புறம் பேசும் பொன்னம்பலம்: பிக்பாஸ் பிரோமோ 1

  Newstm Desk   | Last Modified : 27 Jul, 2018 10:46 am
27-07-biggboss-promo-1

கடந்த 3 நாட்களாக நடந்து வந்த 'எங்க ஏரியா உள்ள வராத" டாஸ்க் இன்று முடிந்துவிடும் என்று நம்பலாம். இனியும் அதை நீட்டித்து சண்டை போடும் தெம்பு போட்டியாளர்களுக்கும் இல்லை, அதை பார்க்கும் நமக்கும் இல்லை. 

இன்றைய முதல் பிரோமோவில், மும்தாஜ் மற்றும் பொன்னம்பலம் பேசுவது மட்டும் காட்டப்படுகிறது. பிரோமோவில், லக்சரி பட்ஜெட் டாஸ்க் தொடங்கியதில் இருந்து சாப்பிடாமல் இருந்த மும்தாஜ், சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். மற்றொரு பக்கம், மும்தாஜைப் பற்றி பொன்னம்பலம் சிலரிடம்  கூறிக்கொண்டு இருந்தார். முதல் நாளில் இருந்து, உதவி செய்து விட்டு சொல்லிக்காட்டுகிறார் என்ற குற்றச்சாட்டு மும்தாஜ் மீது வைக்கப்படுகிறது. பலரும் இதனை அவரிடமே கூறிவிட்டனர். இந்த பிரோமோவில் பொன்னம்பலமும் அதையே தான் கூறுகிறார். "அவங்க என்கிட்ட தோசை வேணுமானு கேட்டாங்க, கொடுத்துட்டு அதையே சொல்லிக்காட்டிக்கொண்டு இருக்காங்க" என பொன்னம்பலம் பேசிக்கொண்டு இருந்தார். 

சாப்பிட்டுக்கொண்டு இருந்த மும்தாஜ், "நமக்கு யார் மேல பாசம் வரும் என கூற முடியாது. சாப்பாடு இல்லைனாலும் பொய் சொல்ல மாட்டேன்" என யாஷிக்காவிடம் கூறிக்கொண்டு இருந்தார். 

இன்று பிக்பாஸ் வீட்டில் 39வது நாள்... கடந்த 38 நாட்களும் சாப்பாடிற்காக மட்டுமே அங்கு பிரச்னை நடந்துள்ளது. இன்றும் அப்படியே நடக்கவிருக்கிறது என்பதை தான் இந்த பிரோமோ காட்டுகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close