ஓவியாவாக மாற முயற்சிக்கும் ஐஸ்வர்யா? - பிக்பாஸ் ப்ரோமோ 3

  Newstm Desk   | Last Modified : 23 Jul, 2018 02:08 pm
biggboss-promo-3

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது பிரோமோவில் ஐஸ்வர்யா, தான் எதற்கும் கவலைப்பட போவதில்லை என கத்திக்கொண்டு இருக்கிறார். 

முன்னர் இன்று வெளியான 2 ப்ரோமோக்களுமே கொஞ்சம் சுவாரஸ்மாக தான் இருந்தது. ஆனால் இவர்கள் ப்ரோமோக்களை மட்டுமே விறுவிறுப்பாக எடிட் செய்துவிட்டு நிகழ்ச்சியில் ஏமாற்றுவார்கள் என்பது வரலாறு. 

ஆனால் 3வது ப்ரோமோவில் வரும் காட்சிகளை பார்க்கும் போது நிச்சயமாக இன்று பிரச்னை இருக்கு என்பது தெரிகிறது. இந்த ப்ரோமோவிலும் வைஷ்ணவியும், ஐஸ்வர்யாவும் தான் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். 

வைஷ்ணவியிடம், "நான் யாருக்கிட்டயும் ஒருவர் பற்றி பேச மாட்டேன் உங்கள மாதிரி" என்கிறார். வைஷ்ணவி இப்போதெல்லாம் மாறிவிட்டேன் மாறிவிட்டேன் என கூறினாலும் வீட்டில் இருப்பவர்கள் யாரும் நம்ப தயாராக இல்லை என்பது தெரிகிறது. உடனே சென்றாயனை சப்போர்ட்டுக்கு பயன்படுத்தும் வைஷ்ணவி, "இன்னைக்கு கூட அவ நல்ல பொண்ணு என்று தானே கூறினேன்" என் கேட்டார். சென்றாயன் பதில் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்தார். வாயத் திறந்து சொல்லுங்க என வைஷ்ணவி கத்த.. ஆமாஆமா ஆமா என பதிலுக்கு சத்தம் போடுகிறார் சென்றாயன். இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த சென்றாயனையும் கத்தி பேச வைத்துவிட்டார்கள். 

இவர்கள் இப்படி பேசிக்கொண்டு இருக்க ஐஸ்வர்யா இன்னொரு பக்கம், "ஐ டோன்ட் கேர்.. ஐ டோன்ட் கேர்" என கத்திக்கொண்டே சுத்தினார். உடனே யாஷிக்கா, "தமிழ்ல சொல்லு" என எச்சரிக்கிறார். ஐஸ்வர்யாவும் "எனக்கு கவலை இல்ல..எனக்கு கவலை இல்ல.." என வீட்டை சுற்றுகிறார். இந்த காட்சிகளை எல்லாம் நாம் சென்ற சீசனில் ஓவியா செய்து பார்த்திருப்போம். ஓவியாவை பின்பற்ற முயற்சிக்கிறாரா ஐஸ்வர்யா?

source: www.newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close