பிக்பாஸில் இருந்து வெளியேறும் நபர் இவர் தான்!

  Newstm Desk   | Last Modified : 29 Jul, 2018 09:13 am
who-is-going-to-get-evicted-from-biggboss

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியேற்றப்படும் நபர் யார் என்பது குறித்த தகவல்கள் வந்துள்ளன. 

கமல் இரண்டாவது சீசனாக தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி பிக்பாஸ். இரண்டாவது சீசனின் தொடக்கம், எந்த விறுவிறுப்பும் இன்றி இருந்தாலும் தற்போது போட்டி சூடுப்பிடித்துள்ளது 

16 பேருடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. 40 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மமதி, அனந்த் வைத்தியநாதன், ரம்யா, நித்யா ஆகியோர் வீட்டில் இருந்து எவிக்ட்டாகி உள்ளனர். ஒவ்வொரு எவிக்‌ஷனுக்கு பிறகும் போட்டி இன்னும் தீவிரமடைகிறது. 

இந்த வாரம் எவிக்‌ஷனுக்காக பொன்னம்பலம், மும்தாஜ், வைஷ்ணவி மற்றும் மகத் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில் வைஷ்ணவி இந்த வீட்டை விட்டு வெளியேற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து புறம் பேசுபவர் என்ற குற்றச்சாட்டு இவர் மீது வைக்கப்பட்டது. சில நாட்களாக அமைதியாகவே இருக்கும் வைஷ்ணவி, குறைந்த வாக்குகள் பெற்று வெளியேற்றப்படுகிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close