பிக்பாஸ்2 - இந்த முறை எவிக்‌ஷன் இல்லை... வைஷ்ணவிக்கு மறு வாய்ப்பு!

  Newstm Desk   | Last Modified : 29 Jul, 2018 10:46 pm
no-eviction-on-bigg-boss

இந்த முறை எவிக்‌ஷன் இல்லை. வைஷ்ணவி வெளியேறுவதாக காண்பித்துவிட்டு, அவரை தனி அறையில் அடைத்துள்ளனர்.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில், எவிக்‌ஷனில் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. வழக்கம் போல, வெளியேற ஒவ்வொருவரும் தயாராகி வந்தனர். இந்த முறை வைஷ்ணவி எவிக்‌ஷன் ஆகிறார் என்று கமல்ஹாசன் தெரிவித்தார். உடனே உற்சாகமாக புறப்படுவதுபோல் வைஷ்ணவி கிளம்புகிறார். பிக்பாஸ் வீட்டில் யாரும் அவர் செல்வதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 

மிக வேகவேமாக அவர் வீட்டைவிட்டு வெளியேறுவது போல் காண்பிக்கப்பட்டது. செல்ஃபி எல்லாம் எடுத்துக்கொண்டு, கிளம்பினார். பிக்பாஸ் மேடைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மேடைக்கு வரமாட்டார் என்று கமல் அறிவித்தார். 

பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரத்தியே தனி அறைக்கு அவர் தங்கவைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர், சில வீடியோ பதிவுகளை பார்த்தபிறகு மீண்டும் வீட்டுக்குள் செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வாரம் எவிக்‌ஷன் இல்லை என்பது தெரியவந்துள்ளது. 

வீட்டின் ரகசிய அறையில் இருந்தபடி, ரூம் மேட்ஸ் செயல்பாடுகள், பேசுவது உள்ளிட்டவற்றை வைஷ்ணவி பார்த்து வருகிறார். நாளை அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும்போது மற்றவர்கள் நிச்சயம் அதிர்ச்சியடைவர்கள்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close