பிக்பாஸில் மீண்டும் சோத்துப் பிரச்னை... பிக்பாஸ் பிரோமோ 2, 3

  Newstm Desk   | Last Modified : 24 Jul, 2018 02:03 pm
24-07-2018-biggboss-promo-2-3

சண்டைப் போட்டுக் கொள்பவர்களை ஒரே டீமில் போட்டு வேடிக்கை பார்க்கிறார் பிக்பாஸ். 

இன்றைய 2வது மற்றும் 3வது பிரோமோவில் போட்டியாளர்கள் தனித்தனி அணியினராக பிரிந்து இருக்கிறார்கள். 

முதல் பிரோமோவில் ஜனனியும் மும்தாஜும் சண்டைபோட்டுக்கொண்டு இருந்தனர். இவர்கள் இருவருக்குள் எப்போதும் பனிப்போர் நடந்து கொண்டே இருந்தாலும் வெளிப்படையாக சண்டை போட்டுக்கொண்டது இல்லை. ஆனால் இந்தமுறை மும்தாஜ் குரலை உயர்த்த, சத்தம் போட்டு பேசுவதை எல்லாம் கேட்க முடியாது என காதை முடிக்கொண்டு செல்கிறார் ஜனனி. உடனே இதெல்லாம் நல்லா இருக்குமா... இப்படியே இரு என்பது போல மும்தாஜ் கத்துக்கிறார். 

அடுத்த பிரோமோவில் இரு அணிகளாக  பிரிந்து இருக்கும் போட்டியாளர்களுக்கு இடையே சண்டை நடக்கிறது. எப்போதும் நட்பாக இருக்கும் யாஷிக்காவுக்கும் டேனிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. எப்போதும் சண்டைப்போட்டுக்கொண்டு இருக்கும் பொன்னம்பலமும், டேனியும் ஒரே அணியில் இருந்து எதிர் அணியை வீழ்த்த திட்டம் தீட்டிக்கொண்டு இருக்கின்றனர். பொன்னம்பலம் எதிரணியை பார்த்து, "சோத்துல கை வைக்கட்டும் பார்த்துக்குறேன்" என்கிறார். 

போட்டி என்று வந்துவிட்டால் நண்பர், பகைவன் என்பதெல்லாம் பார்க்காமல் இருப்பது நல்லது தான், என்றாலும் இது முழுக்க முழுக்க பிக்பாஸில் சூழ்ச்சி என்பது தெரிகிறது. என்ன தான் ஆகிறது என்று நிகழ்ச்சியில் பார்ப்போம். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close