#BiggBoss Day 36: வைஷ்ணவி பேசுறத எப்போ நிறுத்துவாங்க!

  Newstm Desk   | Last Modified : 24 Jul, 2018 03:37 pm
what-happened-in-biggboss-day-36

நாளுக்கு நாள் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்குள் இருக்கும் பிரச்னை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அவற்றில் எந்த சுவாரஸ்யமும் இல்லை என்றாலும் தொடர்ந்து அந்த பிரச்னைகளை பெரிதாக்கும் முயற்சியை பிக்பாஸ் எடுத்துக்கொண்டே இருக்கிறார். 

ரம்யா வெளியேறியது இன்னும் போட்டியாளர்களை சோகத்தில் ஆழ்த்தியிருப்பது தெரிகிறது. ரம்யாவுடன் நெருக்கமாக இருந்த ஜனனியும், வைஷ்ணவியும் அவரைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தனர். 34வது நாளில் தொடர்ச்சி இன்னும் முடியவில்லை. 

கமலிடம் தன்னை மற்றவர்கள் ஜால்ரா என கூறியதுப்பற்றி மும்தாஜ் டேனியிடம் பேசிக்கொண்டு இருந்தார். நான் எப்போவாது ஜால்ரா அடிச்சிருக்கேனா என அப்பாவியாக கேட்டார். டேனி கூறியது போல அவர் அப்படி செய்யவில்லை. அவர், வார்த்தைகளில் அதிகாரம் இருப்பதும், ஓவர் சுத்தம் பார்ப்பதும் தான் மற்றவர்களுக்கு குற்றமாக தெரிகிறது. ஆனால் ஐஸ்வர்யா பக்கம் மும்தாஜ் இருப்பதால் கூட பொன்னம்பலம் போன்றவர்கள் அப்படி கூறியிருக்கலாம். 

ஒருபக்கம் மும்தாஜ் இப்படி பேசிக்கொண்டு இருக்க மற்றொரு பக்கம் வைஷ்ணவி தன்னை மற்றவர்கள் ஜால்ரா என கூறியது குறித்து பேசிக்கொண்டு இருந்ததார். இதுவரை நான் எதுவும் செய்யவே இல்லை. இனி ஆட போறேன் என்றார். ஓ... இன்னும் சிலரும் இந்த 'ஜால்ரா' விஷயம் குறித்து பேசிக்கொண்டு இருந்தனர். 

சென்றாயன் வெகுலி இல்லை, மும்தாஜ் ஓவரா பண்றாங்க, வைஷ்ணவிஇன்னும் புறம் பேசுகிறார் போன்ற வாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே தான் இருக்கிறது.  இந்த வாதத்தினால் ஜனனி, ரித்விகா, பாலாஜி ஆகியோர் சேஃப் கேம் விளையாடுகிறார்கள். 

35வது நாளின் இறுதியில் மும்தாஜும் டேனியும் சென்றாயன் கோபப்பட்டது குறித்து பேசிக்கொண்டு இருந்தனர். 'இந்த வீட்டில் ரத்த  ஆறு ஓடும்' என கமலிடம் சென்றாயன் கூறியது மும்தாஜுக்கு பிடிக்கவில்லை. இந்த வீட்டில் அப்படி யாருமே இல்ல. ரொம்ப யோசிச்சா... பொன்னம்பலமும், சென்றாயனும் மட்டும் தான் அப்படி கோபப்பட வாய்ப்பு இருக்கிறது. மகத் கோபப்படுவார், ஆனால் சோட பாட்டில் போல அவர் கோபம் புஸ் என ஏறும் இறங்கும் என்றார். அவ்வளவு தானே மகத்..

சிங்காரி சரக்கு நல்ல சரக்கு என ஆண்டவர் பாடலோடு தொடங்கியது 36வது நாள். அதிசயமாக ரித்விகாவும் நடனமாடினார். பிக்பாஸ் இறுதிப்போட்டியில் ஒரு தமிழ் பெண்ணாவது இருக்க வேண்டும் என ரித்விகா கூறிக்கொண்டு இருந்தார். சென்ற சீசனில் இறுதிப்போட்டியில் பெண்களே இல்லை. இந்த முறை ஒருவர் செல்ல வேண்டும் அதுவும் தமிழ் பெண்ணாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது அவர் கருத்து. 

உடனே தமிழ் சினிமாவிலேயே தமிழ் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்ற வருத்தம் தனக்கு இருப்பதாக சொந்த கதையை கூறிக்கொண்டு இருந்தார் ஜனனி. நடுவில் பொன்னம்பலம் 'வந்தாரை வாழவைக்கும் தமிழகம்' என்றெல்லாம் பேசினார். ஆக்சுவலி என்னவாம்.. அவர்கள் சொல்வது சரிதான் என்றாலும் ஒரு போட்டியில் விளையாடி திறமையால் யார் வேண்டுமானலும் வெற்றி பெறலாம். போட்டிக்கு தமிழ் பெண், பெங்காலி பெண் என்பதெல்லாம் இல்லை. யாராக இருந்தாலும் முயற்சி செய்ய வேண்டும். அப்படி முயன்று ஒரு வெற்றி பெற போகிறார் என்பது உறுதி. அவர் தமிழ் பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியே. 

