மும்தாஜை வாயை மூட சொல்லும் ஷாரிக்: பிக்பாஸ் பிரோமோ

  Newstm Desk   | Last Modified : 25 Jul, 2018 10:56 am
biggboss-promo-1-25-07-2018

பிக்பாஸ் வீட்டில் மும்தாஜுக்கு பிடித்த ஷாரிக்கே அவரை எதிர்த்து பேசுகிறார். 

பிக்பாஸின் நேற்றைய நிகழ்ச்சியில் சண்டைகள் மட்டுமே காட்டப்பட்டன.  ஒரு டாஸ்கில் பிரச்னை நடக்கிறது என்றால் அதனை 2, 3 நாட்களுக்கு இழுத்துவிடுவது பிக்பாஸுக்கு கைவந்த கலை. அதையே தான் இப்போதும் செய்கிறார். நேற்றைய எங்க ஏரியா உள்ள வராத டாஸ்க் இன்றும் நடப்பது போன்ற காட்சிகள் தான் பிரோமோவில் காட்டப்படுகின்றன. 

அதில், மும்தாஜும், ஷாரிக்கும் சண்டைப்போட்டுக்கொள்கின்றனர். நீங்க கத்தி பேசுறத நிறுத்தனும் என்று ஷாரிக்கிடம் மும்தாஜ் கூறுகிறார். நீங்க என் டீச்சர் இல்ல அப்படி சொல்லாதீங்க என்கிறார் மும்தாஜ். உடனே, "நான் பேசுறது உங்களுக்கு டிஸ்டர்ப் ஆகுதுனா காதை மூடிக்கோங்க" என்கிறார் மும்தாஜ். உடனே நீங்க வாய்ல பிளாஸ்த்ரி போட்டுக்கோங்க என்கிறார் ஷாரிக். 

ஷாரிக்கை குழந்தை போல பார்ப்பதாலோ என்னவே கண்கலங்கி கோப்பத்தோடு, "எங்க தொடு பார்ப்போம்" என்கிறார் மும்தாஜ். ஷாரிக் அப்படியே செய்ய "வேணாம் ஷாரிக்" என மும்தாஜ் கூறுவதோடு பிரோமோ முடிந்தது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close