இடத்திற்காக அடித்துக்கொள்ளும் போட்டியாளர்கள்: பிக்பாஸ் பிரோமோ 1

  Newstm Desk   | Last Modified : 26 Jul, 2018 12:11 pm

26-07-2018-biggboss-promo-1

மும்தாஜ் செய்த விதிமீறலையே டாஸ்காக மாற்றி கொடுத்து சண்டையை ஏற்படுத்தி இருக்கிறார் பிக்பாஸ்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பிரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் அடித்துக்கொள்கிறார்கள் என்றே கூறலாம். இன்றும் எங்க ஏரியா உள்ள வராதா டாஸ்க் தொடர்கிறது. டாஸ்க் தொடங்கும் போது எதிரணியினர் தங்கள் இடத்தில் இல்லாத போது அந்த இடத்தில் தனது அணி கொடியை வைத்து லாஜிக் பேசினார் மும்தாஜ். அது தவறு என நடுவர் ஷாரிக் பதிலளித்துவிட்டார். 

டாஸ்க்கை இப்படி மாற்றினால் இன்னும் சண்டை நடக்கும் என்று பிக்பாஸ் யோசித்தார் போல. தற்போது மும்தாஜ் செய்ததையே டாஸ்க்காக மாற்றி விட்டார். அது போல இரண்டு அணியினரும் அடித்துக்கொள்ளாத குறையாக மற்றவர்கள் இடத்தில் கொடியை நட போட்டிப் போடுகிறார்கள். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close