தலையில் அடித்துக்கொண்டு செல்லும் மகத்... - பிக்பாஸ் ப்ரோமோ 1&2

  திஷா   | Last Modified : 30 Jul, 2018 01:46 pm
bigg-boss-promo-1-2

பிரச்னை இல்லாத பிக்பாஸ் வீட்டை நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவர்களின் சண்டைகள் தான் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தைக் கொடுக்கின்றன. இந்த வீட்டில் ஒவ்வொரிடமும் ஓவ்வொரு மாதிரியாகப் பேசுகிறார் என அனைவரும் வைஷ்ணவியை குற்றம் சாட்டினர். இப்போது அவரும் வீட்டை விட்டு வெளியேறி யாருக்கும் தெரியாமல் சீக்ரெட் அறையில் உள்ளார்.

இனி பிரச்னையே வராது என்பது போல் பார்வையாளர்கள் நினைக்க, அந்த நம்பிக்கை பொய்த்துப் போய் இருக்கிறது. இப்போது வந்துள்ள முதல் ப்ரோமோவில், ஐஸ்வர்யா மற்றும் பாலாஜி இடையே சண்டை வெடித்துள்ளது. ஏன் அந்த வார்த்தைய யூஸ் பண்ணுனீங்க, கமல் சாரும் சொன்னார்ல, உங்க மேல மரியாதை இருக்கு' என்கிறார் ஐஸ்வர்யா. 'நீ எனக்கு மரியாதையே குடுக்க வேணாம், பிக்பாஸ் சொல்லட்டும் நீ ஏன் ஆர்டர் பண்ற' என பாலாஜி கேட்க, 'நா ஆர்டர் பண்ணுவேன், ஏன்னா நான் இந்த வீட்டோட தலைவி' என்கிறார் ஐஸ்வர்யா. 

இரண்டாவது ப்ரோமோவில், 'யாராவது ஒருத்தவங்கள நாமினேட் பண்ணி தான ஆகனும், யாரும் உத்தமர் இல்லை' என மஹத் கூற, 'என்னை நானே நாமினேட் பண்ணிக்கிறேன்... நான் இங்க இருக்க விரும்பல... தயவு செய்து கதவை திறந்து விடுங்க' என பாலாஜி சொல்கிறார். அனைவரும் அவரை சமாதானம் செய்ய முயல்கின்றனர். அடுத்த காட்சியில், 'என்ன நாமினேட் பண்ணுங்கண்ணே' என்கிறார் மஹத். 'முடியாது போய்யா' என பாலாஜி கூறுகிறார். அடுத்த காட்சியில் வாடா போடான்னு எல்லாம் பேசாத என்று மகத் சொல்ல, ஷாரிக்கை காட்டுகிறார். பின்னர், 'எல்லாம் என்னால தான் வந்துச்சி' என தலையில் அடித்துக் கொள்கிறார் மஹத். 

அடுத்த பிரமோவில் என்ன காட்டுகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்...

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close