#BiggBoss Day 37: பிக்பாஸ் வீட்டில் யாரும் நிம்மதியா இருக்க முடியாது!

  Newstm Desk   | Last Modified : 25 Jul, 2018 11:26 am
what-happened-in-biggboss-day-37

"மற்றவர்கள் செய்யும் போது குறையாக தெரியும் விஷயங்கள் நாம் செய்யும் போது சரியாகிவிடும்" இப்படிதான் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்தது.  டேனி கத்தும் போது குறை கூறிய பொன்னம்பலம் தற்போது ஒரே அணியில் இருப்பதால் கத்திக்கொண்டு இருக்கிறார். எப்போதும் மற்றவர்கள் பேச்சை சரியாக காது கொடுத்து கேட்காத மும்தாஜ் அதையே தனக்கு ஜனனி செய்த போது கோபப்படுகிறார். 37வது நாள் என்ன நடந்தது...

டேனியிடம் சொல்ல மாட்டேன் என்று கூறிய நாமினேஷன் காரணங்களை அவரிடமே கூறிக் கொண்டு இருந்தார் பொன்னம்பலம். எதுக்கு பட்டப்பெயர் வெச்சீங்க என்று பொன்னம்பலம் டேனியிடம் கேட்க, "அது மத்தவங்களுக்கு பிடிச்சி தான் இருந்தது. கமல் சாரே நல்லா இருக்குனு சொல்லிட்டாரு" என டேனி விளக்கம் அளித்தார். இருவரும் மாற்றிமாற்றி பேசிக்கொண்டு இருக்க... நீங்க சொல்றத கமல் சார் கேட்கிறார் என்பதற்காக எல்லார் பத்தியும் தப்பு தப்பா பேசுறீங்க என்றார் டேனி. நம்ம மனசுல இருக்கிறத அப்படியே சொல்றாரே என்ற ஃபீல்.

சிறையில் இருக்கும் மகத்துக்கு களியும் சாம்பாரும் கொடுக்கப்பட்டது. ஹெல்தி சாப்பாடு தான் என சமாதானப்படுத்திக்கொண்டு சாப்பிட தொடங்கினார் மகத். அவர் களி உண்பதைபார்த்து "எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது" என கண்கலங்கினார் பாலாஜி. சிறையில் இப்போது கொசு வலையெல்லாம் போட்டிருந்தார். மகத் விஐபி கைதி போல. இதற்கு முன் சிறையில் அவர் இருந்த போது இந்த செட்அப் எல்லாம் இல்லை. 

என்னடி ராக்கம்மா பாடலை தேடி கண்டுப்பிடித்து 37வது நாள் காலையில் போட்டார்கள். ஐஸ்வர்யாவின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை காலை நடனத்தில் கண்டுப்பிடித்துவிடலாம். இரண்டு நாட்களாக அவரது நடனம் டல்லடித்தது. ஆனால் இந்த இரண்டு நாட்களாக ரித்விகா உற்சாகமாக இருந்தார். 

டேனியுடன் நட்பாக இருந்த யாஷிக்கா, அவரைப்பற்றி மகத்திடம் பேசிக்கொண்டு இருந்தார். அவன் நல்லதுக்காக எங்கள மைண்ட்வாஷ் பண்ணிட்டு இருக்கான் என்று யாஷிக்கா கூறும் போது, "பொன்னம்பலம் கூறியது எல்லாம் சரியோ" என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை. பேசி முடித்துவிட்டு டேனி மும்தாஜோட பிரெண்டா இல்ல சென்றாயனோட பிரெண்டா என்றார் யாஷிக்கா. மகத்துடன் நெருங்கி பழகுவது குறித்த பேச்சுக்கள் அதிகமான உடன் கொஞ்சம் தள்ளி இருக்க தொடங்கினார் யாஷிக்கா. ஆனால் வீட்டில் ஐஸ்வர்யாவுக்கு பிறகு அவருக்கு பிடித்த நபர் லிஸ்டில் மகத் தான் முன்னணியில் இருக்கிறார். 

