#BiggBoss Day 41: மரியாதை கொடுத்தால் தான் மரியாதை தர முடியும்...

  Newstm Desk   | Last Modified : 29 Jul, 2018 01:40 pm
what-happened-in-biggboss-day-41

வாரத்தின் 5 நாட்களும் புலியாக இருக்கும் போட்டியாளர்கள் கமல் வரும் நாட்களில் பூனையாகும் காட்சிகளை தான் நாம் பார்த்து வந்தோம். ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக போட்டியாளர்கள் கமல் முன் குரல் உயர்த்தி பேசுவதை காண முடிகிறது. சிலர் தங்கள் பக்கம்  இருக்கும் நியாயத்தை கூறுவதற்காக அவ்வாறு பேசினாலும் பலர் தேவையில்லாமல் கத்துவது போல தான் இருக்கிறது. அப்படி கத்தி பேசி கமலிடம் அவர்கள் என்ன தான் கூறினார்கள்...

எப்போதும் போல கமல் வந்ததும் ரீகேப்பை காட்டிவிட்டு, பார்வையாளர்களிடம் பேச தொடங்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் சமூகத்திற்கும் என்ன தொடர்பு என ஒருவர் கேட்ட கேள்விக்கு, "மதம் வழியாக நல்லதை சொல்லிக்கொடுத்தது போல, பிக்பாஸ் வழியாக சிலவற்றை காட்டுகிறோம்" என்றார் கமல். 

பின் பிடித்த போட்டியாளர்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, உங்களுக்கெல்லாம் போன வாரம் பிடித்தவர்களை இந்த வாரம் பிடிக்கவில்லை. அது போல தான் எனக்கும். அந்நியாயமான கேள்வி இது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆதரவு தெரிவித்து வரும் மக்களை தான் பிடித்திருக்கிறது என்றார். 

கேள்வி நேரம் முடிந்த பின்பு, விஸ்வரூபம் படக்குழுவில் இருந்து நடிகை ஆண்ட்ரியா, பூஜா, இசையமைப்பாளர் ஜிப்ரான், பாடகர் சத்ய பிரகாஷ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் சென்றதை பற்றி கமல் அறிவித்தார். பின்னர் அவர்கள் சென்ற போது நடந்த காட்சிகள் காட்டப்பட்டன.

41வது நாள் ஏய்ய்.. ஆத்தா ஆத்தோரமா பாடலோடு தொடங்கியது. காலையிலேயே கிட்சன் பிரச்னை தான். பாலாஜி பேசும் எல்லாதுக்கும் இனி சப்டைட்டில் போடவேண்டும் என்பதை பிக்பாஸ் பார்வையாளர்கள் சங்கம் சார்பாக கோரிக்கையாக வைக்கலாம். அவர் பேசுவது பல சமயங்களில் புரிவதில்லை. ஆனால் அவை நல்ல கண்டென்ட் கொடுக்கும் விஷயங்களாக இருக்கின்றன. அது போல வைஷ்ணவி குறித்து மும்தாஜிடம் பேசிக்கொண்டு இருந்தார் பாலாஜி. 

போட்டியாளர்கள் காலையில் சோர்வாக அமர்ந்திருந்த நேரத்தில் மெயின் டோர் திறக்கப்பட்டு அங்கிருந்து விஸ்வரூபம் படக்குழுவினர் வந்தனர். 

சிறப்பாக வரவேற்று அவர்களை உள்ளே அழைத்துச் சென்றனர். திடீரென ஸ்டோர் ரூம் பெல் அடிக்க பூஜா, யாரோ போன் பண்றாங்க என்றார். முன்ன பின்ன பிக்பாஸ் பார்த்திருக்க மாட்டார் என்பது தெரிகிறது. ஆனால் சென்றாயனின் ஆங்கிலம் குறித்து மட்டும் வெளியே  இருப்பவர்கள் சொல்லி அனுப்பி இருக்கிறார்கள். போட்டியாளர்கள் செய்த உணவுகளை சாப்பிட்டு பாராட்டு தெரிவித்துக் கொண்டு இருந்தார்கள் விருந்தாளிகள். 

பின் போட்டியாளர்களுக்கு விஸ்வரூபம் டி-ஷர்ட்கள்  கொடுக்கப்பட்டது. அந்த படத்தின் சாதி மதம் பாடலை ஆண்ட்ரியாவும், சத்யபிரகாஷும் பாடினர். வந்திருந்த இசையமைப்பாளர் ஜிப்ரான், ஜனனி நல்லா பாடுவாங்க என்ற ரகசியத்தை போட்டுடைத்தார். 

உடனே அவரை மட்டும் ஏன் பாடவைக்கனும் எல்லோரும் பாடலாம் என பாட்டு போட்டி விளையாடினார்கள். பிக்பாஸ் அறிவித்த பின் கெஸ்டாக வந்தவர்கள் வீட்டை விட்டு புறப்பட்டனர். 

