சண்டைகோழி ஐஸ்வர்யா: பிக்பாஸ் பிரோமோ 1

  Newstm Desk   | Last Modified : 24 Jul, 2018 11:04 am
biggboss-promo-24-07-2018-1

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் பிரோமோவிலும் சண்டை காட்சிகளிலும் தான் காட்டப்படுகிறது. 

இனி தினமும் கூச்சலும் குழப்பமுமாக தான் பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கப் போகிறது என்பது தெரிகிறது. இன்றைய முதல் பிரோமோவில் ஐஸ்வர்யா கத்திக்கொண்டு இருக்கிறார். இதில் என்ன விஷேசம் என்றால், ஐஸ்வர்யாவுடன் சண்டை போடுவது ரித்விகா. இத்தனை நாட்கள் அமைதியாக  இருந்த ரித்விகா சந்திக்கும் முதல் சண்டை இது.

தொடக்கத்தில் இந்த வீட்டில் யாரும் நீங்கள் சொல்வதை செய்யும் பொம்மைகள் இல்லை என்று ரித்விகாவை பார்த்து கூறுகிறார். உடனே, "நீங்களே எதையாவது நினைத்துக்கொண்டு பேச வேண்டாம்" என்று ரித்விகா கூறுகிறார். 

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கத்துக்கிறார்கள். இவர்கள் வாக்குவாதத்தில் இருக்க சிறையில் இருக்கும் மகத், "நான் மட்டும் உள்ள இருந்திருந்தா வெடிச்சி இருப்பேன். நல்ல வேளையாக சிறையில் இருக்கிறேன். நீங்க எல்லாத்தையும் சரியாக தான் செய்வீங்க... ஐ லவ் யூ பிக்பாஸ்" என பேசிக்கொண்டு இருந்தார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close