பின் எங்க ஏரியா உள்ள வராதே டாஸ்க் கொடுக்கப்பட்டது. வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் கைப்பற்ற பிக்பாஸ் தரும் டாஸ்க்கை எந்த அணி வெல்கிறதோ அந்த அணிக்கு அந்த பகுதி சொந்தமாகி விடும். 

இதில் ஜனனி மற்றும் மும்தாஜ் அணி தலைவர்கள். ஜனனி அணியில் டேனி, யாஷிக்கா, பொன்னம்பலம், ஐஸ்வர்யா மற்றும் சென்றாயன் ஆகியோர் இருந்தனர். மற்றவர்கள் மும்தாஜ் அணி. ஷாரிக் நடுவர். ஜனனி அணியின் நீல நிற டிஷர்ட்டையும், மும்தாஜ் அணியினர் மஞ்சள் நிற டிஷர்ட்டையும் அணிந்திருந்தனர். 

டாஸ்க் கொடுக்கப்படுவதற்கு முன்பு இரு அணி வீரர்களும் எதிரணியை வீழ்த்த திட்டம் தீட்டிக்கொண்டு இருந்தனர். அது பார்க்க திட்டம் போல எல்லாம் இல்லை, எதிரணியில் இருப்பவர்கள் மேல் உள்ள வெறுப்பை காட்டுவதை போல இருந்தது. 

பின் முதல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் பல கிண்ணங்களில் கேசரியுடன் மீன் துண்டுகள் வைக்கப்பட்டு இருக்கும். எந்தஅணி அதிகமாக சாப்பிடுகிறதோ அந்த அணிக்கு கிட்சன் சொந்தம். வாஸ்து சரியில்லாத கிட்சன் கிடைக்க வேண்டும் என்பது தான் இரு அணியினரின் எண்ணமாக இருந்தது. நீல அணியில் இருந்த சென்றாயனும், மஞ்சள் அணியில் இருந்து ரித்விகாவும் வந்தனர். இதில் நீல அணியே வெற்றி பெற்று கிட்சனை தன்வசப்படுத்தியது. இனி சாப்பிட வேண்டும் என்றால் ஒவ்வொரு முறையில் டாஸ்க் செய்து ஒவ்வொருவராக சாப்பிட வேண்டும். 

இதில் நடுவர் ஷாரிக் சரியான முடிவை எடுக்கவில்லைஎன  மஞ்சள் அணியினர் குத்தம் கூறினர். மை டிசிஷன் என கராராக பதில் அளித்துவிட்டு சென்றார் ஷாரிக். 

பின் ராணுவ பயிற்சி டாஸ்க் கொடுக்கப்பட்டது. கார்கில் போர் நினைவாக இந்த டாஸ்கினை கொடுத்தார்கள். இதிலும் ஜனனி அணியே வென்றது. எனவே கார்டன் ஏரியா இனி அவர்களுக்கு தான். கிட்சனில் பாதுகாப்புக்கு யாரும் இல்லை என நீல கொடிகளை அகற்றி விட்டு மஞ்சள் கொடிகளை நட்டார் மும்தாஜ். இப்படியெல்லாம் ரூல்ஸ்ல கொடுக்கவே இல்லையே என எதிரணியினர் குழம்ப மும்தாஜ் விடாப்பிடியாக நின்றார். மும்தாஜ் செய்வது தவறு தான் என்றாலும் ஜனனி அதற்கு கொடுத்த ரியாக்‌ஷன் ரொம்ப ஓவர். 

வீட்டில் தொடர்ந்து சண்டை நடப்பதைசிறையில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த மகத், "என்னை அதில் இருந்து காப்பாற்றிவிட்டீர்கள்.. ஐ லவ் யூ பிக்பாஸ்" என்றார். 

அதே தான் மகத் வெளியே இருந்திருந்தால் அவர் கத்துவதை வேறு கேட்க வேண்டி இருக்கும். 

