பொறாமை புடிச்சவளே என யாரைத் திட்டுகிறார் மஹத் - பிக்பாஸ் ப்ரோமோ 2

  திஷா   | Last Modified : 25 Jul, 2018 03:21 pm
bigg-boss-promo-2

பிக்பாஸில் நீலம் மஞ்சள் என அணி பிரிக்கப் பட்டுள்ளது. இதில் ப்ளூ டீம் தங்களது டாஸ்க்கை சரியாக செய்து வெற்றிப் பெற்றுள்ளனர். 

இப்போது வந்துள்ள ப்ரோமோவில் டாஸ்க்கில் நன்றாக பெர்ஃபார்ம் செய்த டேனிக்கு பைக் ஒன்றை பரிசளிக்கிறார் பிக்பாஸ். அனைவரும் கை தட்டி ஆரவரம் செய்கிறார்கள். ஆனால் எதிரணியில் இருக்கும் வைஷ்ணவி மட்டும் உர்ரென்று இருக்கிறார். 

#BiggBoss Day 37: பிக்பாஸ் வீட்டில் யாரும் நிம்மதியா இருக்க முடியாது!

சாவியை கைவாங்கிக் கொண்டு வரும் டேனி, பொன்னம்பலத்திடம் 'உங்களுக்குப் புடிஞ்சிருந்ததா அண்ணே' என்கிறார். 'ரொம்ப ஹேப்பிப்பா என்கிறார்'.

'நீ ஜெயிச்சதும் மூஞ்சே மாறிடுச்சி, எனக்கு ஷாக்கு மச்சான். நான் பாக்குறேன் எல்லாருமே அங்க ஹேப்பியா ஃபீல் பண்றாங்க. என்னிக்குமே ஒரு எதிரி ஜெயிச்சா கூட ஹேப்பியா ஃபீல் பண்ணனும். பொறாமை புடிச்சவளே வெட்கமா இல்ல உனக்கு? ஒருத்தனோட வெற்றிய உன்னால ஏத்துக்க முடிலன்னா, நான் என்னடா சொல்றது, மனுஷனா நீ' என டேனியிடம் முறையிடுகிறார் மஹத். 

அப்போது வைஷ்ணவியின் சோகமான முகம் திரையில் ஆங்காங்கே வந்து மறைகிறது. ரூம்மேட்களின் கீழ்த்தரமான அணுகுமுறைகள் ஒவ்வொன்றாக வெளிப்படுகிறது.

Newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close