#BiggBoss Day 39: ஜனனி பேசுறது எல்லாமே பொய் தான்...

  Newstm Desk   | Last Modified : 29 Jul, 2018 12:22 pm

what-happened-in-biggboss-day-39

வெற்றியை மட்டுமே மனத்தில் வைத்து பிக்பாஸ் வீட்டில் சிலர் இருப்பது தெரிகிறது. இதனால் தொடர்ந்து பொய் கூறுவது, போட்டிகளில் எதிரணியை ஏமாற்றுவது என செயல்பட்டு வருகின்றனர். அப்படி பிக்பாஸ் வீட்டில் 38வது நாள் என்ன தான் நடந்தது...

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சிறை கைதிகள், எப்போது வெளியே இருப்பார்கள்.. எப்போது சிறைக்குள் இருப்பார்கள் என்றே தெரியவில்லை. தற்போதைய கைதி பாலாஜி நேற்று நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே வெளியே தான் இருந்தார். எதிரணியான அவர் கிட்சன் ஓனர்கள் கொடுக்கும் டாஸ்க்கை செய்யாமலேயே ஆப்பிளை எடுத்து சாப்பிட்டார். அதற்கு உடந்தையாக இருந்தது கிட்சன் அணியின் சென்றாயன்.

முன்னாள் சிறைக் கைதி மகத், இன்னும் ரெண்டு நாள் ஜெயில்ல இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் என கூறிக்கொண்டு இருந்தார். அவர் வெளியே வந்து ஹீரோவாக டிரைப் பண்ணுவதை பார்ப்பதற்கு அவர் சிறையில் இருப்பதே மேல் என்று தான் நமக்கும் தோன்றுகிறது. 

அவர் வெளிய வந்த பின் முதல் வேலையாக, தனது அணிக்கு தேவையில்லாத  தலைவலியை கொடுத்தார். அவர் எப்போதோ ஜனனிக்கு டவல் கொடுக்கிறேன் என்று கூறியிருந்தாராம். அந்த டவலை இப்போது கொடுத்தார். நடந்து கொண்டிருந்த டாஸ்க்கின் படி பெட்ரூமில் இருக்கும் பொருட்களை, எதிரணியினர் டாஸ்க் செய்து விட்டு தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.   தனது அணியில் இருக்கும் மகத், எதிரணிக்கு டவலை கொடுத்ததை ரித்விகா தட்டிக்கேட்டார். 

"டாஸ்க் போயிட்டு இருக்கிறப்போ இப்படி பண்ற" என்று கண்டித்து டவலை வாங்கிட்டு வா என மகத்தை அனுப்பினார் ரித்விகா. மகத்தும், ஜனனியும் தூய தமிழில் மொக்கையாக பேசிய பிறகு டவல் பெட்ரூம் அணிக்கே திரும்பி வந்தது. 

அடுத்து வீட்டின் முக்கியமான இடத்திற்கான டாஸ்க். பாத்ரூமை யார் சொந்தமாக்கி கொள்ள போகிறார்கள் என்பதற்கான டாஸ்க்கை அறிவித்தார் பிக்பாஸ். அதன்படி, சோப்பை குளித்தே கரைக்க வேண்டும். இதற்காக இரு அணிகளில் இருந்தும் ஒருவர் வரவேண்டும். மும்தாஜ் அணியில் இருந்து மகத்தும், ஜனனி அணியில் இருந்து சென்றாயனும் வந்திருந்தனர். 

சென்றாயன் போட்டியில் களமிறங்குவதற்கு முன்பே, எப்படியெல்லாம் சீட்டிங் செய்யலாம் என அட்வைஸ் செய்து அனுப்பியது ஜனனி அணி. போட்டித் தொடங்கியதும் சென்றாயன் சிறப்பாக விளையாடியது போல தான் தெரிந்தது. அவர் தலையில் சோப்பை தேய்க்க தேய்க்க வேகமாக கரைந்தது. மகத்தும் முடிந்த வரை முயற்சி செய்தார். ஆனால் முடிவில் சென்றாயனின் சோப்பு அதிகமாக கரைந்திருந்தது. 

முடிவை எடுக்க இரண்டு சோப்புகளையும் சோதனை செய்த நடுவர் ஷாரிக், மகத் வெற்றி பெற்றிருப்பதாகவே அறிவித்தார். அதற்கு காரணம், தனது அணி கற்றுக்கொடுத்த சீட்டிங் வேலைகளை சென்றாயன் கச்சிதமாக செய்திருந்தார். சோப்பை தலையில் தேய்க்கும் போது, கையில் இருந்த நகத்தால் சோப்பை கீறி கீறியே கரைத்திருந்தார். அவர் நின்றிருந்த இடத்திலும் சோப்பு நுரைகள் இல்லாமல் சோப்பு துண்டுகளை காண முடிந்தது. ஷாரிக்கின் முடிவு சரிதான், சென்றாயன் ஏமாற்றி விளையாடி விட்டார் என தெரிந்தும் ஜனனியும், டேனியும் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தனர். இருந்தும் ஷாரிக் அவர்கள் பேசியதை கேட்கவில்லை. பாத்ரூமை வென்றதை கொஞ்சமாக கொண்டாடி கொடியை நட்டனர் மும்தாஜ் அணியினர். 

