11 பேராக குறையும் குடும்பம்: பிக்பாஸ் பிரோமோ 1

  Newstm News Desk   | Last Modified : 29 Jul, 2018 12:09 pm

29-07-2018-biggboss-promo1

பிக்பாஸ்  நிகழ்ச்சியின் இன்றைய முதல் பிரோமோவில் எவிக்‌ஷன் பற்றி போட்டியாளர்கள் கூறுவது கட்டப்படுகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று எவிக்ஷன் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 5வது வாரமாக பொன்னம்லபம் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். மேலும் மும்தாஜ், வைஷ்ணவி, மகத், யாஷிக்கா ஆகியோர் நாமினேஷனில் இருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய பிரோமோவில் கமல், போட்டியாளர்களிடன் எவிக்‌ஷன் குறித்து கேள்வி கேட்கிறார். 

மிகவும் நம்பிக்கையாக இருக்கும் மகத், "நான் வெளியேற மாட்டேன் என நினைக்கிறேன்" என கூறுகிறார். மேலும் யாஷிக்கா, " நான் சந்தோஷமாக இருக்கிறேன், வெளியே போக விருப்பமில்லை" என்கிறார். 

மக்களின் அமோக ஆதரவை பெற்று வரும் பொன்னம்பலம், மக்களின் ரெகுலர் கஸ்டமராக தான் மாறிவிட்டதாக தெரிவித்தார். பொன்னம்பலத்தின் இது போன்ற வசனங்களை எப்போதும் ரசிக்கும் கமல் வெடித்து சிரித்து, குடும்பம் 11 பேராக குறைய போகிறது என்கிறார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close