனிடமும் 'கிழவன் என் கிட்ட அடி வாங்கப் போறான்னா, கிழவன் யாரு இங்க?' என சிரித்துக் கொண்டே சொல்கிறார். 

ஒன்றும் இல்லாததையே ஊதிப் பெரிதாக்கும் வைஷ்ணவிக்கு இந்த விஷயம் சொல்லவா வேண்டும். 'எனக்கு மட்டுமா பொன்னம்பலம் அண்ணன்னு தோணுச்சி, உனக்கும் தானே தோணுச்சி' என ஜனனியிடம் சொல்ல, 'இங்க அப்படியொரு கிழவன் மாட்டிட்டான் அப்படிங்கறாங்க' என ஜனனி சொல்கிறார். 

'யாரப் பத்தி பேசுறாங்கன்னு நீங்க ஃபர்ஸ்ட் கன்ஃபார்ம் பண்ணுங்க, அதுக்கப்புறம் நீங்க சொல்லுங்க' என வைஷ்ணவியிடம் ஐஸ்வர்யா சொல்கிறார். அதற்கு 'நான் ட்ரான்ஸ்லேட் தான் பண்ணி சொன்னேன்' என்கிறார் வைஷ்ணவி. 'உங்க வேலைய பாருங்க வைஷ்ணவி' எனக் கோபமாகிறார் ஐஸ்வர்யா.

என்ன நடந்தது என இரவு நிகழ்ச்சியில் பார்ப்போம்...

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close