பெட்ரூம்மில் இருந்த டி-ஷர்ட்டை எடுக்க அந்த பகுதியின் ஓனர்கள் அணியின் மகத்திடம் உத்தரவு வாங்கினார் சென்றாயன். மகத்தும் ஒரு டாஸ்க்கை கொடுத்து அனுமதித்தார். டி-ஷர்ட் மட்டும் தான் என்று கூறிவிட்டு, போர்வை, தலையணை என அனைத்தையும் எடுத்து வந்தார் சென்றாயன். 

உடனே அந்த அணியில் இருந்தவர்கள் கேட்க... ஜனனி அணியினர் மகத் தான் எடுத்துக்க சொன்னாரு என்று கூறினார். ஆனால் மகத் மறுக்க... நடுவர் படுக்கை அறை பொருட்களை அங்கேயே வைக்க உத்தரவிட்டார். 

நடுவரின் இந்த தீர்ப்பு சரியில்லை என ஜனனி அணி பேசிக்கொண்டு இருந்தது. அப்போது மும்தாஜும் ஷாரிக்கும் டீம் சேர்ந்துவிட்டதாக சென்றாயன் கூறிக்கொண்டு இருந்தார். உடனே, இதெல்லாம் மக்கள் கவனித்துக்கொண்டு தானே இருப்பார்கள் டேனி என்றார் ஜனனி. போட்டியில் எதிரணியை ஏமாற்றி விட்டு நியாயம் பேசுவதற்கெல்லாம் பிக்பாஸில் ஏதேனும் தண்டனை கொடுக்க வேண்டும்...

இந்த டாஸ்க் தொடங்கியது முதல் மும்தாஜ் சாப்பிடவே இல்லை. அந்த டீயை மற்றவர்கள் போட்டுக்கொடுத்தால் தான் என்ன... அவர் பிடிவாதம் ஓவருக்கும் ஓவராக தான் உள்ளது. 

மும்தாஜிடம் சென்று ஷாரிக் பேச்சுவார்த்தை நடத்தினார். கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க என மும்தாஜிடம் கேட்டுக் கொண்டு இருந்தார். உடனே எதையும் மறைக்காமல், "ஜனனி என்னை பழிவாங்க வேண்டும் என்றே எனக்கு தண்டனை வழங்குகிறார். நான் தண்டனையை செய்து அவருக்கு சந்தோஷத்தை அளிக்க விரும்பவில்லை" என கூறினார் மும்தாஜ்.  

இரு அணியினரையும் அழைத்து பேசி இந்த பிரச்னையை முடித்து வைக்கும் முயற்சியில் இறங்கினார் ஷாரிக். இது நல்ல மூவ் தான் என்றாலும் வொர்க் அவுட்டாகவில்லை. பேச்சுவார்த்தையின் போது மும்தாஜ் கூறிய குற்றச்சாட்டு முழுவதுமாக பொய் என மறுத்தார் ஜனனி. இதையே அவர் பேஸ்புக் ஸ்டேட்டசாக போட்டுறிருந்தார் ஆயிரம் 'லாஃபிங் ஸ்மைலி"களை போட்டுவிட்டிருக்கலாம். ஜனனிக்கு தொடக்கத்தில் இருந்தே மும்தாஜ் மீது கோபம் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. 

மகத்தை வைத்து தான் தற்போது எதிரணியினர் விளையாடிக்கொண்டு இருக்கின்றனர். தொடர்ந்து, அவரை அழைத்து பேசி குழப்பிவிட்டு அனுப்புகின்றனர். அவரும் அவர்கள் பேசுவது போலவே தனது அணியில் வந்து பேசிக்கொண்டு இருந்தார்.

பாத்ரூமை ஒவ்வொரு முறை பயன்படுத்துவதற்கும் டாஸ்க்கை கொடுத்தார். அதிகபட்சமாக அந்த பகுதிக்கு சென்றாயன் மட்டும்தான் வந்திருப்பார் போல தொடர்ந்து அவருக்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகளே காட்டப்பட்டது. சிலருக்கு அவசரமாக பாத்ரூமை பயன்படுத்த வேண்டும் என்றால் யூஸ் பண்ண பிறகு டாஸ்க்கை செய்துவிடுங்கள் என்றும் கூறியது பாத்ரூம் ஓனர்கள் அணி. 

இரவில் சென்றாயன் அந்த பக்கமாக வர, டாஸ்க் செய்த பிறகு உள்ளே செல்லலாம் என கராராக இருந்தார் மும்தாஜ். அவர் கொடுத்த டாஸ்க்கும் சுவாரஸ்யமாக தான் இருந்தது. செல்ஃபி புள்ள பாடலின் பல்லவியை 5 முறை பாட வேண்டும். எளிதாக பாடிவிட்டு செல்வார் என எதிர்பார்த்தால், சென்றாயன் சொதப்பினார். 

