• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

#BiggBoss Day 40: இன்னும் வெட்டுக்குத்து தான் நடக்கல...

  Newstm Desk   | Last Modified : 29 Jul, 2018 12:24 pm

what-happened-in-biggboss-day-40

வீட்டில் இருப்பவர்களின் வாய் சண்டை தான் போரடிக்கிறது... இனி கை சண்டை நடக்க டிரிக்கர் பண்ணி விடலாம் என்ற முடிவுக்கே சென்று விட்டார் மிஸ்டர் பிக்பாஸ். போன சீசனில் இந்த அளவுக்கு உக்கிரத்தை அவர் டாஸ்க் உருவாக்குவதில் காட்டியதில்லை. இந்த முறை போட்டியாளர்கள் செய்யும் மொக்கைகள் நம்மாலேயே பொறுத்துக்கொள்ள முடியவில்லை.. 24 மணி நேரமும் பார்க்கும் பிக்பாஸ் குழுவினருக்கு ‘ஆத்திரங்கள் வருது மக்களே’ மொமண்டுகள் மட்டும் தான் இருந்திருக்கும்.

39வதுநாள் காட்சிகளே நேற்றும் தொடர்ந்தன. வீட்டின் 5 பகுதிகளை கைப்பற்றுவதற்கான போட்டிகளில் 4 போட்டிகள் முடிந்து விட்டன. இன்னும் லிவிங் ஏரியா யாருக்கு என்பது மட்டும் தான் மிச்சம். அதற்கான டாஸ்க்கும் கொடுக்கப்பட்டது.

அந்த டாஸ்க்கின் படி எதிரணியின் தடுப்பாட்டத்தை சமாளித்து தலையனைகளை கொடுக்கப்பட்ட இடத்தில் போடவேண்டும். இந்த போட்டிக்காக முதலில் மஞ்சள் அணியின் மகத், யாஷிக்கா, வைஷ்ணவி ஆகியோர் வந்திருந்தனர். அவர்களை தடுக்க எதிர் அணியில் இருந்து பொன்னம்பலம் மற்றும் சென்றாயன் வந்தனர்.

மஞ்சள் அணி சிறப்பாக விளையாடியது.. குறிப்பாக யாஷிக்காவிடம் இருந்த வேகம் செம்ம! அவர்களை சமாளிக்க முடியாமல் பொன்னம்பலமும்,  சென்றாயனும் திணறினர். அதற்கு முன் விளையாடிய 4 டாஸ்க்குகளையும் உஷாராக, விளையாடாமல் நழுவிய ஜனனி... வெளியே இருந்து சென்றாயனை திட்டிக்கொண்டு இருந்தார். மஞ்சள் அணி 16 தலையணைகளை போட்டிருந்தது.
அடுத்ததாக நீல அணியில் இருந்து தலைவி ஜனனி, ஐஸ்வர்யா, டேனி ஆகியோர் வந்தனர். அவர்களை தடுக்க மும்தாஜ், வைஷ்ணவி களமிறங்கினர். இதில் கிடைத்த வாய்ப்பையெல்லாம் ஜனனி மெத்தனமாக விளையாடி வீணாக்கினார். மற்றவர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் டேனியும் சோர்ந்து போய் பாதியில் விளையாடாமல் நிறுத்தினார். முடிவில் அந்த அணியால் 15 தலையணைகளை மட்டும் எடுக்க முடிந்தது.

இதில் வெற்றி பெற்ற மும்தாஜ் அணி லிவிங் ரூமை கைப்பற்றியது. எதிரணிக்கு நாம வெற்றி பெற்றதை தாங்கி கொள்ளவே முடியாது என யாஷிக்கா கூறிக்கொண்டு இருந்தார்.

மற்றொரு பக்கம், தோல்வி குறித்து ஜனனி அணி பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது ஐஸ்வர்யா செய்த தவறு குறித்து ஜனனி கூற, நீதான் முழிச்சிட்டு இருந்த என அவர் வாயை அடைத்தார் பொன்னம்பலம். அணியின் தலைவி என்றும் பாராமல்…

எதிரணிக்கு ஈசியான டாஸ்க்கை கொடுத்து தனது அணியின் கோபத்தை சம்பாதித்து கொண்டு இருந்தார் மகத். அவருக்கு ஜனனி மேல் இருக்கும் பாசத்தை இதில் காட்டுவது மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை. இதில் அந்த அணியின் தலைவி மும்தாஜுக்கு மகத்துக்கும் முட்டிக்கொண்டது. இந்த டாஸ்க்கில் மகத்தை எப்போது காட்டினாலும் அவர் சாப்பிட்டுக்கொண்டே தான் இருந்தார்.