மும்தாஜ் தானாக முன் வந்து சமையல் டீமில் தான்இருப்பதாக கூறினார். நானும் வருகிறேன் என சென்றாயன் கூற வேண்டாம் அண்ணா என்றார்.  முதல் முறையாக மும்தாஜ் இந்த வீட்டில் ஒருவரை பார்த்து பயப்படுகிறார் என்றால் அது சென்றாயன் தான் என கலாய்த்தார் பாலாஜி. 

மகத்தை நாமினேட் செய்ய சிலர் திட்டமிட்டு இருப்பதாக ஜனனி அவரிடமே பேசிக்கொண்டு இருந்தார். சொல்லிவிட்டு இதை யாரிடமும் கூறிவிடாதே எனவும் கூறினார்.

சென்ற வாரம் தலைவர் என அறிவிக்கப்பட்ட மகத்தின் பொறுப்பு முடிந்தது. அவர் சும்மா பெயருக்கு மட்டும் தான் தலைவராக இருந்தார். அதற்கான எந்த வேலையையும் அவர் செய்யவில்லை. பின் போட்டியாளர்களுக்கு ஒரு குறும்படம் போடப்பட்டது. அதில், முதல் நாளில் இருந்து போட்டியாளர்கள் செய்த விதிமீறல்கள் குறித்த காட்சிகள் காட்டப்பட்டன. 

அதில் மகத் தூங்கியதும், யாஷிக்காவும் ஐஸ்வர்யாவும் ஆங்கிலத்தில் பேசியதும் அதிகமாக காட்டப்பட்டது. பின்னர் நீங்க எல்லாம் சும்மா நாளை கழிப்பதற்காக இருக்கிறீர்கள். பிக்பாஸின் விதிமுறைகளை யாரும் சரியாக பின்பற்றுவது இல்லை என பிக்பாஸ் கண்டித்தார். இனி இப்படி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். 

பின் இதுவரை சரியாக விதிமுறைகளை பின்பற்றாத ஒருவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறியதால் மகத்தை மற்ற போட்டியாளர்கள் தேர்வு செய்தனர். அவரை சிறையில் அடைத்தவர் யாஷிக்கா.

மேலும் மகத் நேரடியாக எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டார். அவருக்கு அன்னந்தண்ணீ கூட கொடுக்கக்கூடாது என்பது பிக்பாஸின் கட்டளை. சிறை கைதிக்கென தனியாக உணவு வருமாம். மேலும போட்டியாளர்கள் அனைவரும் தவறு செய்திருப்பதால் இந்த வாரம் தலைவரே இல்லை.

போட்டியாளர்களுக்கு காட்டப்பட்ட வீடியோவில் ஒரு காட்சியில் ஐஸ்வர்யாவும், யாஷிக்காவும் இந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர். "ஒரு கிழவன் மாட்டிக்கிட்டான்" என்பது போல அவர்கள் பேச்சு இருந்தது. பாலாஜியும், ரித்விகாவும் அவர்கள் என்ன பேசினார்கள் என வைஷ்ணவியிடம் கேட்க. அவர் மொழிப்பெயர்தார். பின் இது மரியாதை குறைவான விஷயம் என்றார். அவர் மொழிப்பெயர்த்ததும், மரியாதைக்குறைவான விஷயம் என்று கூறியதும் தவறே இல்லை. ஆனால் அதை பற்றி மீண்டும் படுக்கையறையில் மற்றவர்கள் முன் பேசினார். இதைப்பார்த்த ஐஸ்வர்யா என்ன மேட்டர்னு சரியா தெரிஞ்சிக்காம பேசாதீங்க என கத்தினார். அப்போது சரி விடு அதை பற்றி பேசாமல் தவிர்த்தார் வைஷ்ணவி. சிறையில் அடைக்கப்பட்ட மகத், தன்னிடம் ஜனனி யாரிடமும் கூறிவிடாதே என்று கூறிய விஷயத்தை ஷாரிக்கிடம் கூறினார்.

பின் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ் எப்படி நடக்க இருக்கிறது என்பதை பற்றி பிக்பாஸ் அனுப்பி இருந்த குறிப்பை டேனி படித்தார்.  எப்போதும் கன்ஃபஷன் அறையில் நடக்கும் எவிக்‌ஷன் நாமினேஷன் இந்த முறை வெளிப்படையாக நடக்கும். தாங்கள் நாமினேட் செய்ய விரும் இருவருக்கு கருப்பு மற்றும் சிவப்பு நிற மையை வைக்க வேண்டும் என்பது தான் பிராசஸ். 