பின் அகம் டிவி வழியாக போட்டியாளர்களிடம் பேசினார் கமல். தொடக்கத்திலேயே கார்கில் நினைவுகள் குறித்தும், தனக்கு ராணுவ வீரர் சொன்ன கதை குறித்தும் கமல் கூறினார். பின் சென்ற வாரம் பொன்னம்பலம் குறிப்பிட்ட அவரது வாத்தியார் நிகழ்ச்சிக்கு வந்திருந்தது அருமையான தருணம். 

எப்போதும் குற்றம்சாட்டிக்கொண்டே இருக்கும் போட்டியாளர்களை தனித்தனியாக கன்ஃபஷன் அறைக்கு அழைத்து கேள்விகள் கேட்டார் கமல். 

முதலில் வந்த பொன்னம்பலம், வீட்டில் இருப்பவர்களில் மிகவும் ஆபாத்தான நபர் என பாலாஜியை கூறினார். பின் தான் டார்கெட் செய்யும் நபராக ஷாரிக்கை கூறினார்.  அனேகமாக அவருக்கு இந்த கேள்வி அவருக்கு புரியவில்லை என்று தோன்றுகிறது. கடைசியாக வீட்டிலேயே ஜீரோவாக இருக்கும் நபர் என ஜனனி பெயரை கூறினார். 

பின்னர் மும்தாஜிடம், இதே கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு வீட்டில் இருப்பவர்களில் யாரும் ஆபத்தானவர்கள் இல்லை என மும்தாஜ் கூறினார். பின், யார் வெற்றி பெற கூடாது என்று நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, பாலாஜி என கூறினார். பின் ஜீரோவாக இருக்கும் நபர் ஐஸ்வர்யா என்றார். 

டேனி, வீட்டிலேயே தனக்கு கடும் போட்டியாக இருக்கும் நபர் யாஷிக்கா என கூறினார். பின் மும்தாஜ் சரியாக போட்டிகளை விளையாடிவது இல்லை என்பதால் அவர் வெற்றி பெற கூடாது என்றார். மேலும் வீட்டில் ஜீரோவாக இருப்பது ஷாரிக் என கூறினார். 

வைஷ்ணவி, இந்த வீட்டில் யாரும் ஜீரோ இல்லை என்றார். 

பின்னர் வந்த ரித்விகா, கடுமையான போட்டியாளர் யாஷிக்கா, சீட்டிங் செய்பவர் என டேனி, ஜீரோ போட்டியாளர் என ஐஸ்வர்யாவை தேர்வு செய்தார். ரித்விகா கூறியது மிகவும் நேர்மையாக இருந்ததாக கமல் கூறினார். 

பின்னர் சென்றாயன் ஆபத்தானவர் மற்றும் வெற்றி பெற கூடாது என்ற இரண்டு கேள்விக்கும் மகத்தின் பெயரை கூறினார். 

பாலாஜியும் இதே போன்று அந்த இரண்டு கேள்விகளுக்கு டேனி பெயரை கூறினார். யாஷிக்கா வந்த போது சென்றாயன் வெற்றி பெற கூடாது என்றார். ஷாரிக், சீட்டிங் செய்யும் நபர் என மும்தாஜின் பெயரை கூறினார். 

மகத், வழக்கம் போல ஹீரோ வசனங்கள் பேசிவிட்டு பதில் அளித்தார். மும்தாஜ் வெற்றி பெற கூடாது என்றும் பாலாஜி தான் ஜீரோ என்றும் கூறினார். 

பின்னர் 'எங்க ஏரியா உள்ள வராத' டாஸ்க்கில் இருந்த அணிகள் படி போட்டியாளர்கள் பிரிந்து அமர்ந்தனர்.

நடுவாராக இருந்த ஷாரிக் குறித்து இரண்டு அணியினரிடம் கேட்டார் கமல். பெரும்பாலம் அவர் ஸ்டிரிக்ட்டான நடுவர் என்று அனைவரும் கூறினர். வைஷ்ணவி, நடுவர் கடுமையாக நடந்து கொண்டார் என்றார். இதே போல மும்தாஜும் ஷாரிக் ஒருத்தலைப்பட்சமாக இருந்ததாக கூறினார். 

பின் அனைவரும் மும்தாஜின் மீது இருக்கும் தவறுகள் குறித்து கூறினர். அதற்கு பதிலளித்த மும்தாஜ், "மரியாதை கொடுத்தால் தான் மரியாதை " என கூறினார். முக்கியமாக இந்த வாக்குவாதத்தின் போது மும்தாஜ் டீ குடிக்க மாட்டேன் என கூறியது பெரும் பிரச்னையாக எழுந்தது. எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட கமலே என்ன சொல்லுவது என புரியாமல் நாளைக்கு பார்க்கலாம் என கூறிவிட்டு சென்றார். 

இன்று எவிக்ஷன் நடக்கிறது. மேலும் எதிர்பார்த்த குறும்படங்களும் காட்டப்படவில்லை.. வெளியேற்ற படலத்தில் அதை மறந்துடுவாங்களோ?

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close