டேனி கத்தக்கூடாது என்று கூறிவிட்டு தற்போது அவருடன் சேர்ந்து ஜனனியும் கத்திக்கொண்டு இருப்பதாக மகத்திடம் பாலாஜி கூறிக்கொண்டு இருந்தார். இதை அப்படியே ஜனனியிடம் கூறினார் மகத். ஜனனி இதனை டேனியிடம் கூறினார். ஒரு செய்தி எத்தனை பேரை தாண்டி செல்கிறது என்பதை பார்க்க முடிந்தது. 

சாப்பாடு ரெடியாக லேட்டாகும் என கிட்சன் ஓனர்கள் கூற, லிவ்விங் ஏரியாவில் இருந்த பழங்களை எடுத்தார்கள் மஞ்சள் அணியினர். உடனே அதனை தடுத்தார் நடுவர் ஷாரிக். தப்பு பண்றீங்க ஷாரிக் என கத்திக்கொண்டு சென்றார் மும்தாஜ். 

எதிரணியில் இருப்பவர்கள் சாப்பிடவில்லை என்பதால் அவர்களை அழைத்து என்ன வேண்டும் என்று கேட்டு தயார் செய்ய சென்றார் ஐஸ்வர்யா. யாஷிக்கா டாஸ்க்கை செய்து சாப்பிட்டுக்கொண்டு இருக்க.. அடுத்து வரும் வைஷ்ணவிக்கு பாத்திரம் சுத்தம் செய்ய வேண்டும் என ஐஸ்வர்யா கூறினார். உடனே எனக்கு சாப்பாடு வேண்டாம் என்றதும், நான் பாத்திரம் கழுவிவிட்டு சாப்பிடுகிறேன் என மும்தாஜ் கூறினார். உங்களுக்கு வேற டாஸ்க் இருக்கு என ஐஸ்வர்யா கூறினார். 

என்ன டாஸ்க்னு கேட்டுட்டு வாங்க என ரித்விகா கேட்க தேவையில்லாமல் கத்தினார் ஐஸ்வர்யா. தனக்கு டாஸ்க் என்ன என்பது தெரியாது என்றால் கேட்டு வந்து சொல்ல வேண்டும் என்பது தான் நியாயமான ஒன்று. ஆனால் ஐஸ்வர்யா இதனை பெரிதாக எடுத்துக்கொண்டு கத்தினார். ரித்விகா தன் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துக்கூறியும் ஐஸ்வர்யா கேட்பதாக இல்லை. கடைசியில் ரித்விகா அழுதே விட்டார். 

கத்திக்கொண்டே இருந்த ஐஸ்வர்யாவும் அழ, உடனே டேனியும் ஜனனியும் அவரை சமாதானப்படுத்தினார். பின் யாஷிக்கா தனியாக அழைத்து சென்று பேசினார். பிக்பாஸ் வீட்டில் யாரும் நிம்மதியாக இருக்க முடியாது என்றார். ஹப்பா.. இவருக்காவது தெரிகிறேதே என தோன்றியது. நிம்மதியாக இருப்பதற்காகவா இத்தனை கேமராக்கள், இத்தனை பொருட்செலவில் செட் போட்டு நிகழ்ச்சி நடத்துகிறார்கள். 

இந்த பிரச்னை குறித்து பேசும் போது, ஜனனிக்கும் மும்தாஜுக்கும் முட்டிக்கொண்டது. ஜனனி புத்திசாலித்தனமாக நடந்து கொள்கிறேன் என மும்தாஜ் பேசுவதை கேட்காமல் காதுகளை மூடிக்கொண்டு நகர்ந்து சென்றார். பார்க்கும் நமக்கே கடுப்பாக தான் இருந்தது. மும்தாஜை சொல்லவா வேண்டும் அவரும் கத்திவிட்டு சென்றார். கடைசியில் கேட்கும் குரல் நேற்று கேட்கவில்லை. இந்த டாஸ்கின் முதல் நாளே இவ்வளவு சண்டைகளை நடக்கிறது. எனவே இன்னும் 3 நாட்களுக்கு இதே தான் நடக்கும்...

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close