மற்றவர்கள் முன்  நெருக்கமானவர்களாக இருந்தாலும் நாமினேஷன் பிராசஸின் போது இருவரும் மாற்றி மாற்றி பெயரை சொல்லிக்கொண்ட வரலாறு எல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்திருக்கிறது. எனவே இந்த முறை தர்மசங்கடமான நிலையில் போட்டியாளர்கள் மாட்டிக்கொண்டனர். 

ஐஸ்வர்யா கத்திவிட்டு சென்று நீண்ட நேரமான பிறகு அவரிடம்சென்று பேசினார் வைஷ்ணவி. அவர் பேசுவதை கேட்க ஐஸ்வர்யா தயாராகவே இல்லை. இருவரும் மாற்றி மாற்றி கத்திக்கொண்டு இருந்தனர் (பிரோமோவில் காட்டப்பட்ட எனக்கு கவலை இல்ல காட்சி நிகழ்ச்சியில் காட்டப்படவில்லை). அனைவரும் முடிந்த விஷயத்தை ஏன் திரும்ப பேசுற என மற்றவர்கள்கூறியும் வைஷ்ணவி கேட்பதாய் இல்லை. மீண்டும் மீண்டும் அதையே பேசிக்கொண்டு இருந்தார். நடிகர் சதீஷ் இதுகுறித்து ட்வீட் செய்திருந்தார்.. அதில் ,"டிவியை ம்யூட்டில் வைத்தாலும் வைஷ்ணவி பேசுவது கேட்கிறது" என பதிவிட்டு இருந்தார். அப்படி தான் அவர் பேசிக்கொண்டே இருக்கிறார். ஒரு மணி நேரத்திற்கே நமக்கெல்லாம் இந்த உணர்வென்றால் அந்த வீட்டில் இருப்பவர்கள் பாவம் தான். 

இதுஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்க நாமினேஷன் தொடங்கியது. எதிர்பார்த்தவர்களையே போட்டியாளர்கள் நாமினேட் செய்தனர். பொன்னம்பலம் டேனி மற்றும் யாஷிக்காவை நாமினேட் செய்துவிட்டு அதற்கான காரணத்தை கூறினார். அதை கொஞ்சம் விளக்கி சொல்லுங்கள் என்று டேனி கேட்டதற்கு.. நான் கமல் சாரிடம்கூறிக்கொள்கிறேன் என்றார். அது என்னவோ சரி தான்.. கமல் சார் பொன்னம்பலம் பேசுவதை மட்டும்தான் ஆர்வமாக கேட்கிறார். 

சென்றாயன் இந்தவாரம் மம்தாஜை நாமிநேட் செய்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் அனைவரையும் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைய வைத்துவிட்டது. அடிக்கடி மும்தாஜ் தன்னை நைஜீரியன் என்று சொல்கிறார் அதனால் நாமிநேட் செய்கிறேன் என்றார் சென்றாயன். மும்தாஜ் உள்பட வீட்டில் உள்ள அனைவரும் ஒரு நிமிடம் திகைத்துப்போய் நின்றனர். மும்தாஜ் பதறிவிட்டார். பிறகு அது நைஜீரியன் இல்லை,  ஹைஜீன் என்பது தெரியவந்தது. வீட்டில் சுத்தபத்தமாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி மும்தாஜ் சொல்லியதை, சென்றாயன் நைஜீரியன் என்று மாற்றி சொல்லியது தெரியவந்தது. அதன்பிறகே, மும்தாஜ் இயல்புநிலைக்குத் திரும்பினார்.

கடந்த ஆண்டு காயத்ரி சொன்ன ஒரு வார்த்தை மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்தது. அவருக்கு எதிராக போராட்டம் எல்லாம் நடந்தது. சென்றாயன் சொன்னதுபோல, மும்தாஜ் அந்த வார்த்தையை பயன்படுத்தி இருநதால், கடந்த ஆண்டைப்போல் மிகப்பெரிய பிரச்னையாகவே இது மாறியிருக்கும்.

இந்த வாரம் அதிகம் பேர் கூறிய வைஷ்ணவி, மும்தாஜ், யாஷிக்கா, ஐஸ்வர்யா, பொன்னம்பலம் மற்றும் மகத் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். 

பின்னர் ஐஸ்வர்யா தனக்கு கிடைத்த ஸ்பெஷல் சக்தியை வைத்து தன்னை எவிக்‌ஷனில் இருந்து காப்பாற்றிக் கொண்டார். 

எவிக்‌ஷன் முடிந்ததும்  பொன்னம்பலம் கடைசி வரை எவிக்ட்டாக மாட்டார் என ஒரு தரப்பினரும், இந்த வாரம் அவர் தான் வெளியே செல்வார் என் இன்னோரு தரப்பினரும் பேசிக்கொண்டு இருப்பதோடு நிகழ்ச்சி முடிந்தது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close