அதெல்லாம் வேணாம் மேடம், எனக்கு பாட வரல என சென்றாயன் கூற... நீங்க தான் இந்த பாட்டை பாடி ஃபர்ஸ்ட் ரேங்க்கெல்லாம் எடுத்தீங்கலே என கூறினார் மும்தாஜ். அதில் காடுப்பான சென்றாயன், பாடலையும் ஓழுங்காக பாட முடியாமல்... மும்தாஜிடம் பேசி வெல்லவும் முடியாமல் கோபப்பட்டார். வீட்டிற்குள் சென்று தனது அணியின் டேனி மற்றும் ஜனனியின் உதவியை நாடினார். அவர்கள் வந்து ஒன்னும் நடப்பது போல தெரியவில்லை. 

உடனே, நான் இங்கேயே போக போறேன் என்றெல்லாம் பேச தொடங்கினார் சென்டு. அதற்கெல்லாம் மும்தாஜ் பதில் அளிப்பது போல தெரியவில்லை. ஒரு வழியாக பாடலை பாடி முடித்துவிட்டு உள்ளே சென்றார் சென்றாயன். 

அவர் உள்ளே சென்றதும், "சீப் பிகேவியர், இங்கையே போயிடுவேன்னு சொன்னாரே.. போக வேண்டியது தானே" என் மும்தாஜ் கத்தி கொண்டு இருந்தார். இதற்கு பழி வாங்கும் விதத்தில் அந்த அணி ஈடுபட்டது. இரவில் ஊதுவத்தி ஏற்றுவதற்காக கேஸை ஆன் செய்யுமாறு டேனியிடம் மும்தாஜ் கேட்ட போது, கேஸ் வரல... எறியல என கூறினார்கள் டேனியும், சென்றாயனும். விஷயம் தெரியாமல் பார்த்த போது அதனை நாமும் நம்பி தான் விட்டோம். ஆனால் மும்தாஜ் வெளியே சென்றதும் கேமராவை பார்த்து, "சும்மா நடிக்கிறோம். நாங்க தான் ஆஃப் பண்ணி வெச்சிருக்கோம்" என்றார் டேனி.

உடனே அந்த அணியின் தலைவர் ஜனனி அங்கு வந்து, "உலக மகா நடிப்பு இது" என அவர்களை தட்டிக்கொடுத்தார். ஆக.. அவர்கள் மூவருக்கும் கேஸ் ஏன் வேலை செய்ய வில்லை என்பது தெரியும். 

இரவில் கூட யாரும் தங்கள் ஏரியாவிற்குள் வந்துவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்த மும்தாஜ், பாத்ரூமிலேயே கதவை யாரும் திறக்காத வண்ணம் படுத்துக்கொண்டார். தங்கள் அணியில் இருக்கும் யாரையும் கஷ்டப்படுத்தாமல், ஒரு தலைவியாக தானே இதனை செய்தது பாராட்டத்தக்கது. ஒருவேளை, தங்கள் அணியில் இருப்பவர்கள் யாரையும் நம்பாமல் சுட அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் தான்.

அடுத்த நாளும் பழைய பாடல் தான்... யாரடி நீ மோகினி என பாடல் ஒலிக்க... சில நாட்களுக்கு பிறகு ஐஸ்வர்யா, யாஷிக்காவின் நடனத்தை பார்க்க முடிந்தது. 

காலை கேஸ் இல்லை என சமைக்காமல் இருந்தனர் கிட்சன் அணியினர். கிட்சனை ஆய்வு செய்த நடுவர் ஷாரிக், தவறை கண்டுபிடித்தார். யார் பண்ணது சொல்லுங்க என அவர் கேட்க,அந்த அணியில் இருந்த ஒருவரும் வாயை திறக்கவில்லை. அந்த அணியின் தலைவர் ஜனனியோ ஒரு படி மேல சென்று, எனக்கு எப்படி கேஸை ஆஃப் பண்ணுவது என்று கூட தெரியாது என கூறினார். மாற்றி மாற்றி ஒவ்வொருவரும் எனக்கு தெரியாது, எனக்கு தெரியாது என கூறிக்கொண்டு இருந்தனர். 

ஏதாவது ஒரு கட்டத்தில் தங்கள் தவறை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்ப்பார்த்த நமக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. தொடர்ந்து பொய் கூறிக்கொண்டே இருந்தனர். நடுவர் இதுப்பற்றி கேள்வி எழுப்பி, டேனி இந்த விஷயத்தை திசைத்திருப்பி கத்திக்கொண்டு இருந்தார். அதோடு நேற்றைய நிகழ்ச்சி முடிந்தது. 

நேற்று நடந்த நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் போது, நமக்கு வார இறுதியில் நல்ல குறும்படம் காத்திருப்பது தெரிகிறது...

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.