அடுத்து இந்த டாஸ்க்கின் இறுதிக்கட்டம். இதில் தங்களது இடத்தை காப்பற்றி கொள்ளவும், எதிரணி இடத்தை கைப்பற்றவும் முடிந்த வரை என்ன வேண்டுமானும் செய்யலாம் என்பது டாஸ்க். இதில் நாம் எதிர்பார்த்ததை விட ஆக்ரோஷமாக விளையாடினர் போட்டியாளர்கள். வார்த்தைகள் போட்டு விவரிக்க முடியாது அளவுக்கு இருந்தது போட்டியாளர்களின் பெர்ஃபார்மன்ஸ். இதில் மும்தாஜ் மற்றும் பொன்னம்பலம் பக்கம் யாருமே வரவில்லை. குறிப்பாக தன் அருகில் வந்தவரை அடிச்சிடுவேன் என மிரட்டினார் பொன்னம்பலம்.
இந்த டாஸ்க் முடிவில் மஞ்சள் அணி வென்றது. விளையாடும் போது டேனிக்கு கையில் அடிப்பட்டு ரத்தம் வர, போட்டி முடிந்ததும் அவருக்கு ஐஸ் கட்டியை கொடுத்து உதவினார் மகத்.

இரு அணிகளில் இருந்தும் சிறந்த போட்டியாளராக யாஷிக்கா மற்றும் சென்றாயன் தேர்வு செய்யப்பட்டனர். மோசமான போட்டியாளராக மும்தாஜ் மற்றும் பொன்னம்பலம் தேர்வாகினர். அவர்களுக்கு பல அழுக்கு காலணிகள் கொடுக்கப்பட்டு அதனை சுத்தப்படுத்த வேண்டும் என்ற டாஸ்க் தரப்பட்டது. தொடர்ந்து விடாபிடியாக இருந்த மும்தாஜ்… இந்த டாஸ்க்கை சிரித்தவாறு ஏற்றுக்கொண்டார்.

அடுத்த நாள்ஒலிக்கப்பட்ட பாடலுக்கு யாரும் நடனமாடவில்லை. அந்த நாளின் தொடக்கத்திலேயே பொன்னம்பலம் மற்றவர்கள் பற்றி சென்றாயனிடம் அனலைஸ் பண்ணி பேசிக்கொண்டு இருந்தார்.

முதல் முறையாக டேனி கேமரா முன் நின்று அழுதார். ஆனால் அது மற்றவர்களுக்கு தெரிந்துவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
இந்த வார லக்சரி பொருட்கள் வாங்க வெற்றி பெற்ற மஞ்சள் அணிக்கு 2500 புள்ளிகள் கொடுக்கப்பட்டது. அவர்கள் பொருட்கள் வாங்கும் போது எதிரணி அங்கே இருக்க கூடாது என்று கூறப்பட்டது. அதன் படி அவர்கள் பெட்ரூமிற்கு சென்றனர். இதெல்லாம் தப்பு நாமலும் நல்ல தான் விளையாடினோம் என அந்த அணியின் தலைவி ஜனனி கூறிக்கொண்டு இருந்தார். ஆனால் நியாயமாக விளையாடவில்லையே தங்கம்…

ஒரு வழியாக மும்தாஜ், தன் கையால் டீ தயார் செய்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அப்போது அருகில் இருந்த யாஷிக்காவிடம் ஷாரிக் குறித்து கண்கலங்கி பேசிக்கொண்டுஇருந்தார். அதை பார்த்து மற்ற போட்டியாளர்க்ள கிண்டல் செய்து கொண்டு இருந்தனர்.
எப்போதும் ஒன்றாக இருக்கும் மகத், யாஷிக்கா, ஐஸ்வர்யா இடையே ஏதோ மனகசப்பு. இந்த டாஸ்க்கில் அவர்கள் நடந்து கொண்ட விதம் மற்றவர்களை காயப்படுத்தி இருக்கலாம். பின் தலைருக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் ஐஸ்வர்யா தான் வெற்றி பெற்றார்.

தனியாக இருந்த யாஷிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் ஐஸ்வர்யா. ஆனால் யாஷிக்கா கடுப்பாக பேச, பெட்ரூமில் சென்று அழுதார் ஐஸ். சீக்கிரம் இருவரும் ஒண்ணு சேரனும்.

இன்று நாட்டமை தினம், இந்த வாரம் பல குறும்படங்கள் போடுவதற்கான குற்றங்களை போட்டியாளர்கள் செய்திருக்கின்றனர். போதாக்குறைக்கு தமிழகத்தில் நடக்கும் விஷயங்களை சேர்த்து நிறையபேசுவார் ஆண்டவர்.. சமாளிப்பது கஷ்டம்… யாருக்கு…  நமக்கு தான்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close